Sunday, October 31, 2010
சுகாதாரத்தில் இந்தியா
Labels:
சுகாதாரத்தில் இந்தியா
at
2:12 PM
| Reactions: |
Friday, October 29, 2010
உளவு பார்க்க 80 பில்லியன் டாலர் செலவழிக்கும் அமெரிக்கா
courtesy.dinamalar
Post Comment
Labels:
பில்லியன் டாலர்,
வடக்கு அமெரிக்காவில்
at
5:23 PM
| Reactions: |
Thursday, October 28, 2010
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
source.dinamalar
Post Comment
Labels:
மதுரை,
ஸ்பான்சர்கள்
at
10:54 AM
| Reactions: |
Tuesday, October 26, 2010
புற்றுநோயை நீக்கவல்லது மஞ்சள் விஞ்ஞானிகள் தகவல்
உலகளவில், புற்றுநோய் மருத்துவர்களும், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கேன்சர் நோய்க்கு மஞ்சள் சார்ந்த பொருட்களின் பயன்பாடு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு மஜும்தார் ஷா கேன்சர் சென்டரின் பயோ-டெக்னாலஜி துறை மருத்துவர்கள், வாய்ப்புற கேன்சர் நோயாளிகளுக்கு, "குர்குமின்' மாத்திரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த ஆய்வு விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. வாய்ப்புற கேன்சர் உள்ள நோயாளிகள் 220 பேர், ஆய்வில் கலந்து கொண்டனர்.அனைவருக்கும், மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட, "குர்குமின்' மாத்திரை (1.2 கிராம்), பல வேளைகளில் சிகிச்சை காலம் முழுவதும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே பலருக்கு வியத்தகு முன்னேற்றங்கள் இருந்தாலும், சிகிச்சை தொடர்ந்து நடந்தது.""முதலில், வெறும் மஞ்சளை குழைத்து நோயாளிகள் வாயில் தடவப்பட்டது. இதற்கு நல்ல பலன் இருந்தாலும், பற்களில் கறை ஏற்பட்டு பெரும் பிரச்னையாகி விட்டது. பின், "குர்குமின்' மாத்திரை கொடுக்கப்பட்டது.
இதுகுறித்த முழுமையான விவரங்கள் டிசம்பர் மாதத்தில் தான் தெரிய வரும்,'' என, ஆராய்ச்சித் தலைவர் மோனி ஆபிரகாம் தெரிவித்தார்."குர்குமின்' மாத்திரையின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் விஞ்ஞானிகளும், கேன்சர் செல்களை அழிப்பதில், "குர்குமின்' மாத்திரை தீவிரமாக செயலாற்றுவதாகக் கூறியுள்ளனர்.தற்போது, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும், "குர்குமின்' மாத்திரைகளை, பாலில் கலந்து உட்கொள்கின்றனர். இந்தியாவில் அதிக ஆய்வுகள் நடந்ததில்லை என்றாலும், இப்போதைய ஆய்வுகளின் முன்னேற்றம் காரணமாக, "குர்குமின்' மாத்திரைகள் கேன்சர் நோய்க்கு பரிந்துரைக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அரை டீ ஸ்பூன் அளவு சாதாரண மஞ்சள் தூளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால், கேன்சர் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Post Comment
Labels:
விஞ்ஞானிகள்
at
3:46 PM
| Reactions: |
Friday, October 8, 2010
உலகின் மிகப்பெரிய ஜீனோம் : அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு
Post Comment
இண்டெர்நெட் பயன்படுத்தும் சீனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
source.dinamalar
Post Comment
Thursday, October 7, 2010
இந்தியாவில் புதிய மொழி
கோரோ என்று அழைக்கப்படும் இந்த மொழி இந்தியாவின் வடகிழக்கில் இமயமலை பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பேசப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மொழி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது இனம் காணப்பட்டுள்ள இந்தக் கோரோ மொழி, அது சார்ந்த மொழிக் குடும்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆய்வு
நேஷனல் ஜியாகரஃபிக் தொலைக்காட்சிக்காக அழிந்து வரும் மொழிகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கான தயாரிப்பில் நிபுணர்கள் ஈடுபட்டிருந்தபோதே மிகச் சிலரால் இந்தக் கோரா மொழி பேசப்படுவது தெரியவந்தது.
அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதிகளில் சிறிதளவே அறியப்பட்டிருந்த வேறு இரண்டு மொழிகளை தேடிச் சென்றபோதுதான், இது வரை பதிவு செய்யப்படாததும், முற்றிலும் மாறுபட்டதுமாக இருந்த இந்தக் கோரோ மொழியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மொழியானது இந்தியாவில் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கிய திபேத்திய பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் கோரோ மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு எந்த மொழியும் இந்த மொழிக் குடும்பத்தில் இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அழிவின் விளிம்பில்...
உலகில் தற்போது அறியப்பட்டுள்ள 6909 மொழிகளில் பாதியளவு அழிந்து போகக் கூடிய நிலையில் உள்ளது என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கோரோ மொழியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.
கோரோ மொழி எழுத்து வடிவில் இல்லை என்பதும் அதை தற்போது 800 முதல் 1200 பேர் வரையிலானவர்களே பேசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source:bbc
Post Comment
லஞ்சத்திற்காக ஒரு இணைய தளம்
"ஜனகிரகா' என்ற அமைப்பின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், www.ipaidabribe.com என்ற முகவரியை திறந்து உள்ளே சென்றால், நான்கு பிரிவுகளின் கீழ் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வாய்ப்பில் லஞ்சம் கொடுத்த அனுபவத்தை பதிவு செய்யலாம். இரண்டாவது பகுதியில், லஞ்சம் கொடுக்காதவர்கள் பதிவு செய்யலாம். மூன்றாவது கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியில், லஞ்சம் கொ டுக்க தேவையில்லை என்றும், நான்காவது பகுதியில், நான் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவிப்பவர்கள், தங்களது கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து ஜனகிரகா அமைப்பின் நிறுவனர் சுவாதி ராமநாதன் கூறியதாவது: பெருகிவிட்ட லஞ்சத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, லஞ்சத்தை வேரறுக்கும் வகையில் இந்த புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இது பண்டமாற்று சாலை போன்று செயல்படும். சர்ச்சுக்கு போய் குற்றத்தை ஒப்புக்கொள்வது போல், லஞ்சம் வாங்கியவரும், லஞ்சம் கொடுத்தவரும் தங்களது கருத்துக்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் சிறு தவறு செய்து, அதிக வெகுமதி பெறுகின்றனர்.அவர்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்ற மமதையில் அவர்கள் அடுத்தடுத்து தவறுகளை தொடர்கின்றனர்.ஆனால் லஞ்சம் பெற்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் உணர்ந்தால், கண்டிப்பாக லஞ்சம் வாங்கும்போது யோசிப்பார்கள். ஆனால் இந்த இணையதளம்அரசு ஊழியர்களையும்,தனி நபர்களையும் குறிவைத்து துவங்கவில்லை.லஞ்சத்தை தடுப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு துவக்கியுள்ளோம். இவ்வாறு சுவாதி ராமநாதன் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி துவக்கப்பட்ட இந்த இணையதளத்தில், இதுவரை 109 நாடுகளிலிருந்து 35,000 பேர் தங்களது லஞ்ச அனுபவ கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் மட்டும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக 535 புகார்களும்,லஞ்சம் கொடுக்காதது குறித்து 100 தகவல்களும் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும்,52 நகரங்களை சேர்ந்தவர்கள் தங்களது லஞ்ச அனுபவத்தை பதிவு செய்துள்ளனர்.லஞ்சம் கொடுத்த கதையை பதிவு செய்ய நீங்களும் புறப்பட்டு விட்டீர்கள்தானே.
source.dinamalar
Post Comment
Labels:
லஞ்சதிற்கா
at
10:34 AM
| Reactions: |
Wednesday, October 6, 2010
கரூரில் எந்திரன் படம் ரிலீஸ் ஆனது

ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் இன்று முதல் கரூரில் இரண்டு திரையங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். உலகம் முழுக்க எந்தரின் படம் வெளியானது. ஆனால், கரூரில் மட்டும் படம் வெளியாகவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ரஜினி நடித்த எந்திரன் படத்தை பார்க்க திருச்சி, ஈரோடு, கோவை என பல ஊர்களுக்கு ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் ரசிகர்கள்.
இந்த நிலையில், கரூரில் இன்று முதல் ரஜினி நடித்த எந்திரன் படம் பசுவை வெற்றி திரையங்கிலும், வெங்கமேடு ஏ-1 திரையங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தியேட்டர்களிலும் ரசிகர்கள் குவிந்து விட்டனர். கட் அவுட் கட்டுவது, பேனர் கட்டுவது, பாலாபிஷேகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது என பிசியாக உள்ளனர்.
படத்தைப் பார்க்க விடிகாலையிலேயே தியேட்டர்களுக்கு வந்து குவியத் தொடங்கி விட்டனர். ஆனால் டிக்கெட் விலைதான் ராக்கெட் வேகத்தில் உள்ளது. பிளாட் ரேட்டாக ரூ. 300 மற்றும் 500 என விற்று செமத்தியாக காசு பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இப்படத்தை திரையிட ரூ ஒரு கோடி -யும், திரைப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் 85 சதவீதம் சன் பிக்சர்ஸ்க்கும், மீது 15 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் என முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதை தியைரங்க உரிமையாளர்கள் மறுக்கவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் கடைசியாக திரையரங்க உரிமையாளர்களுக்கு 30 சதவீதமும், 70 சதவீதம் சனம் பிக்சர்ஸ்க்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 35 சதவீதம் கொடுத்தால் மட்டுமே கட்டுபடியாகும் என திரையங்க உரிமையாளர்கள் கூறியதால் படம் வெளியாகவில்லை. இதனால்தான் கரூரில் படத்தை திரையிடவில்லையாம். தற்போது பஞ்சாயத்து ஒரு வழியாக முடிந்து எந்திரனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளனராம்.
courtesy.narumugai
Post Comment
| Reactions: |
Tuesday, October 5, 2010
கரூரில் எந்திரன் படம் ரிலீஸ் ஆகவில்லை
காரணம், கரூரில் மட்டும் எந்திரன் வெளியாகவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது எந்திரன். ஆனால் கரூரில் மட்டும் தியேட்டர்கள் பக்கம் இது எட்டிப் பார்க்கவில்லை. காரணம், படத்தை திரையிட ரூ ஒரு கோடி-யும், திரைப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் 85 சதவீதம் சன் பிக்சர்ஸ்க்கும், மீதி 15 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை தியைரங்க உரிமையாளர்கள் மறுக்கவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
கடைசியாக திரையரங்க உரிமையாளர்களுக்கு 30 சதவீதமும், 70 சதவீதம் சனம் பிக்சர்ஸ்க்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 35 சதவீதம் கொடுத்தால் மட்டுமே கட்டுபடியாகும் என திரையங்க உரிமையாளர்கள் திட்வட்டமாக கூறி விட்டனர். ஆனால் அதை சன் பிக்சர்ஸ் ஏற்கவில்லையாம். இதனால் படம் வெளியாகவில்லை.
காசே குறியாக சன் டிவி இருப்பதால் ரசிகர்கள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கரூர் அருகே உள்ள குளித்தலை, சிவகிரி, கொடுமுடி, யூ. குளத்துபாளையம், வேலூர் ஆகிய குக்கிராமங்களில் வெளியிட்டுள்ள எந்திரன் திரையங்களுக்கு ரசிகர்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், அங்கு போனால் டிக்கெட் விலை விண்ணை முட்டுகிறதாம். அந்த திரையரங்குகளில் இது வரை ஒவ்வொரு படத்திற்கும் அதிகபட்சமாக ரூ 20 மட்டுமே விற்பனையான டிக்கெட் எந்திரன் ஸ்பெஷல் விலையாக ரூ 100 முதல் ரூ 150 வரை விற்க்கப்படுகின்றது.
இந்தத் தியேட்டர்களுக்கு மிகவும் வசதியவற்றவர்கள்தான் வருவார்கள். ஆனால் விலையைப் பார்த்து அவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனராம். இருந்தாலும் தலைவர் படமாச்சே என்று மனதை தேற்றிக் கொண்டு அதிக கட்டணத்தைக் கொடுத்து படத்தைப் பார்த்துச் செல்கின்றனராம்.
courtesy.thatstamil
Post Comment
Labels:
உலகம்,
கரூரில்,
கரூரில் மட்டும் எந்திரன்,
கரூர்வாசிகள்
at
1:46 PM
| Reactions: |
Friday, October 1, 2010
இந்தியாவில் தனது அலுவலகத்தை திறந்தது பேஸ்புக்
Post Comment
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.
1. நான் ஒரு படிப்பை முடிவெடுத்துவிட்டேன்
1.1. நான் என் பெற்றோரின் அறிவுரை, வற்புறுத்தலால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்
உங்கள் குழந்தைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக்கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்கமுடியும். ஒருவருக்குச் சதுரங்கத்தில் ஆர்வம் இருக்கிறது, கிரிக்கெட்டில் இல்லை என்றால் அவர்களைக் கிரிக்கெட் விளையாடும்படி வற்புறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக விளையாடுவார், தன்னுடைய லட்சியத்தை எண்ணி அல்ல!
உங்கள் குழந்தைகளுடன் இதுபற்றிப் பேசுங்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அவர்களுக்கான படிப்பை முடிவு செய்யவேண்டும்
சில பெற்றோர், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறவிட்ட படிப்புகளைத் தங்கள் பிள்ளைகள்மீது திணிக்கிறார்கள். அவர்கள் மூலம் அதைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். மேஸ்ட்ரோ இளையராஜாவின் தந்தை அவரை எஞ்சினியரிங் அல்லது சி.ஏ. படிக்க வற்புறுத்தியிருந்தால், நாம் ஒரு மிகச் சிறந்த இசைஞானியை இழந்திருப்போம். உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைப்பதைவிடச் சிறந்த திறமைசாலிகளாக இருக்கலாம்.
மாணவர்களும் இதுபற்றித் தங்கள் பெற்றோரிடம் பேசவேண்டும். எந்த அடிப்படையில் அவர்கள் இந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துகளைச் சொல்லவேண்டும்.
பெற்றோர் உணரவேண்டிய ஒரு விசயம். இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு வருங்காலத்தில் தவறானதாக அமைந்துவிட்டால், அதற்காக உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்லக்கூடாது. ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பேசி ஒரு தீர்வைக் கண்டறியவேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதத்தில் திறமைசாலியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தந்தை அவரை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்கிறார். அந்த ஆசிரியர் பயிற்சி அனுமதி பெறாதது, நீதிமன்றம் அதனை மூடிவிடுகிறது. அந்தத் தந்தைக்கு மிகவும் வருத்தம். ஆனால், இனிமேல் எதுவும் செய்யமுடியாது. ஆகவே, அந்த மகன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தையைக் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தான். உங்களுக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஒருவேளை நீங்கள் மறுபடி பிறந்தாலும் கூட மீண்டும் இதே நபராகப் பிறக்கமுடியாது. ஆகவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
நான் என் உறவினர்கள்/நண்பர்களைப் பார்த்துப் பேசி ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
சின்ன வயதில் நான் ஒரு ஐஸ் க்ரீம் விற்பனையாளனாக விரும்பினேன். அப்போதுதானே நான் நாள்முழுவதும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியும்! நான் ஓர் எஞ்சின் டிரைவரைப் பார்த்துப் பரவசப்பட்டேன். அவரைப்போலவே நான் எப்போது பயணம் செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஒருவேளை நான் இந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்திருந்தால் எனக்கு எல்லாப் பலன்களும் கிடைத்திருக்குமா?
உங்கள் நண்பரின் தந்தை தன் மகன் ஒரு படிப்பை முடித்தபிறகு அதே துறையில் அவனுக்கு வேலை கிடைக்க உதவி செய்வாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் படிப்பை முடித்தபிறகு நீங்களேதான் சொந்தக் காலில் நிற்கவேண்டியிருக்கும்.
உங்கள் நண்பர், உறவினரிடம் பேசும்போது அவர்கள் எந்தக் காரணத்துக்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று விவாதியுங்கள். அந்தக் காரணம் உங்களுக்குப் பொருந்துமா என்று யோசியுங்கள்.
ஒரு வீட்டில் அம்மா, அப்பா மருத்துவர்கள். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனையும் இருக்கிறது. ஆகவே அவர்கள் தங்கள் பிள்ளைகளும் மருத்துவம் படிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். படித்து முடித்தபிறகு அந்தப் பிள்ளைகள் வேலை தேடுவதைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் அது உங்களுக்குப் பொருந்துமா? யோசித்துக்கொள்ளுங்கள்
1.2. நான் சமீபத்திய சந்தை ஏற்றதாழ்வுகள், நிகழ்வுகளின் அடிப்படையில், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியாது. இதனால் நீங்கள் திறமைக்குறைவு காரணமாக வேலையை இழக்க நேரலாம். அல்லது வாழ்நாள் முழுவதும் சலிப்பாக உணர்வீர்கள். ஒரே இடத்தில் தேங்கிப்போவீர்கள். அதேசமயம், அந்த வேலை உங்களுக்குப் பிடித்திருந்தால் விளையாட்டு மைதானத்துக்குச் செல்வதுபோன்ற உற்சாகத்தோடு அலுவலகத்துக்குக் கிளம்பிச் செல்வீர்கள்.
ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சம்பளம் மட்டும் சரியான அளவுகோல் அல்ல. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி (தகவல் தொழில்நுட்பம்), நாளைக்கு என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணி/வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உண்டு. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சம்பள விகிதமும் மாறும். இன்றைக்கு இஅஇ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்இ அணடிட்ச்வடிணிண மற்ற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம்இ ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாக நின்றுவிடும்
1.3. அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்கிற நோக்கத்துடன் நான் என்னுடைய படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
உங்களுக்குக் குறுகிய காலக் கண்ணோட்டமே இருக்கக்கூடாது. உங்களால் நிறைய மதிப்பெண் எடுக்கமுடியும் என்பதால் மட்டும் உங்களுக்கு ஒரு துறையில் ஆர்வம் வந்துவிடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் நீங்கள் நன்கு மனப்பாடம் செய்யக்கூடியவராக இருக்கலாம். அதனால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால் நீங்கள் செய்யப்போகும் வேலை மிகவும் கடினமாக அமைந்துவிடலாம். நான் பல மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கம்ப்யூட்டர் சைன்ஸை விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள். எப்படியோ மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர்கள் முழுத்தோல்வி அடைகிறார்கள். எனக்குத் தெரிந்த பல கம்ப்யூட்டர் சைன்ஸ் மாணவர்களுக்கு எளிய ப்ரொக்ராம்கள்கூட எழுதத் தெரிவதில்லை. ஆகவே அவர்கள் அந்த வேலைக்குத் தகுதியற்றவர்களாகிவிடுகிறார்கள்.
நீங்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தோடு படிக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் பணியில் நன்றாகச் செயல்படமுடியும்.
மதிப்பெண் பெறுவது உங்களுடைய பணி வாழ்க்கைக்கு நல்ல மைல் கல் ஆகாது. +2-வில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் சேர்வதற்கு அது பயன்படலாம். ஆனால் நீங்கள் கல்லூரிக்குச் செல்கிறபோது உங்களுடைய மதிப்பெண்கள் மட்டும் உங்களுக்குப் பட்டம் வாங்கித் தந்துவிடாது. இப்போதெல்லாம் நிறுவனங்கள் உங்களுடைய தகவல் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை, தலைமைப் பண்புகள், பிரச்னைகளைத் தீர்க்கும் திறமை, அணியில் சேர்ந்து பணிபுரியும் திறமை என்று பல விசயங்களைப் பார்க்கிறார்கள். எதார்த்த வாழ்க்கையில்இ தங்கப் பதக்கமும் முதல் வகுப்பும் நல்ல மதிப்பெண்கள்மட்டும் வாங்கியவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மாணவர் பள்ளிஇ கல்லூரியில் சுமாராகப் படிக்கிறவராக இருந்தால்கூட, அதோடு பல கூடுதல் ஆர்வங்களை ஏற்படுத்திக்கொண்டு நன்கு பேசக்கூடியவராக பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் விசயங்களை அறிந்து வைத்திருக்கிறவராகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு இதுபோன்ற கௌரவங்களைப் பெறுகிறார்கள்.
படிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால் வாழ்க்கை, வேலை என்பது எதார்த்தமான விசயம். அதை மறந்துவிடாதீர்கள்.
1.4 என் பெற்றோரால் மற்ற படிப்புகளுக்குச் செலவழிக்கமுடியாது. ஆகவே எங்கள் வசதிக்கு இணங்க நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
இப்போதெல்லாம் கல்விக் கடன் மிகவும் சகஜமாகிவிட்டது. ஆகவே உங்கள் பெற்றோரால் செலவழிக்கமுடியாது என்று எண்ணி ஒரு குறிப்பிட்ட படிப்பைத் தவறவிடாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசியுங்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தொகை கல்விக் கடனாலும் பெறமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமானால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி நீங்கள் நன்றாக யோசித்துக்கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் கனவைப் பின்னர் வேறொரு வாய்ப்பு வரும்போது நிஜமாக்கிக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும், திரு.அப்துல் கலாம் அவர்கள் ஒரு போர் விமானியாகவேண்டும் என்றுதான் விரும்பினார். ஆனால் பல காரணங்களால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அப்போதும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஒரு சிறந்த ராக்கெட் விஞ்ஞானியாக உருவானார். படிப்படியாக முன்னேறி இந்தியாவின் ஜனாதிபதியானார். கடைசியாக அந்த ஜனாதிபதி பதவியில் இருந்தபடி அவர் ஒரு போர் விமானத்தில் பறந்தார்.
நீங்கள் மிகவும் எதார்த்தமாகச் சிந்திக்கிறீர்கள். நல்ல விசயம்!
நீங்கள் கல்விக் கடனுக்கு முயற்சி செய்தீர்களா? இன்றைக்குக் கல்வி என்பது உங்களுடைய உரிமை. ஒரு குறிப்பிட்ட படிப்புக்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்றுவிட்டால் போதும். செலவுகளைச் சமாளிக்கக் கடன்கள் உதவும்.
ஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் திறமைக்கு வானமே எல்லை. ஒருவேளை நீங்கள் விரும்பும் விசயம் இப்போது உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் அதோடு உலகம் முடிந்துவிடாது. உங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை அணுகுங்கள் (கூடுதல் தகவல்களுக்கு எங்களின் "இலக்கு நிர்ணயித்தல்' வழிகாட்டியை அணுகவும்).
ஒருவர் அமெரிக்காவில் படிக்க விரும்பினார். ஆனால் அவருடைய குடும்ப நிலைமையால் அது முடியவில்லை. அவர் மாற்று வழிகளைத் தேடினார் B.Sc., Computer Science படிக்கச் சேர்ந்தார். அதை முடித்துவிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சில வருடங்கள் இந்தியாவில் வேலை பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கே மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்தார். தன்னுடைய நிறுவனத்தின் உதவித்தொகை பெற்றுப் படிப்பைப் பூர்த்தி செய்தார். இங்கே அவர் முதன்முறை அமெரிக்கா செல்ல முடியாததற்காகவும் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் சந்தோசப்படவேண்டும்.
1.5 என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தத் துறையில் பெரிய பதவியில் உள்ளார். அவர் தன்னுடைய நிறுவனத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். ஆகவே நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்
வாழ்க்கையில் இப்படி நடக்குமோ, அப்படி நடந்துவிடுமோ என்பது போன்ற குழப்பக் கேள்விகளுக்கு இடமே இல்லை. உங்கள் உறவினர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வார் என்பது என்ன நிச்சயம்? அப்படியே இருந்தாலும், நீங்கள் படிப்பை முடிக்கும் நேரத்தில் அவர் உங்களை வேலைக்குச் சேர்க்கும் அளவு செல்வாக்குடன் இருப்பார் என்பது யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் உங்களுக்கு வேலை கொடுத்தாலும்கூட நீங்கள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் அந்தப் பணியில் தொடரமுடியாது. ஆகவே உங்களுக்குப் பிடித்த வேலையில் சேர்கிற வாய்ப்பை வழங்கும் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
எங்களுடைய ஆலோசனை இந்த விசயத்துக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுங்கள். இன்றைக்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வேலை காலியிடங்களைப் பூர்த்தி செய்யச் சிறந்த திறமையாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய உறவினர் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர் என்பது உங்களுக்குத் தெரியாது. தவிர நீங்கள் உங்கள் திறமைமீது நம்பிக்கை வைக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கம் சவால்களை எதிர்கொள்வது. அவற்றை ஒவ்வொன்றாகச் சாமாளிப்பது. இதுமாதிரி நேரத்தில்தான் நாம் பலமாகவேண்டும். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு சவால்களைச் சந்திக்கவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் பழகவேண்டும்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.நாராயணமூர்த்தி ஒரு பேட்டியில் சொன்னது, "என்னுடைய பிள்ளைகளுக்கு நானாக இன்ஃபோசிஸில் வேலை தரப்போவதில்லை. அவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு முறைப்படி எங்கள் நிறுவனத்தின் செயல்முறைகளைப் பின்பற்றித் தங்களுக்கான பதவியைப் பெறவேண்டும்.'
ஆகவே, நீங்கள் உங்களுக்கான படிப்பை எப்படித் தேர்வு செய்யவேண்டுமென்றால் : நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இதற்குத் தேவையான சிறப்புத் திறமைகளும், இந்தத் துறையில் ஆர்வமும் எனக்குள்ளது. என்னால் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆகவே, ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அதற்குத் திருப்தியான பதில் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அ. இந்தத் துறைபற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்களா?
ஆ. இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்துகொண்டீர்களா? உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா? இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இ. இந்தத் துறை உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வேலையைக் கொடுக்குமா? உதாரணமாக, உங்களுக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் உச்சத்தை எட்டுவது மிகவும் சிரமம். அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆகவே, இப்போதே முடிவுசெய்துகொள்ளுங்கள். இந்த ஆர்வத்துக்காக குடும்பத்திற்கான வருமானத்தைப் பணயமாக வைக்க உங்களால் முடியுமா? வேண்டுமானால் நீங்கள் இதைப் பொழுதுபோக்காக ஏற்றுக்கொள்ளலாம். பிறகு ஒரு வேலையில் சேர்ந்துகொண்டு இசைப்பணிகளில் ஆர்வம் செலுத்தலாம்.
நடிகர் விவேக்கின் கதை : அவர் ஒரு நடிகராகவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் திரைப்பட வாய்ப்பு வரும் வரை நேரத்தை வீணடிக்கவில்லை. அக்கவுன்ட்ஸ் துறையில் பணியாற்றியபடி வாய்ப்புகளைத் தேடினார். இன்றைக்கு, உங்களுக்கே தெரியும் அவர் தமிழ்த் திரைப்படத்துறையில் அதிகம் விரும்பப்படுகிற ஒரு நகைச்சுவை நடிகராக உள்ளார்.
ஈ. இந்தப் படிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? அதன்பிறகு என்னவெல்லாம் படிக்கவேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உ. M.B.B.S-ஐ பொறுத்தவரை நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுவரை மேல்படிப்புக்குச் செல்லவேண்டும். அதற்குப் பத்து வருடங்கள்வரை ஆகலாம். இந்தப் படிப்பை முடித்தபிறகு உங்கள் பணி வாழ்க்கை உறுதிப்பட மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, சட்டப்படிப்பை எடுத்துக்கொண்டால், அதைப் படித்து முடித்தவர்கள் இன்னொரு பெரிய வழக்கறிஞர் அல்லது நிறுவனத்தின்கீழ் பணிபுரிந்து பயிற்சி பெறவேண்டும். அதன்பிறகுதான் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யமுடியும்.
ஊ. இந்தத் துறையில் உள்ள தொழிற்சார்ந்த ஆபத்துகளைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை உங்களுடைய இயல்புடன் பொருந்திப்போகிறதா என்று யோசித்துக்கொண்டீர்களா?
உதாரணமாக, நீங்கள் எப்போதும் வீட்டில் இருப்பதையே விரும்புகிறவர் என்றால், Marine Engineering படிப்பு/வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவேண்டும்.
ஒருவேளை நீங்கள் வருங்காலத்தில் உங்களுடைய தந்தை/குடும்பத் தொழிலைச் செய்யலாம் என்று முடிவுசெய்திருந்தால் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் படிப்பு அப்போது உங்களுக்கு உதவியாக இருக்குமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுடைய நிலைமை இப்படி இருந்தால்!
நான் இன்னும் என்னுடைய படிப்பைத் தேர்வு செய்யவில்லை எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் பெற்றோர் என்னை ஒரு படிப்பில் சேர்ப்பார்கள். எனக்கு எது தேவை என்று அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சில சிறப்புத் திறமைகளோடுதான் பிறக்கிறார்கள். உங்களுடைய சிறப்புத் திறன்கள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த ஆர்வத்தை நீங்கள் தேடத் தொடங்கலாம். அது கிடைக்கும்வரை நிறுத்தாதீர்கள். இப்போதைக்கு உங்களுக்கு நல்ல வழிகாட்டக்கூடியவர்களை அடையாளம் காணுங்கள்! பின்பற்றுங்கள்!!
source.adhikaalai
Post Comment
Labels:
எங்கு படிக்கலாம்?,
என்ன படிக்கலாம்?
at
1:21 PM
| Reactions: |
அயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக இந்துக்களும் முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து மொதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் பட்டியல்.
1528: இந்துக்களின் மிக முக்கியமான கடவுளான ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களில் ஒரு சாராரால் கருதப்படும் இடத்தில் மசூதி கட்டப்படுகிறது.
1853: இந்த இடத்தில் முதல் முறையாக மதக் கலவரம் ஏற்படுகிறது.
1859: இந்த பிரச்சனையில் தலையிட்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் மசூதியின் உள் மண்டபத்தை முஸ்லீம்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தவும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடுசெய்யவும் வழிவகைசெய்தனர். இதை அமல் படுத்தும் வகையில் அங்கே வேலியை அவர்கள் அமைத்தனர்.
1949: ராமர் சிலைகள் மசூதிக்குள் கொண்டுவந்து வைக்கப்படுகின்றன. இதை இந்துக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை முஸ்லீம்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பும் சிவில் வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கின்றனர். இவ்விடயத்தில் தலையிட்ட இந்திய அரசு சம்மந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து அந்த இடத்தின் கதவுகளை மூடுகிறது.
1984: இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே விஸ்வ இந்து பரிஷத் இந்த இடத்தை விடுவித்து அங்கு இராமருக்கு கோயிலை கட்டப் போவதாக அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல் கே அத்வானி இராமர் கோயில் கட்டுவதற்காக நாடு தழுவிய பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
1986: மாவட்ட நீதிபதி சர்சைக்குரிய கட்டிடத்தின் பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் அங்கு இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டார். இதற்கு எதிர்வினையாக முஸ்லீம்கள் பாப்ரி மசூதி நடவடிக்கை குழுவை ஆரம்பித்தனர்.
1989: விஸ்வ இந்து பரிஷத் சர்ச்சைக்குரிய மசூதிக்கு அடுத்த பகுதியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நட்டது.
1990: வி எச் பியினர் மசூதியின் சில பகுதிகளை நாசம் செய்தனர். இதன் பிறகு அப்போதைய பிரமர் சந்திரசேகர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
1991: அயோத்தி அமைந்துள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஐனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.
1992: பாரதீய ஜனதா, விஸ்வ இந்து பரிஷ்த், சிவசேனா போன்ற அமைப்புக்களின் தொண்டர்களால் மசூதி இடித்துத்த தள்ளப்படுகிறது. இதையெட்டி எழுந்த மத மோதல்களில் இரண்டாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
1998: பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி இந்திய நடுவணரசில் ஆட்சியைப் பிடித்த நிலையில மீண்டும் ராமர் கோயில் பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷ்த் கையெலெடுக்கிறது. அன்றைய பிரதமர் வாஜ்பாய் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பனருமான சத்ருகன் சின்ஹா தலைமையில் அயோத்யா பிரிவை ஆரம்பிக்கிறார்.
2002: உத்திரப் பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் நடக்கும் போது - அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து உறுதியான உத்திரவாதங்களை அளிக்க பாரதீய ஜனதா கட்சி மறுக்கிறது.
2003: இந்த வழக்கில் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் வாஜ்பாய் அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்கிறார். நீதிமன்ற உத்திரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் வாஜ்பாய் நம்பிக்கை வெளியிட்டார். மசூதி இடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் தீர்பளிக்கிறது. இருந்தும் அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.
2005: சர்ச்சைக்குரிய இடத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் தாக்குகின்றனர். பாதுகாப்புப் படையினர் திரும்ப தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2009: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபர்ஹான் கமிஷனின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. மசூதி உடைக்கப்பட்டதற்காக பாஜக தலைவர்கள் மீது அது குற்றம்சாட்டுகிறது.
2010: பல ஆண்டுகால சட்ட சிக்கல்களுக்குப் பிறகு அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.
"அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும், நேற்று லக்னோவை நோக்கியே இருந்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் 20க்கும் மேற்பட்டோர், கோர்ட்டிலிருந்து வெளியே வந்து லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் பேட்டியளித்தனர். பரபரப்பும், பதட்டமாக இருந்த சூழ்நிலையில் வக்கீல்கள் தாங்கள் எடுத்துரைத்த வாதங்களை விளக்கி, அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை கூறும்போதே, தீர்ப்பின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.
இந்த தீர்ப்பில் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகளின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் சன்னி வக்பு போர்டும், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன. நாடு முழுவதும் அமைதி காக்க பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் அமைதி வாழ்க்கைக்கு உதவ ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளன.
courtesy.bbc,dinamalar
Post Comment
Labels:
அயோத்தி,
அழகான மசூதிகள்,
நீதிமன்றத் தீர்ப்பு,
பாபர் மசூதி இடிப்பு,
ராமர்
at
11:03 AM
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)
POPULAR
-
தமிழ் குழந்தை பெயர்கள் தமிழ் குழந்தை பெயர்கள்
-
CARROTS -EYES WALNUT -BRAIN TOMATO -HEART GRAPES -LUNGS CHEESE -BONES GINGER -STOMACH BANANA -(SMILE) DEPRESSION MUSHROOM -EAR BROCC...
-
இ ன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்கள். பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறையவே பணம் செலவாகிறது...
-
பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். ...
-
ஒரு நாள் நான் பேருந்தில் ஏறினேன் , அப்போது நடத்துனர் என்னிடம் வந்து டிக்கெட் கேட்டார் , நான் என் கையில் வைத்து இருந்த CD யை இரு...
-
நாம வீட்ல இன்டர்நெட் இணைப்பு வச்சு இருந்தால் , நாம வீடல் இருந்தபடியே நாம சம்பாதிக்க ஒரு இணையதளம் ஒன்று என் நண்பர் மூலமாக எனக்கு தெரிய வந்தது...
-
இணையத்துல எது வேண்டும் என்றாலும் கிடைக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி , விசில் அடிப்பது எப்படி? How To Whistle With Your Fingers ...
-
தயவு செய்து சவுண்ட் வச்சு பாருங்க ,
-
இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல். இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்...

























