சுகாதாரத்தில் இந்தியா

மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பக்கத்து நாடான சீன நம்மை விட பல மடங்கு முன்னேறியுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக உலகம் முழுவதும் 110 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. கல்வி, சுகாதாரம், சமூக நிலைமை உட்பட்டவைகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதில் இந்தியா கல்வியில் 89 புள்ளிகளும், சுகாதாரத்தில் 95 புள்ளிகளும், சமூக நிலைமையில் 105 புள்ளிகளும் பெற்றன. புள்ளிகளின் அடிப் படை யில் இந்தியா இந்த ஆண்டு 88-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 78-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறுதலாக இந்தியாவில் பொருளாதார நிலையில் 44 புள்ளிகளும், ஆட்சி அமைப்பு முறையில் 41 புள்ளிகளும் பெற்றுள்ளன.சீனா அனைத்து நிலைகளிலும் வ<லுவான புள்ளிகள் பெற்று 58-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்கள் முறையே நார்வே(1), டென்மார்க்(2), பின்லாந்து(3), ஆஸ்திரேலிய(4), நியூசிலாந்து(5) ஆகிய இடங்களை பெற்றுள்ளன. அதேசமயம் ஜிம்பாப்வே(110), பாகிஸ்தான்(109), மத்திய ஆசிய ரீபப்ளிக் நாடுகள்(108), எத்தியோப்பியா,(107), மற்றும் நைஜீரியா(106) புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

சூரியப்பிரகாஷ் said...

நண்பா,
நானும் கரூர்தான்.........

நானும் கிறுக்கறேன்...
suriyaprakashs.blogspot.com
படிச்சிட்டு பைத்தியம் பிடிச்சா கம்பெனி பொறுப்பல்ல..........