கரூரில் எந்திரன் படம் ரிலீஸ் ஆனதுரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் இன்று முதல் கரூரில் இரண்டு திரையங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். உலகம் முழுக்க எந்தரின் படம் வெளியானது. ஆனால், கரூரில் மட்டும் படம் வெளியாகவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ரஜினி நடித்த எந்திரன் படத்தை பார்க்க திருச்சி, ஈரோடு, கோவை என பல ஊர்களுக்கு ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் ரசிகர்கள்.

இந்த நிலையில், கரூரில் இன்று முதல் ரஜினி நடித்த எந்திரன் படம் பசுவை வெற்றி திரையங்கிலும், வெங்கமேடு ஏ-1 திரையங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தியேட்டர்களிலும் ரசிகர்கள் குவிந்து விட்டனர். கட் அவுட் கட்டுவது, பேனர் கட்டுவது, பாலாபிஷேகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது என பிசியாக உள்ளனர்.

படத்தைப் பார்க்க விடிகாலையிலேயே தியேட்டர்களுக்கு வந்து குவியத் தொடங்கி விட்டனர். ஆனால் டிக்கெட் விலைதான் ராக்கெட் வேகத்தில் உள்ளது. பிளாட் ரேட்டாக ரூ. 300 மற்றும் 500 என விற்று செமத்தியாக காசு பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

இப்படத்தை திரையிட ரூ ஒரு கோடி -யும், திரைப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் 85 சதவீதம் சன் பிக்சர்ஸ்க்கும், மீது 15 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் என முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதை தியைரங்க உரிமையாளர்கள் மறுக்கவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் கடைசியாக திரையரங்க உரிமையாளர்களுக்கு 30 சதவீதமும், 70 சதவீதம் சனம் பிக்சர்ஸ்க்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 35 சதவீதம் கொடுத்தால் மட்டுமே கட்டுபடியாகும் என திரையங்க உரிமையாளர்கள் கூறியதால் படம் வெளியாகவில்லை. இதனால்தான் கரூரில் படத்தை திரையிடவில்லையாம். தற்போது பஞ்சாயத்து ஒரு வழியாக முடிந்து எந்திரனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளனராம்.

courtesy.narumugai

1 comment:

Anonymous said...

இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!