உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளை உளவுபார்ப்பதற்காக அமெரிக்கா ஆண்டு தோறும் 80 பில்லியன் டாலர் செலவிடுவதாக தெரிவித்துள்ளது. முதன்முறையாக இத்தகவலை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. இதில் 27 பில்லியன் ராணுவத்தினருக்கும், 53.1 பில்லியன் சிஐஏ மற்றும் மற்ற உளவு நிறுவனத்திற்கும் அளித்து வந்துள்ளது என அரசின் தகவலை மேற்கோள் காட்டி சிபிஎஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மையத்தின் புதிய இயக்குனராக பதவியேற்றுள்ள ஜேம்ஸ் கிளாப்பர் செனட்டின் ஒப்புதலோடு இதனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு அமைப்பின் கடந்த தலைவர் அட்மிரல் டென்னிஸ் பிளேர் பதவி வகித்த காலகட்டத்தில் உளவு வேலைக்கு 75 பில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் உளவுத்துறை அமைப்பை சேர்ந்த பெண் அதிகாரியான டயனா பெனிஸ்டின் இந்த தொகை உறுதி செய்ய முடியாதது.காரணம் என்னவெனில் கடந்த 2001 செப்டம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு பின்னர் இத்தொகையின் மதிப்பு அதிகரித்துள்ளது என கூறினார்.
courtesy.dinamalar
0 Comments