தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் சராசரியாக 77.8 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதமும், குறைந்த பட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீத ஓட்டுக்களும் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபைக்கு கடந்த 13ம் தேதி நடந்த தேர்தலில், மாவட்ட வாரியாக பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுதவிர, சில ஓட்டுச்சாவடிகளில் நடக்க உள்ள மறுதேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். மேலும், ஓட்டுப்பதிவில் பூத் வாரியாக தேர்தல் கமிஷன் நேற்று ஆய்வு செய்தது. இதில், சந்தேகப்படும் வகையில் ஏதாவது ஓட்டுச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் அளவுக்கு அதிகமான ஓட்டு பதிவாகி இருத்தல் போன்ற விவரங்களும், வீடியோவில் பதிவானகாட்சிகளும் சரிபார்க்கப்பட்டன. இதன்படி சில பூத்களுக்கு மறுதேர்தல் அறிவிக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்.
தற்போதைய நிலையில், தமிழகம் முழுவதும் 77.8 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இதில், அதிகபட்சமாக கரூர் மாவட்டம் 86 சதவீதம் பதிவாகி முன்னிலையில் உள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. எல்லா மாவட்டங்களிலும் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தனி அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறையைச் சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. வரும் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை துவங்கும் போதுதான், வேட்பாளர்களின் ஏஜன்டுகள் முன்னிலையில், அறைகளின் சீல் அகற்றப்பட்டு ஓட்டுஇயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்படும்.
மாவட்ட வாரியாக நடந்த ஓட்டுப்பதிவு விவரம்:
திருவள்ளூர் - 76.8
காஞ்சீபுரம் - 75.1
வேலூர் - 70.31
கிருஷ்ணகிரி - 75
தர்மபுரி - 81
திருவண்ணாமலை- 78
விழுப்புரம் - 80
சேலம் - 82
நாமக்கல் - 78.3
ஈரோடு - 80.5
திருப்பூர் - 77.6
நீலகிரி - 71.6
கோவை - 74
திண்டுக்கல் - 81
கரூர் - 86
திருச்சி - 78.5
பெரம்பலூர் - 82
அரியலூர் - 84.2
கடலூர் - 80.6
நாகை - 81
திருவாரூர் - 78.4
தஞ்சை - 79.7
புதுக்கோட்டை - 78.9
சிவகங்கை - 75.6
மதுரை - 77
தேனி - 79.3
விருதுநகர் - 80.96
ராமநாதபுரம் - 71.9
தூத்துக்குடி - 75.2
நெல்லை - 73
கன்னியாகுமரி - 68.1
0 Comments