அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பாலோ ஆல்டோ நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து சர்வதேச செயல்பாடுகளை கவனித்து வந்த பேஸ்புக் நிறுவனம், இந்தியாவின் ஐதராபாத் நகரில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி, ஆனால் இப்போதோ பேஸபுக் அக்கவுண்ட் இல்லாதவனிடம் நட்பு பாராட்ட வேண்டாம் என்ற நிலைக்கு சர்வதேச அளவில் மக்களை ஆட்கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சி, மற்ற போட்டியாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், தங்களுக்கு போட்டியாக பேஸ்புக் இல்லை என்று கூறிவரும் நிலையிலும், ஆனால் சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களைப் பொறுத்தவரை, பேஸ்புக்கிற்கு நிகர் பேஸ்புக்கே ஆகும். இந்தியாவில் அலுவலகம் அமைக்கும் பொருட்டு, பேஸ்புக் குழு, சமீபத்தில இந்தியாவில் நேர்காணல் நடத்தி திறமையுள்ள ஆட்களை தேர்வு செய்து, இப்போது ஐதராபாத்தில் அலுவலகம் திறந்துள்ளது. ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில், ஆன்லைன் ஆபரேசன் இயக்குனர் மற்றும் அலுவலக உயர் அதிகாரியாக கிருத்திகா ரெட்டியும், யூசர் ஆபரசேன் பிரிவின் இயக்குனராக மனோஜ் வர்கீசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments