உலகின் மிகப்பெரிய ஜீனோம் : அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய ஜீனோமை, லண்டன் கியூ கார்டனில் ஆராய்ச்சி செய்து வரும் தாவரவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தாங்கள், பல்வேறு வகை தாவரங்களில், ஜீனோம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இதில் பாரீஸ் ஜபோனிகா என்ற தாவரத்தின் ஜீனோம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், தாங்கள் அதன் அற்புதத்தை உணர்ந்ததாகவும், தற்போதைய நிலையில், உலகின் மிகப்பெரிய ஜீனோம் இதுதான் என்று தாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது : இந்த பாரீஸ் ஜபோனிகா தாவரத்தின் ஜீனோம், மனித ஜீனோமை விட 50 மடங்கு நீளமானது என்றும், இந்த தாவரத்தின் ஜீனோம், மார்பிள்டு லங்பிஷ்ஷை போட்டி போடும் வகையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: