ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன், எந்திரன்தான். சன் டிவியைத் திறந்தால் போதும் எந்திரன் புராணமாகத்தான் இருக்கிறது. ஆனால் கரூர்வாசிகள் மட்டும் எந்திரனை தரிசிக்க முடியாமல் ரொம்ப சிரமப்படுகின்றனராம்.
காரணம், கரூரில் மட்டும் எந்திரன் வெளியாகவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது எந்திரன். ஆனால் கரூரில் மட்டும் தியேட்டர்கள் பக்கம் இது எட்டிப் பார்க்கவில்லை. காரணம், படத்தை திரையிட ரூ ஒரு கோடி-யும், திரைப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் 85 சதவீதம் சன் பிக்சர்ஸ்க்கும், மீதி 15 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை தியைரங்க உரிமையாளர்கள் மறுக்கவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
கடைசியாக திரையரங்க உரிமையாளர்களுக்கு 30 சதவீதமும், 70 சதவீதம் சனம் பிக்சர்ஸ்க்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 35 சதவீதம் கொடுத்தால் மட்டுமே கட்டுபடியாகும் என திரையங்க உரிமையாளர்கள் திட்வட்டமாக கூறி விட்டனர். ஆனால் அதை சன் பிக்சர்ஸ் ஏற்கவில்லையாம். இதனால் படம் வெளியாகவில்லை.
காசே குறியாக சன் டிவி இருப்பதால் ரசிகர்கள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கரூர் அருகே உள்ள குளித்தலை, சிவகிரி, கொடுமுடி, யூ. குளத்துபாளையம், வேலூர் ஆகிய குக்கிராமங்களில் வெளியிட்டுள்ள எந்திரன் திரையங்களுக்கு ரசிகர்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், அங்கு போனால் டிக்கெட் விலை விண்ணை முட்டுகிறதாம். அந்த திரையரங்குகளில் இது வரை ஒவ்வொரு படத்திற்கும் அதிகபட்சமாக ரூ 20 மட்டுமே விற்பனையான டிக்கெட் எந்திரன் ஸ்பெஷல் விலையாக ரூ 100 முதல் ரூ 150 வரை விற்க்கப்படுகின்றது.
இந்தத் தியேட்டர்களுக்கு மிகவும் வசதியவற்றவர்கள்தான் வருவார்கள். ஆனால் விலையைப் பார்த்து அவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனராம். இருந்தாலும் தலைவர் படமாச்சே என்று மனதை தேற்றிக் கொண்டு அதிக கட்டணத்தைக் கொடுத்து படத்தைப் பார்த்துச் செல்கின்றனராம்.
courtesy.thatstamil
0 Comments