சீனாவில் இண்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜூன்மாத கணக்கெடுப்பின்படி 420மில்லியன்மக்கள் இண்டெர் நெட்டை பயன்படுத்தியுள்ளனர் இது கடந்த ஆண்டு டிசம்பர் கணகெடுப்பை காட்டிலும் 36 மில்லியன் அதிகமாகும்.இண்டெர்நெட் பயன்பாடுகள் அனைத்தும் செல் போன் மூலமாகவே நடைபெற்றுள்ளன என்று சீன இண்டெர்நெட் நெட்ஒர்க் தகவல்மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டில் ஆன் லைன் விளையாட்டை காண 265 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளனர். இது 41.5 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றனர். என சோசியல் சயின்ஸ் அகாடமி பிரஸ் தெரிவித்துள்ளது. இண்டெர்நெட் பயன்படுத்தும் சீனர்களின் வாழ்க்கை தரம் முற்றிலும் மாறிவிடுவதோடு பொருட்களையும் ஆன் லைனிலேயே வாங்குகின்றனர். ஆன்லைனில் பொருள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த 2009-ம் ஆண்டு 108 மில்லியன் அளவிற்கு உள்ளது. அதற்கு முந்தைய அளவை காட்டிலும் 45.9 சதவீதம் கூடுதலாகும்.
source.dinamalar
0 Comments