ஜப்பானின் நன்றி உணர்வு
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி ஆகியவற்றின் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த இயற்கை பேரழிவின்போது ஜப்பான் மக்களுக்கு ரூ.1247 கோடி நிதியுதவி அளித்தது தைவான். அந்த பெரிய உதவி ஜப்பானியர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த ஆறு தடகள வீரர்கள் கடல் வழியாக 153 கி.மீ. பயணித்து தைவானை அடைந்துள்ளனர். தைவான் கடற்கரையை அடைந்தபோது, "நன்றி தைவான்' என்ற வாசகம் அடங்கிய கொடியை உயர்த்தியபடியே சென்றனர். சில நாட்களுக்கு முன்பு இரண்டு சிவப்பு அலகு நாரைகளை நட்பு ரீதியாக தைவானுக்கு பரிசளித்தது ஜப்பான்


.###########################
அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவருக்கு அறிவியல் கண்டுபிடிப்புக்கான உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர்களான சீனிவாச எஸ்.ஆர்.வரதன், ராகேஷ் அகர்வால், பி.ஜெயந்த் பாலிகா ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உயரிய விருது வழங்குவதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். இவர்களில் சீனிவாச எஸ்.ஆர்.வரதன் என்பவருக்கு அறிவியலுக்கான விருதும், ராகேஷ் அகர்வால், பி.ஜெயந்த் பாலிகா ஆகியோருக்கு தொழில்நுட்பத்துக்கான விருதும் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் 3 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

###########################################
சௌதியிலிருந்து 50 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

உரிய ஆவணங்கள், அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் மேலாக தங்கியிருந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள், சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் தாயகம் திரும்பினர்.


இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் கட்டுமானப் பணிகளுக்காகவும் வீடுகளில் பணி செய்வது போன்ற பணிகளுக்காகவும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உரிய ஆவணங்கள் இன்றி அங்கு பணி செய்வதை சௌதி அரேபிய அரசுக்கு தெரிய வந்தது. அதே போன்று விசா காலம் முடிந்தும் பலர் அங்கேயே தங்கியிருப்பதும் தெரியவந்தது. ஹஜ் பயணம் செல்பவர்களும் அரபு நாடுகளில் தங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களும் இதில் அடங்குவர். இதையடுத்து அந்நாட்டு சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை சௌதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து, அவர்கள் தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. ரியாத் மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களுக்கு எமர்ஜென்சி பாஸ்போர்ட் போன்ற பயண ஆவணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் 50,000 இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்திய தூதரகமும், சௌதி அரேபியாவின் பல்வேறு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியர்களுக்கு உதவும் வகையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரி டி.சி. பாருபால் கூறினார். இணைய தள வசதிகள் கொண்ட இம்மையத்தில், அவர்கல் ஆலோசனைகள், புகார்களை பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய அரசின் முன்னோடி திட்டம் என்று அதிகாரிகள் கூறினர். பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் இந்திய தூதரகங்களுக்கு நேரில் சென்று பயன்படுத்தி கொள்ளலாம் என்றார் அவர்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மைக்ரோசாப்ட் விருது விப்ரோவுக்கு

விப்ரோ டெக்னலாஜிஸ் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டுக்கான மைக்ரோ சாப்ட் விருது கிடைத்துள்ளது.இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விப்ரோ.

இந்நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவன விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.உலகளவில் புதிய மென்பொருள்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்நிலையில், உலகளவில் சிறந்த சாப்டுவேர் நிறுவனமான மைக்ரோ சாப்ட், பன்முக மென்பொருள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான விருதினை விப்ரோ நிறுவனத்துக்கு வழங்குகிறது.

இந்த விருதை பெற உலகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன."தகவல் தொழில் நுட்பத் துறையில் எங்களின் மென்பொருள் தயாரிப்பு எங்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறோம்' என்று விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகச் சேவைக்கான மூத்த உதவி தலைவர் ஸ்ரீனி பல்லியா கூறினார்.இதன் மூலம் விப்ரோவின் சர்வதேச அளவிலான வாடிக்கையர் வட்டம் மேலும் விரிவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாச்சாத்தி வழக்கு: 215 பேருக்கு தண்டனை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராம‌‌த்தில் 1992 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள்.


சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்தவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக புகார் தெரிவித்த தமிழக வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேர தேடுதல் நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.
அதேசமயம், சந்தன கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22 ‌ம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகாலகாம் நடந்துவந்த இந்த வழக்கில் இன்று (செப்.29, 2011) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டிருக்கிறது
பாலியல் வன்முறையி்ல் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்க்ப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மு்தல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

HD AMAZING WALLPAPERS


இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு


இந்தியாவில் நான்கு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது-20 போட்டியிலும் விளையாடவுள்ளனர்.
அலிஸ்ட்டர் குக் தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஸ்டுவர்ட் மீக்கர் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடாத கெவின் பீட்டர்சன், ஸ்காட் போர்த்விக் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்தத் தொடரின் போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 15 பேரைத் தவிர அக்டோபர் மாதம் இருபது-20 போட்டி தொடங்குவதற்கு முன்னர் மேலும் இரு வீரர்கள் அணியில் இனைந்து கொள்வர்.
போட்டிகளுக்காக இந்தியா செல்லும் இங்கிலாந்து அணி அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களையும், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட சில இளைஞர்களையும் கொண்ட சிறப்பான கலவை என்று இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழுவின் தலைவர் ஜெஃப் மில்லர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் விபரம்

இந்தியா செல்லும் அணியில் அலிஸ்ட்டர் குக், ஜோனதன் பாரிஸ்டோவ், இயன் பெல், ரவி போப்பாரா, ஸ்காட் போர்த்விக், டிம் பிரெஸ்னன், ஜேட் டெம்பாக், ஸ்டீவன் ஃபின், கிரெய்க் கீஸ்வெட்டார், ஸ்டுவர்ட் மீக்கார். சமித் பட்டேல், கெவின் பீட்டர்ஸன், க்ராம் ஸ்வான், ஜோனதன் ட்ராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபது-20 போட்டிகளுக்கு ஜொஸ் பட்லரும், அலெக்ஸ் ஹேல்ஸும் செல்லவுள்ளனர்.
அக்டோபர் மாதம் நான்காம் தேதி ஹைதராபாத் சென்றடையும் இங்கிலாந்து அணி, அங்கு இரண்டு 50 ஓவர்களைக் கொண்ட பயிற்சி ஆட்டத்தை அடுத்து, முதல் ஒருநாள் போட்டியை அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி விளையாடவுள்ளது.
அதன் பிறகு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி டில்லியிலும், 20 ஆம் தேதி மொஹாலியிலும், மும்பையில் 23 ஆம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டியை கொல்கத்தாவில் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியும் இந்திய அணிக்கு எதிராக ஆடவுள்ளனர்
ஒரேயொரு இருபது-20 போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 29 ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கேப்டன் டிவி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்

கரூர் மாவட்டத்தில் கேப்டன் டிவி ஒளிபரப்பு திடீரென நிறுத்தம் செய்யப்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. உடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-வை பேச்சு வார்த்தைக்கே அழைக்காமல் அ.தி.மு.க. தனித்து செயல்பட்டது. இதனால் தே.மு.தி.க. தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் மயிலாப்பூரில் நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை மேயரை அறிமுகம் செய்து வைத்து விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சில் வழக்கம் போல் நக்கல், நையாண்டி, அரசியல் அனல் என சூடு பறந்தது. அவ்வப்போது ஆளுங்கட்சியை மறைமுகமாக போட்டு தாக்கினார். இதை தே.மு.தி.க கட்சியின் கேப்டன் டிவி நேரடி ஒளிப்பரப்பு செய்தது.

இந்நிலையில், தமிழக அரசு கேபிள் டிவியில் இருந்து சத்தமின்றி கேப்டன் டிவி நீக்கப்பட்டுள்ளது. கேப்டன் டிவி-க்கு பதில் பாலிமர் தொலைக்காட்சியை 2 முறை வருமாறு செய்துள்ளனர். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

7-ஆம் அறிவு ஏ ஆர் முருகதாஸ் வேதனை
உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

சூர்யா-சுருதிஹாசன் ஜோடியாக நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள படம் 7-ஆம் அறிவு. பெரும் பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல
. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். நிறைய பேருக்கு அந்த பரந்த மனசு வராது. சுருதிஹாசன், சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சுபாவையும், சுருதியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை," என்றார்.

சூர்யா

படத்தின் நாயகன் சூர்யா பேசுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.


படத்தில் எனக்கு ஸ்ருதிஹாசன்தான் ஜோடி என்றதும் வெடவெடத்துப் போனேன். அவர், கமல்ஹாசனின் மகள் என்பதால், பதற்றமாக இருந்தது. எனக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு.

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப்பட உலகில் ஒரு முக்கிய இடம் த்துக்கொண்டிருக்கிறது,'' என்றார்.

பேட்டியின்போது, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சை மருத்துவ குணங்கள்


எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சள்காமாலை, கண் நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
* ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாரில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சருமம் வழவழப்பாக இருக்கும்.
* எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரை முகத்தில் கருமை படர்ந்த இடத்தில் தேய்க்கவும். உலர்ந்த பிறகு கழுவினால் கருமை மாறும்.
* எலுமிச்சை சாறுடன் வினிகரையும் சேர்த்து உடலில் கறுப்பான இடங்களில் தடவி வந்தால் நிறம் மாற்றம் தெரியும்.
* எலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது.
* எலுமிச்சை சாறு, பன்னீர் கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வரவும்.
* எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல் எலுமிச்சை தோலை கை, கால் விரல் நகங்களை நன்கு தேய்த்து விட்டால் நகங்களில் படிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறி நகம் பளிச்சென்று மாறும்.

தேவையில்லாத அழைப்புகள், எஸ்.எம்.எஸ் இனி இல்லை

இந்த வாரத்தில் இருந்து தேவையில்லாத தொலைபேசி விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "தேவையற்ற அழைப்புகளின் பதிவு" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 2. 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ரத்த தானம் வேண்டுபவர்கள் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே இனி அனுப்ப முடியும்.

விபரீத செய்திகள்


 ""மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.


பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். *************************வில்லியனூர் அருகே நண்பரிடம் பந்தயம் வைத்து, வேகமாக சாப்பிட்டவர், முழு இட்லி தொண்டையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி, வில்லியனூர் பெருமாள்புரம் குறவர் காலனியை சேர்ந்தவர் அய்யனார், கருவேப்பிலை-புதினா வியாபாரம் செய்து வந்தார். காலை வியாபாரம் முடிந்து, நண்பர் குமாருடன் கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு, அருகிலுள்ள இட்லி கடைக்கு சாப்பிடச் சென்றனர்.
இருவரும் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, "யார் முதலில் சாப்பிடுகிறார்கள், பார்ப்போமா?' என குமாரிடம், அய்யனார் பந்தயம் வைத்தார். அப்போது அய்யனார், முழு இட்லியை விழுங்கியபோது அது தொண்டையில் அடைத்துக் கொண்டது. அவரை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர். வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய நெட்புக்கை அறிமுகப்படுத்தும் டெல்

டெல் நிறுவனம் இந்திய கெட்ஜட் சந்தையில் விரைவாக ஓடிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக டெல்லின் நெட்புக்குகளுக்கும் டேப்லட்டுகளுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு மிக அதிகம். மேலும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவர லாட்டிடியூட் 2120 என்ற புதிய நெட்புக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த டெல் லாட்டிடியூட் 2120 பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. மேலும் இதன் விலை வாடிக்கையளர்களைக் குஷிப்படுத்தும் ஒன்றாக இருக்கும்.

லாட்டிடியூட் 2120 2 மாடல்களில் வருகிறது. ஒன்று குறைந்த விலைக்கும் மற்றொன்று அதிக விலைக்கும் விற்கப்படும். இரண்டு மாடல்களுமே 250ஜிபி ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்களைக் கொண்டுள்ளன. குறைந்த விலை மாடல் 1ஜிப ராமுடன் சிங்கிள்-கோர் ஆட்டம் என்455 ப்ராசஸர் கொண்டுள்ளது.

இதன் ஓஎஸ் யுபுந்து ஆகும். அதிக விலை மாடல் ஆட்டம் டூவல்-கோர் என்550 ப்ராசஸர் கொண்டு 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும் இது விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. இதன் ராம் 2ஜிபி என்பதால் இதன் செயல்பாடு மிக பக்காவாக இருக்கும்.

ஏதோ ஒரு காரணத்திற்காக டெல் நிறுவனம் தனது நெட்புக்கிற்கு அதிக விலையை வைத்திருக்கிறது என்ற எண்ணத் தோன்றும்
. அது வேறு ஒன்றும் இல்லை. அதாவது லாட்டிடியூட் 2120 முழுவதுமாக ரப்பரால் மூடப்பட்டுள்ளது. மேலும் இதன் எடை 3.1 பவுண்டுகளாகும். மேலும் இதன் பேட்டரியின் திறன் 56 வாட் மணியாகும். அதாவது 6.30 மணி நேரம் வரை பேட்டரி திறன் உள்ளது. இதில் டைப் செய்வது மிக எளிதாக இருக்கும்.

டெல் லாட்டிடியூட் 2120ன் கீபோர்டைப் பார்த்தால் மிக சிறப்பாக இருக்கிறது. இதன் டச்பேட் சிறியதாக இருந்தாலும் கீகள் அனைத்தும் சரியான இடைவெளியில் உள்ளன. மேலும் இதன் ஜிஎம்எ3150 ஜிபியுடன் கூடிய இதன் செயல்திறன் சாதாரணமாகவே உள்ளது.

மேலும் இது எச்டி 1080 வீடியோக்களை இயக்குகிறது. ஆனால் 720பி வீடியோக்களை இயக்கும் போது இதன் வேகம் குறைந்து விடுகிறது. இதன் ஒலிபெருக்கி சாதாரணமாகவே உள்ளது. ஆனால் இதன் எச்டி வெப்காம் பக்காவாக உள்ளது.

2120 நெட்புக் 3 வி2.0 யுஎஸ்பி போர்ட்டுகளுடன் வருகிறது. மேலும் எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் விஜிஎ கனக்டரும் உள்ளன. அதோடு இது ஆடியோ இன் மற்றும் அவுட்களைக் கொண்டு ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் வைபையையும் சப்போர்ட் செய்கிறது.

இதன் மிகச் சிறப்பு என்னவென்றால் இதன் குறைவான எடையும் விலையும் ஆகும். இது சாதாரண நெட்புக் போன்று இருந்தாலும் அதிக விலை 2120 நெட்புக் மற்ற நெட்புக்குகளோடு போட்டி போடும் என்று நம்பலாம்.இந்தியாவில் டெல்லின் லாட்டிடியூட் 2120 நெட்புக் ரூ.20,000லிருந்து கிடைக்கும்.

நேபாள விமான விபத்தில் 19 பேர் பலி


நேபாளத்தில் நடந்துள்ள ஒரு விமான விபத்தில் தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களின் உடல்களை திருச்சி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டமடித்து காண்பித்துவிட்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டு திரும்பிக்கொண்டிருந்த விமானம் ஒன்று தரையில் நொறுங்கி விழுந்தது.
இதில் பயணிகள், சிப்பந்திகள் என அவ்விமானத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
புத்தா ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் பயன்படுத்திவந்த இந்தபீச்கிராஃப்ட் 1900D ரக விமானம் மலைப் பகுதி ஒன்றில் கிழே விழுந்து பல துண்டுகளாக சிதறுண்டு போனது.
சம்பவ இடத்தில் இருந்து ஒரு நபர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார் என்றாலும், பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் மோசமான காலநிலை இருந்துவருவதால் மீட்புப் பணிகள் தடங்கலுக்குள்ளாகியிருக்கின்றன.
இந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மையானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும், அவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்த தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளும் பலியாகியுள்ளனர்.
எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலைச் சிகரங்களைச் சுற்றிக் காண்பிக்க பல்வேறு நிறுவனங்கள் விமான சேவையை நடத்திவருகின்றன.

இறந்த தமிழர்கள் அடையாளம்

பலியான தமிழர்கள் எட்டு பேரும் திருச்சி கட்டுமான சங்கத்தின் உறுப்பினர்கள் என்று அந்த சங்கத்தின் பொருளாளர் பாலாஜி தமிழோசையிடம் தெரிவித்தார்.
புது தில்லியில் நடைபெற்ற சங்கத்தின் தேசிய உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து சுற்றுலாவுக்காக இவர்கள் நேபாளம் சென்றிருந்தனர் என்றும் அவர் கூறினார்.

உடல்களை கொண்டுவர நடவடிக்கை

இந்த எட்டு பேரின் உடல்கள் தற்போது காத்மாண்டு மருத்துவமனை சவக்கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்ளும்படி தகவல் கிடைத்ததை அடுத்து, இறந்தவர்களின் உறவினர்களுடன் தான் நேபாளம் செல்லவிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாள அரசு அதிகாரிகளுடன் தான் ஏற்கனவே தொடர்பில் இருப்பதாகவும், திங்களன்று உடல்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரூ. 10 கோடி நகை, பணம் சிக்கியது-திருச்சியில்

 மீண்டும் வாக்காளர்களுக்குப் பண அருவி பாயத் தொடங்கியுள்ளது. திருச்சி இடைத் தேர்தலையொட்டி அங்கு நடந்த வாகனச் சோதனையில் அதிரடியாக ரூ. 10 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம் போல வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாய் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு கருமண்டபம் பகுதியில் நடந்த சோதனையின்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த ஒரு காரை போலீஸார் மடக்கி நிறுத்தினர். அந்தக் காரில் பறக்கும்படையினர் சோதனை போட்டனர்.அப்போது 3 பைகள் நிறைய கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்ட்டது.

அது போல தங்க நகைகளும் அதில் இருந்தன. ரூ. 40 லட்சம் பணம், 34 கிலோ தங்க நகைகள் இருந்தன. நகைகள் மட்டும் ஒன்பதை கோடி ரூபாய் மதிப்பாகும்.

இதையடுத்து காரில் இருந்த இருவரையும், காரையும் கலெக்டர் அலுவலகம் கொண்டு சென்றனர். விசாரணையில் தங்களது பெயர் ரமேஷ், ரவிச்சந்திரன் என்று இருவரும் தெரிவித்தனர். திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள பிரபல நகைக் கடை தங்களுடையது என்று அவர்கள் தெரிவித்தனர். நகைகளை விற்று விட்டு திருச்சி திரும்பிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து தேர்தலின்போது ரூ. 1 லட்சத்திற்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லையே அது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. மேலும், நகைகளுக்கான ரசீதுகள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் கேட்டபோது அதையும் அவர்கள் தரவில்லை.

எனவே இது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதையடுத்து அந்த நகை, பணத்தை அரசுக் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். நகைக் கடை அதிபர்கள் உரிய ஆவணத்தைக் காட்டினால் நகை, பணம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இதே திருச்சி மேற்குத் தொகுதியில் ஆம்னி பஸ்சில் போட்டு ரூ. 5 கோடி பணத்தை வாக்காளர்களுக்காக கடத்தி வந்தனர். அதை தனி ஆளாக சென்று ஆர்.டி.ஓ. சங்கீதா பறிமுதல் செய்தார். இந்தப் பணம் இதுவரை யாராலும் உரிமை கொண்டாடப்படாமல் அரசு கருவூலத்தில் உள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது ரூ. 10 கோடி மதிப்பிலான பணம், நகை பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் தியானம் குறித்த பயிலரங்கு

துபாயில் தியானம் குறித்த பயிலரங்கினை ஹைதராபாத் பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொசைட்டியின் நிறுவனர் ஸ்ரீ சுபாஷ்ஜி பத்ரி நடத்தினார். தியானத்தின் அறிவியல் பூர்வ உண்மைகளை உணர்ந்து சிறப்பான உடல்நலம், மன அமைதி பெறுவதன் நோக்கத்தினை விவரித்தார்.

கடந்த 19-ம் தேதி கார்ஸ் வொர்க்‌ஷாப்பில் நடைபெற்ற நிகழ்வில் பொது மேலாளர் சலீம் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலாளர் கோபாலகிருஷ்ணன் பத்ரி குறித்த அறிமுகவுரை வழங்கினார். துணைப் பொது மேலாளர் வலித் தத்தாய் நினைவுப் பரிசு வழங்கினார். மேலாளர் குருமூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வின் நலத்துறை அலுவலர் அப்துல் கனி ஒருங்கிணைத்தார்.

கடந்த 20-ம் தேதி மாலை எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடைபெற்ற பயிலரங்கில் அமீரக பிரமிட் கிளை தலைவர் ஜெய்கிஷி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தியானம் குறித்தும் அதன் மூலம் நாம் அடையும் நன்மைகள் குறித்தும் பத்ரி விவரித்தார்.

பத்ரிக்கு பொதுமேலாளர் ஹமீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்று நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர்கள் பாலரசு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஒளியை விட வேகமாக செல்லும் சிறிய துகள் -விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.
தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்

ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.

பரிசோதனை

ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ்க கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.
தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.
தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை

ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய விசா அறிவித்ததுஆஸ்திரேலிய அரசு


ஆஸ்திரேலிய அரசு புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். இந்திய மாணவர்கள் மீது நடந்த இனவெறித் தாக்குதலாலும், ஆஸ்திரேலிய அரசின் விசா கெடுபிடிகளாலும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

மாணவர் விசாவில், ஆஸ்திரேலியா வருவோர், அங்கேயே தங்கி ஓட்டல், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில், பகுதி நேர வேலையில் சேர்ந்து விடுகின்றனர். நள்ளிரவில் வேலை முடித்து வரும் இவர்களிடம், கொள்ளையர்கள் பணத்தை பறித்துச் செல்வது, கடந்த ஆண்டுகளில் அதிகமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா வரும் இளைஞர்கள், கணிசமான பணத்தை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள், கைச்செலவுக்காக பல்வேறு இடங்களில் வேலை செய்வதைத் தவிர்க்கும் நோக்குடன், புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் படிக்க வரும் மாணவர்களின் வங்கி சேமிப்பில், 18 லட்ச ரூபாய் இருப்பதாக நிரூபித்தால் தான், அவர்களுக்கு விசா வழங்கப்படும், என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த நடைமுறையால், வசதி குறைந்த மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்வது தடுக்கப்பட்டு விட்டது. எனவே, விசா கெடுபிடிகளைத் தளர்த்தும் படி, பல்கலைக்கழகங்கள் அந்நாட்டு அரசைக் கேட்டுக் கொண்டன. இதையடுத்து, அரசு விசா நடைமுறையில், சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இது குறித்து, நியூ சவுத் வேல்ஸ் முன்னாள் அமைச்சர் மைக்கேல் நைட் குறிப்பிடுகையில், "ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்கள், தங்கள் படிப்பு முடிந்த பின், மேற்படிப்புக்காக கூடுதலாகத் தங்கிக் கொள்ள, தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வங்கிக் கையிருப்பு, கணிசமான அளவில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா வரும் மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமே வருகிறோம். வேலை செய்வதற்கு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார்.

ஏழாம் அறிவு - Trailer

"மது விருந்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் -சோனா!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, எஸ்பிபி சரண் தன்னை எப்படியெல்லாம் பலாத்காரம் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரம் கொடுத்தார் நடிகை சோனா.

தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டி பஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் தனக்கு சரண் கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.

இந்த நிலையில் சோனா இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் சோனா நிருபர்களிடம் கூறுகையில், "எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன்.

வீடியோவை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்," என்றார்.

அவரிடம், "இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?" என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு சோனா, "இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்," என்றார்.

"வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?" என்று கேட்டபோது, "அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்," என்றார் சோனா.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துப்பாக்கி பரிசு
லட்சக்கணக்கான மக்கள் பஞ்சம், பட்டினியால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் சோமாலியா நாட்டில், மனப்பாடப் போட்டியில் வென்ற சிறுவர்களுக்கு, இயந்திரத் துப்பாக்கிகளை பரிசாக அளித்து மகிழ்ந்திருக்கிறது அந்நாட்டின் ஷபாப் பயங்கரவாத அமைப்பு. உலகில், பள்ளிக்கூடங்கள் மிக மிகக் குறைவாக உள்ள நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. 
 இந்நாடு கடந்த 20 ஆண்டுகளாக, வலுவான மத்திய அரசு இல்லாமல் சிதறுண்டு கிடக்கிறது. நாட்டின் தென்பகுதி, ஷபாப் பயங்கரவாத அமைப்பிடமும், பிற பகுதிகள் பல்வேறு பயங்கரவாத, பழங்குடியினக் குழுக்களிடமும் அகப்பட்டுள்ளன. 

தென்பகுதியில், பள்ளிக்கூடங்கள், வானொலி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் அனைத்தும், ஷபாப் வசம் உள்ளன. கடந்த ரம்ஜான் மாதத்தில், ஷபாப் கட்டுப்பாட்டில் உள்ள தென்பகுதி பள்ளிகளில், அந்த அமைப்பு பற்றிய விவரங்கள் மற்றும் குரான் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. 10 முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள், கடந்த 18ம் தேதி நிகழ்ந்தது. அதில், முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கொஞ்சம் பணம் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகள் தொடர்பான புத்தகங்கள், பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாவது இடம் பெற்ற மாணவருக்கு இரு கையெறி குண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. சூழல் காரணமாக சோமாலியாவில் உள்ள சிறுவர்களில் பெரும்பான்மையோருக்கு துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பரிச்சயம் உண்டு.
;பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஷபாப் தலைவர் ஷேக் முக்தார் அபு மன்சூர், "இஸ்லாம் மதத்தைக் காப்பதற்காக, சிறுவர்கள் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் துப்பாக்கியையும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்' என்றார். 

செல்போன் அதிகமாக தொலைந்து போகும் 10 இடங்கள்

வகுப்பு அறையில் மது அருந்தும் குடிமகன்கள்

அனகாபுத்தூர் அரசு ஆதி திராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியை அப்பகுதி "குடிமகன்'கள் இரவு நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் மது அருந்தும் "பாராக' பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விட்டு செல்லும் பாட்டில்களை தினந்தோறும் ஆசிரியைகள் அப்புறப்படுத்துகின்றனர். இந்த அட்டகாசம் குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை மாணவ, மாணவியர் கல்வி கற்க வசதியாக கடந்த 1931ம் ஆண்டு அனகாபுத்தூரில் துவக்க பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. பிற்காலத்தில் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பள்ளி இயங்கியது. பல ஆண்டுகளாக துவக்க பள்ளியாக இருந்த இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 435 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே, இந்த பள்ளி அமைந்துள்ளது. ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் பள்ளி இருந்தாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் இப்பள்ளியை இப்பகுதி "குடிமகன்'கள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருவது தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து கடந்தாண்டு பள்ளிக்கு கிரில் கேட் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இருப்பினும், சுற்றுச்சுவரை ஏறி குதித்து "குடிமகன்'கள், இப்பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதும், பாட்டில்களை உடைத்து நொறுக்குவதும், பள்ளி சுவர்களில் தகாத வார்த்தைகளை எழுதி வைப்பதும், மலம், சிறுநீர் கழிப்பதும் வாடிக்கையாக உள்ளது. சுகாதார பணியாளர்கள் இல்லாததால், தினமும் காலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியைகள் வகுப்பறையில் உள்ள சரக்கு பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், சங்கர்நகர் போலீசார் இரவில் இப்பகுதியில் ரோந்து செல்லாமல், மெத்தனமாக உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் 11 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி ஏழை மக்களின் வசதிக்காக உள்ள இப்பள்ளியை சரியாக நடத்த விடாமல், சில கும்பல் அட்டகாசம் செய்கிறது. பள்ளி வகுப்பறை தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று மது அருந்துகின்றனர். முன்பு ஒரு நாள் பள்ளிக்கான குடிநீர் தண்ணீர் தொட்டியில் மலம் மிதந்தது. வகுப்பறைக்குள் சிறுநீர், மலம் கழிக்கும் கொடுமையும், இதை மறுநாள் பள்ளிக்கு வரும் ஆசிரியைகள் சுத்தம் செய்யும் கொடுமையும் நடக்கிறது. போலீசார் இதை கண்டுகொள்வதே கிடையாது. சமீபத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். அமைச்சர் மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்தி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூக விரோதிகளை அடக்க போலீசாருக்கு இங்கு,"ரெகுலர் பீட்' ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கரண்ட் ஷாக் குடுத்தால் மூளைதிறன் அதிகரிக்கும்


மின்சாரத்தின் உதவியுடன் மனித மூளையை தூண்டச்செய்து அதன் மூலம் ஒருவரின் கற்கும் திறனை அதிகப்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள் செய்திருக்கும் ஆய்வில், மனித மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், குறைந்த அளவு மின்காந்தப்புல தூண்டுதலை குறிப்பிட்ட கால கட்டத்திற்கு செலுத்துவதன் மூலம் மூளையின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும், அதன் மூலம் ஒருவரது கற்கும் திறனை-- குறிப்பாக ஒருவரின் கற்கும் வேகத்தை அதிகப்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமான மனிதர்களின் மூளை மற்றும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் செயற்பாடுகள் இந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் மூளையின் செயற்பாடுகளை கூர்மையாக ஆராய்ந்த இவர்களுக்கு மனித மூளையின் நெகிழ்வுத்தன்மை பெரிய வியப்பை தந்தது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனித மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகள் உரிய மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு தனது முந்தைய செயற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படுத்தத் துவங்கும் விதத்தை இவர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.

அப்படியான மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் செயற்பட வைப்பதற்காக அந்த பகுதிகளுக்கு குறைந்த அளவான மின்காந்தப்புலத்தை, உரிய உபகரணங்களை கொண்டு செலுத்தும் சிகிச்சை முறையை இவர்கள் கண்காணித்தனர்.

இந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையை ஆரோக்கியமான மனிதர்களின் மூளையில் செய்தபோது விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது அப்படி செலுத்தப்பட்ட மூளையின் குறிப்பிட்ட பகுதியின் செயற்பாட்டின் வேகம் அதிகரித்ததை கவனித்த விஞ்ஞானிகள், மனிதர்களின் கற்றல் திறனை கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் இந்த பரிசோதனையை செய்தபோது அப்படிப்பட்டவர்களின் கற்கும் வேகம் அதிகரிப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.

இதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட மின்காந்த தூண்டுதலால் மனித மூளையின் செயற்திறனை அதிகரிக்கச்செய்ய முடியும் என்பதை தங்கள் பரிசோதனையின் முதல்கட்ட முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் மேலதிக பரிசோதனைகளின் முடிவில், மூளையின் செயற்திறனை, குறிப்பாக கற்கும் திறனை அதிகரிக்கச்செய்யும் மின் காந்த கருவி ஒன்றை உருவாக்க முடியும் என்றும் இவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

துணி கடை ஆடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா , பெண்கள் ஜாக்கிரதை
How to Detect Hidden Camera in Trial Room?

In front of the trial room take your mobile and make sure that mobile can make calls........
Then enter into the trail room, take your mobile and make a call.....
If u can't make a call......!!!!

... There is a hidden camera......
This is due to the interference of fiber optic cable during the signal transfer......

Please forward this to your friends to educate this issue to the
public......To prevent our innocent ladies from HIDDEN CAMERA...........

Pinhole Cameras in Changing Rooms of Big Bazaar, Shoppers Stop?

A few days ago, I received this text message:
Please don't use Trial room of BIG BAZAAR there are pinhole cameras to make MMS of young girls.
So, please forward to all girls. Also forward to all boys who have sisters and girlfriends.

Don't be shy in forwarding this message. Because its about protecting the integrity of all girls & ladies.

HOW TO DETECT A 2-WAY MIRROR?

When we visit toilets, bathrooms, hotel rooms, changing rooms, etc., How many of you know for sure that the seemingly ordinary mirror hanging on the wall is a real mirror, or actually a 2-way mirror I.e., they can see you, but you can't see them. There have been many cases of people installing 2-way mirrors in female changing rooms or bathroom or bedrooms.

It is very difficult to positively identify the surface by just looking at it. So, how do we determine with any amount of certainty what type of Mirror we are looking at?

CONDUCT THIS SIMPLE TEST:

Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is a GENUINE mirror.

However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE, IT IS A 2-WAY MIRROR! (There may be someone seeing you from the other side). So remember, every time you see a mirror, do the "fingernail test." It doesn't cost you anything. It is simple to do.

This is a really good thing to do. The reason there is a gap on a real mirror, is because the silver is on the back of the mirror UNDER the glass.

Whereas with a two-way mirror, the silver is on the surface. Keep it in mind! Make sure and check every time you enter in hotel rooms.

Share this with your sisters, wife, daughters, friends, colleagues, etc.

Pass this message to all Ur friends in the Contacts.???????????????????????????
பெண்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது
?????????????????????????????????????
Source:Email

திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கரூரில் கைது-மணல்


காவிரியில் மணல் அள்ளுவது தொடர்பான பிரச்சினை தொடர்பாக முன்னாள் கரூர் எம்.பியும், தற்போதைய அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏவுமான கே.சி.பழனிச்சாமி இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

கரூரில் வைத்து பழனிச்சாமியை போலீஸார் கைது செய்தனர். திமுகவின் மிகப் பெரிய புள்ளிகளில் பழனிச்சாமியும் ஒருவர். கேசிபி என திமுகவினரால் அழைக்கப்படும் பழனிச்சாமி, மிகப் பெரிய கோடீஸ்வரர், திமுகவின் முக்கியஸ்தர்களில் ஒருவர். கரூர் ஜாம்பவானான இவர் ஏற்கனவே எம்.பியாக இருந்துள்ளார்.தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று திடீரென கேசிபி கைது செய்யப்பட்டார். கரூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டாரப். காவிரியில் மணல் அள்ளும் பிரச்சினை தொடர்பாக கேசிபி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவையும் விட கூடுதலாக மணல் அள்ளியதாக கேசிபி மீது கிராம நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கேசிபி தற்போது காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அன்பு

குட்டைப் பாவாடையுடன் போராட்டம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் குட்டைப் பாவாடைகளை அணிந்த பெண்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.அண்மையில் ஒரு பெண்ணை ஒரு குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதற்கு, அந்தப் பெண் அணிந்திருந்த ஆடைகளே காரணம் என்று நகர ஆளுனர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை அந்தப் பெண்கள் செய்திருக்கிறார்கள்.

''குட்டைப்பாவாடை அணிவது எனது உரிமை, நான் எப்படி உடை அணிவது என்பதை எனக்கு நீ சொல்லாதே...., பாலியல் வல்லுறவு செய்பவர்களை நிறுத்தச் சொல்லு...'' என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

''தாம் பாலியல் வல்லுறவு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கு பெண்கள் பொதுப் பேருந்துகளில் குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்த வேண்டும்'' என்று ஜகார்த்தா நகர ஆளுனர் பௌசி போவா வெள்ளியன்று கூறியிருந்தார்.

அவர் உடனடியாக மன்னிப்புக் கோரிவிட்டார். ஆனால் அவர் கூறிய கருத்து பரவலாக பிரசுரமாகிவிட்டது.

_____________________
போராட்டம் என்ற பெயரில் உலகில் இனி என்ன என்ன செய்ய போகிறார்களோ ?
________________________

8,000 கொலை,10,000 வன்முறை- Single TV

காலையில் 'அழுது' கொண்டே தொடங்கும் பெண்களின் வாழ்க்கை இரவு உறங்கும் வரையும் முடிவதில்லை. அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் பெண்களை கட்டிப் போட்டு, இல்லை இல்லை அடிமையாக்கி வைத்திருக்கிறது.

தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியானது போதைப்பொருளை விட கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ளவைத்து நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது.

தொலைக்காட்சியானது வளர்ந்து வரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இதயநோய் ஆபத்து


அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கூட ஈடுபட முடியவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. 1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பது தான் முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கும் வன்முறை காட்சிகள்

18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தவறான முன்னுதாரணம்

பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவு கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக பசுமரத்து ஆணி போல பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு தொலைக்காட்சி வழியே நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதே உண்மை.

ஆண்மைத் தன்மை நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

எப்போது மதுப்பழக்கத்துக்குப் பெரும்பாலோர் அடிமையாகிவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் தாங்களாகவே கருத்தடை செய்யாமல் வீட்டில் பெண்களையே கருத்தடை செய்யச் சொல்வார்கள்.

இப்போது அதற்குப் பதிலாக தமிழக அரசே (கடந்தகால அரசும், தற்போதைய அரசும்) இலவசமாக ஆண்களுக்கான கருத்தடை (வாசக்டமி) செய்து தருகிறது. எப்படி என ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்.மதுப்பழக்கம், முன்பு எப்போதாவது அதுவும் ஆண்களில் மிகச் சிலரே அந்தப் பழக்கத்தை வைத்திருந்தனர். அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டுமே. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் குடித்துவிட்டு வந்ததாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நிலைமையின் தீவிரம் புரிகிறதா? பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பழக்கம் தொற்றும் அபாயம் உண்டாகிவிட்டது.

இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும், முன்புபோல் மறைமுகமாக ஊரின் ஒதுக்குப்புறங்களில் விற்கப்பட்ட மது, இப்போது வார்டுகள்தோறும் அரசே கடைவிரித்து விற்பனை செய்கிறது. ஏதோ பெயரளவுக்குச் சில குறிப்பிட்ட பள்ளி, கோயில்கள் அருகில் கடை கூடாது என்று சட்டம் வேறு.

2003-ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ.3,469 கோடியாக இருந்த வருமானம், 2010-ல் ரூ.14,750 கோடியாக வளர்ந்துள்ளது என்பதில் இருந்தே குடிப்பழக்கத்தின் வளர்ச்சியை நம்மால் யூகிக்க இயலும்.கருத்தடை என்று சொன்னதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், தொடர்ந்து குடிப்பழக்கம் இருக்கும் ஒருவருக்கு ஆண்மைத் தன்மை நிச்சயமாகப் பாதிக்கப்படும். அதுபோக தனது உழைப்பின் முக்கியமான பங்களிப்பை இந்தக் குடிப்பழக்கத்துக்குச் செலவிடும் நிலைக்கு அந்த நபர் உள்ளாகிறார்.அதையும் மீறி கருவுறும் பெண்களுக்கு எம்மாதிரியான குழந்தைகள் பிறக்கும் என்பதை நாமே சற்று யூகித்துக்கொள்ள இயலும். நோஞ்சான்களாகவும், பலவீனமானவர்களாகவும், நோயுள்ளவர்களாகவும், எதையும் சாதிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி ஒரு தலைமுறை தேவைதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதற்குத் திருமணம் செய்யாமலே அல்லது குழந்தை பெறாமலே இருந்துவிடலாம். இதைத் தவிர, எத்தனையோ பிரச்னைகள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகின்றன.
குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க இயலாவிட்டால் ஏற்படும் மனஇறுக்கம் பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன. பலவிதமான தவறுகளுக்குக் காரணமாகிறது.
குடும்பத்தில் பல பிரச்னைகளுக்கும் இந்தக் குடிப்பழக்கம் காரணமாகிறது. பொய், திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூது என பல தீய வழிகளுக்கும் இது வழி வகுக்கிறது.
முன்பு ஏதாவது விசேஷம் அல்லது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றால், அனைவரும் "பார்ட்டி' வைக்கச் சொல்வார்கள். உடனே அருகில் உள்ள டீக்கடையில் ஸ்வீட், காரம், காபி என்று "பார்ட்டி' தந்தாலே பெரிய விருந்தைப் போன்று இருந்தது. அதற்கும் மேல் விருந்து என்றால், ஒரு நல்ல ஹோட்டலுக்குச் சென்று உண்பது என்பதுதான் உயர்ந்தபட்ச விருந்தாக இருந்தது.

இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் "பார்ட்டி, பார்ட்டி' என்று உடனே மதுவகைகளைத்தான் நோக்கமாகக் கொண்டு விருந்துகள் நடைபெறுகின்றன. அந்த அளவுக்கு இந்தத் தீயபழக்கம் புழக்கத்துக்கு வந்துவிட்டது.
இன்னும் பல விஷயங்களில் இந்தத் தீயபழக்கம் சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ளது. பொருளாதார நஷ்டம் ஒருபுறம், சமூக அந்தஸ்து இழப்பு மறுபுறம். அடிமை மனப்பான்மை ஒருபுறம் என பலவிதங்களில் பாதிப்பு.

இதில் ஒரு முக்கியச் செய்தி என்னவென்றால், எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை மேற்கோள் காட்டுவதுபோல, இந்த விஷயத்திலும் வெளிநாட்டினரைச் சுட்டிக்காட்டி, அவர்களெல்லாம் தினமும் குடிக்கிறார்கள் என்று அவர்களையெல்லாம் குடிகாரர்களாக நினைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்?அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கேற்ப அங்கே அந்தப் பழக்கத்தை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அதுவும் அளவோடு என்று சொன்னால் இங்குள்ளவர்கள் நம்ப மறுக்கிறார்கள். காரணம், இவர்களுக்கு எதையும் அளவோடு செய்வது என்பது இயலாது என்பதால்.

எது எப்படியோ, நாம் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவதால் நமக்குத்தான் பாதிப்பு என்பதை உணர்ந்து சிறிதுசிறிதாக இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுதலே ஒரு சரியான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


thanks.dinamani

எச்சரிக்கை... : சமூக வலைதள உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை:


* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், "பேஸ் புக்' வலைதளத்தில், "ஸ்பை' என்ற பட்டனை "கிளிக்' செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.

* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.

* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.

* கவர்ச்சியான மற்றும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான "பேஸ்புக், ஆர்குட்' போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.

"பேஸ்புக்'கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்' போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

ஜெயலலிதாவை முதல்வர் பதவிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு உள்ளதால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகரான டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், உயர் பதவி வகிப்பவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சி.வி. தாமஸைப் பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப அதிகாரம் உள்ளது என்று தாமஸ் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது போன்ற குற்றச்சாட்டுகளில் தனி நபரின் குணத்துக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று 2009ல் நீதிபதி கண்ணதாசன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது கடந்த 14 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரைப் பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் உயர் பதவியில் வகிக்கக் கூடாது என்பது தொடர்பான விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனதை உலுக்கும் குறும்படம் (must watch this video)

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்


பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அசாருத்தீன் மகன் அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பியுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மார்பு, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பலத்த அடிபட்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அவருடைய இடது சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கடந்த 5 நாட்களாக சுய நினைவின்றி உயிருக்கு போராடி வந்த அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே விபத்தில் அசாருத்தீனின் சகோதரியின் மகன் அஜ்மல்(16) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் சாப்பிடும்போது தூங்கும் காட்சிகள்


தங்கம் பூமியில் எப்படி உருவாகியது


தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்


தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.

அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:

எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"

அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு

சட்டசபையில் உயர்கல் வித்துறை அமைச்சர் பழனியப்பன் பல்கலைக் கழக சட்ட திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்து விட்டது. இதனால் கல்வி சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவு வெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகதரமிக்க நிறுவனங்களாக மாற்றி அமைக்க சிறப்பு திட்டம் ஒன்று செயல் படுத்தும். அதற்கேற்ப 2006-ம் ஆண்டு திருச்சி அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக சட்டம், கோயம் புத் தூர் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக சட்டம், 2007-ம் ஆண்டு திருநெல்வேலி அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக சட்டம், 2010-ம் ஆண்டு சென்னை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2010-ம் ஆண்டு மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழக சட்டம் ஆகிய சட்டங்களை நீக்கம் செய்வதென்றும் 1978-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கும் பொருட்டு இந்த சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

கருணாநிதி பேசுவதும் சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்


ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.

இதுதொடர்பாக 'தினமணி'யில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாகவும், சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட்ட பொருளாகிவிட்டதாகவும், அதிமுக அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு முன்னால், அவர் தன்னைச் சுயபரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறும் தகுதி தனக்கு உண்டா என்பதையும் அவரது மனசாட்சியிடம் கேட்டிருக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சிபெற்ற காவலர்களின் தாக்குதல் படை முதன்முறையாக இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது. கட்டுங்கடங்காத பெரும் கலவரங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் படை கற்றறிந்த வழக்கறிஞர்களின் அறவழியான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு முதன்முறையாக ஏவப்பட்டது.

1919-ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது பிரிட்டிஷ் ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டு 400 பேருக்கு மேல் சுருண்டு விழுந்து செத்தனர். அந்தக் கொடிய ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு இணையாக நடந்த நிகழ்ச்சி உயர் நீதிமன்ற நிகழ்ச்சியே ஆகும்.
அதே காலகட்டத்தில் மதுரையில் அமைதியாக ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்களை டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

தலைமை நீதிபதியும், தலைமைப் பதிவாளரும் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையைத் தாங்கள் அழைக்கவில்லை என வெளிப்படையாக அறிவித்தார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து தடியடி நடத்துவதற்கு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தது யார் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

இத்துயர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ஆணையம், காவல்துறையின் வரம்புமீறிய நடவடிக்கைகளையும் எல்லைமீறிய தாக்குதல்களையும் கண்டித்தது. அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

29-10-2009 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வேண்டாத நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பானவர்கள் என 4 உயர் அதிகாரிகளைப் பெயர் சுட்டி, அவர்களைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த ஆணைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்றைய முதலமைச்சர் கருணாநிதி இறுதிவரை முன்வரவில்லை.
இந்த நிகழ்ச்சிகளுக்குத் தார்மிக ரீதியில் மட்டுமல்ல, நேரடியாகவும் முதலமைச்சரே பொறுப்பு என்பதால்தான் தவறிழைத்த அதிகாரிகள் மீது கடைசிவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொடுமைகளைப்போல, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதிகளும் எண்ணிலடங்காதவையாகும்.
அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெறவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்ததுபோல, தான் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கருணாநிதி முயற்சி செய்கிறார்.

""சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட வேண்டிய பொருளாக ஆகிவிட்டது'' என குற்றம் சாட்டியிருக்கிறார். 1972-ம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக தோன்றிய பிறகு சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் வேரை அறுக்கும் முயற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. அவற்றுக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதியே ஆவார்.

அப்போது பேரவைத் தலைவராக இருந்த கே.ஏ. மதியழகன் எம்.ஜி.ஆரோடு ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்ற காரணத்தால் அவருக்கு எதிராக பேரவைத் துணைத் தலைவராக இருந்த சீனிவாசனை முதலமைச்சர் கருணாநிதி பயன்படுத்தி, சட்டமன்றத்தில் ஒரே நேரத்தில் இரு பேரவைத் தலைவர்கள் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்து சட்டமன்றத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தையே மூச்சுத் திணற வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை அவமானகரமாகப் பேசி சபைக்கே வராமல் விரட்டியடித்தார்.

1990-ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைப் பெண் என்றும் பாராமல் தனது சகாக்களை விட்டுத் தாக்கச் செய்தார். சட்டமன்றத்தில் தனக்கு எதிரான நிலையெடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாமக போன்ற பல கட்சிகளையும் இரண்டாக உடைத்து சாதனை படைத்தார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க இவர் ஆற்றிய அருஞ்செயல்களைப் பட்டியலிட்டால் இடம்கொள்ளாது.

லஞ்சம், ஊழல் போன்றவற்றின் மூலம் திரட்டிய வரைமுறையில்லாத செல்வம் போதாது என்று அப்பாவிப் பொதுமக்களின் சொத்துகளையும் தொழிற்சாலைகளையும் நிலங்களையும் மிரட்டியும் சட்டவிரோதமாகவும் பறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும், மாவட்ட அளவில் நிர்வாகிகளாகப் பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்குகளை முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துக் குற்றமற்றவர்கள் என நிரூபித்து வெளியே வருவதற்குப் பதில், பழிவாங்கும் போக்குடன் இவர்கள் மீது பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என கருணாநிதி நா கூசாது பேசுகிறார்.

மேலே கண்டவர்கள் செய்த சட்டவிரோதமான செயல்கள் அனைத்தும் இவர் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்றவைதான். அப்போது அவற்றைத் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராத இவர், இப்போது புலம்புவதில் எவ்விதப் பயனும் இல்லை.

சட்டம் தனது கடமையைச் செய்யும் என எத்தனை தடவை இவர் முதலமைச்சராக இருந்தபோது சொல்லியிருக்கிறார். இப்போது சட்டம் தனது கடமையைச் செய்யும்போது அதற்கு எதிராகக் கூப்பாடு போடுவது ஏன்? உள்ளாட்சித் தேர்தலைப் பாரபட்சமற்ற முறையில் நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தேர்தல்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என திமுக வற்புறுத்துவது கண்டு மக்கள் நகைக்கிறார்கள். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருமங்கலத்தில் தொடங்கி நடைபெற்ற துணைத் தேர்தல்கள் அத்தனையிலும் அராஜகம் கொடிகட்டிப் பறந்தது.

திருமங்கலம் தில்லுமுல்லு என்ற புதிய தேர்தல் தந்திரத்தையே கையாண்டு வெற்றி தேடித் தந்த தனது மகனை உச்சிமுகர்ந்து பாராட்டியவர், இன்று தேர்தல்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் எனப் பேசுவது மனசாட்சியைக் கொன்ற தன்மையாகும்.

திமுகவை வீழ்த்த இந்திரா காந்தியாலே முடியாதபோது வேறு யாரால் முடியப் போகிறது எனப் பெருமை பேசியிருக்கிறார். ஏதோ இவர் இந்திராகாந்தியை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றதுபோல சவடால் அடிக்கிறார்.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் - ராஜாஜி கூட்டு கண்டு பயந்து இந்திராவிடம் சரணடைந்ததை மறந்துவிட்டார்.

1975-ம் ஆண்டு அவசரகால நிலைமை இருந்தபோது இவரது ஆட்சியை இந்திரா பதவிநீக்கம் செய்ததையும், இந்திராவைச் சர்வாதிகாரி என இவரும் இவரது சகாக்களும் ஏசியதையும் வசதியாக மறந்துவிட்டு 1980 பொதுத் தேர்தலின்போது, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என அவரிடம் சரண் புகுந்ததையும் மறைத்துப் பேசுகிறார்.

இந்திராவின் தயவால் எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் பதவிநீக்கம் செய்ய வைத்து மறுதேர்தலைச் சந்தித்தும்கூட எம்.ஜி.ஆரின் வெற்றியை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
மக்களிடம் இயற்கையாகக் குடிகொண்டுள்ள மறதியைப் பயன்படுத்திக்கொண்டு பழைய நிகழ்ச்சிகளை மறைத்தும் திரித்தும் பேசுகிற கலை அவருக்கு மட்டுமே உரியதாகும்.

ஐந்துமுறை முதலமைச்சராகப் பதவி வகித்துக் கொடிகட்டிப் பறந்தவர் இன்றைக்குக் குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநிலத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனுப்போட்டு மன்றாடும் நிலைக்கு ஆளாகியிருப்பதும், இனி யாரிடம் முறையிடுவது எனத் தேடித்தேடி அலைவதும் பரிதாபத்துக்குரியதாகும்.

ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.