எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல


எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல,' என, வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணாநகர் குருவிக்காரன்சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி இல்ல காப்பாளர் ஜான்(51).

சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டுகிறது. தேர்தல் அதிகாரிகள் மூலம் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்தும் வருகிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் கட்சிகள் திணறுகின்றன.பணம் பெற்று ஓட்டளிக்க கூடாது, என்ற விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜான் துணிச்சலாக, "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல. ஓட்டளிக்க பணம் தர முன்வரும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை,' என, எழுதி வீட்டின் முன் தொங்கவிட்டுள்ளார்.

அவ்வழியாக செல்வோரின் கவனத்தை இவ்வாசகங்கள் ஈர்க்கின்றன. இதை கவனித்து தெருவில் குடியிருக்கும் சிலர் இது போல எழுதி வைக்க திட்டமிட்டுள்ளனர். ஜானின் மனைவி சிந்தா சேக்கிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஜான், பத்து தேர்தல்களில் ஓட்டளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, ஓட்டுக்கு பணம் வழங்க கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஓட்டுக்கு பணம் வழங்குவது குற்றம். அதை பெறுவது அதை விட குற்றம். லஞ்சம் வாங்குவதற்கு சமம். ஓரிரு நாட்களுக்கு முன், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என, கலெக்டர் சகாயம் பேசியதாக தினமலர் இதழில் செய்தி படித்தேன்.அதை பின்பற்ற முடிவு செய்து, எழுதி வைத்தேன். இதை பார்த்துவிட்டு, மற்றவர்களும் எழுதி வைப்பதாக கூறியது மகிழ்ச்சி என்றார்.இவரை போன்று அனைத்து வாக்காளர்களும், பணம் பெற்று ஓட்டளிக்க மாட்டேன் என்று சபதம் ஏற்க வேண்டும்.

மெயில், மேப் சேவையையும் நிறுத்துகிறது கூகுள்


சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவின் சென்சார் நடவடிக்கையை எதிர்த்து, கடந்த 2009-ம் ஆண்டு முதல் கூகுள் தேடியந்திர சேவையை சீனாவில் நிறுத்திய கூகுள் நிறுவனம், இனி வரும் நாட்களில் சீனாவுக்கான ஜிமெயில், கூகுள் மேப்பிங் உள்ளிட்ட தனது அனைத்து சேவைகளையும் நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.

கூகுள் மேப்பிங் சேவைக்கான லைசென்ஸை புதுப்பிக்க நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சீன அரசு அறிவித்திருந்தது. ஆனால் கூகுள் இன்றுவரை விண்ணப்பிக்கவில்லை. நாளைக்குள் விண்ணப்பம் தரப்படுமா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜெஸிகா பாவல்.

கூகுளின் நிலை குறித்து கருத்து தெரிவித்த சீனப் பேராசிரியர் கிறிஸ்டோபர் டேங்க், "சீனாவின் விதிமுறைகளுக்கு ஏற்ப கூகுள் நடந்து கொள்ள வேண்டும். இதுவரை நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். சென்சார் விதிமுறைகளை முழுமையாக ஏற்க வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் இனி கூகுள் இருக்காது", என்றார்.

கூகுள் மேப்பிங் சேவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத மீறல்கள் இருப்பதாகவும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எப்படி சீனாவில் ஓபியம் விற்று மக்களைக் கெடுத்ததோ, அதற்கு நிகரான வேலையை கூகுள் செய்வதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதனாலேயே புதிய லைசென்ஸ் கொள்கையை சீனா அறிவித்துள்ளது.

இந்தியா அசத்தல் வெற்றி (India vs Pakistan Full Match Highlights World Cup 2011)

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

அஷ்வின் நீக்கம்:ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

சேவக் "சரவெடி':இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் "ரிவியு' முறையில் சேவக் 38 ரன்களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.


வகாப் மிரட்டல்: அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி' கொடுக்க, சச்சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய "ஸ்டம்பிங்கில்' வீழ்ந்தார். போட்டியின் 26வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை "அடி' கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ்லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் "ஹாட்ரிக்' வாய்ப்பு பறிபோனது.

சச்சின் அபாரம்:இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதானமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவுண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் "வேகத்தில்' தோனியும்(25) நடையை கட்டினார்.

ரெய்னா அசத்தல்:கடைசி கட்டத்தில் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.

திணறல் ஆட்டம்:சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹபீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

அப்ரிதி ஏமாற்றம்:கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா "ஆமை வேகத்தில்' ஆட, "ரன் ரேட்' எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது.

தாமதம் ஏன்?:"பேட்டிங் பவர்பிளேயை' மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் "பவர்பிளேயை' பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. மிஸ்பா (56) ஆறுதல் அளித்தார்.அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

"கரண்ட் கட்' இல்லை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண வசதியாக, தமிழகத்தில் நேற்று மின்வெட்டு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமுறை "மின்வெட்டு' மூலம் "ஷாக்' தந்தனர். அதேநேரம் மகாராஷ்டிரா அரசு, வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1000 "மெகா வாட்' மின்சாரத்தை பெற்று, மதியம் 2 முதல் இரவு 11 மணி வரை, மின்வெட்டு இல்லாமல், தடங்கலின்றி போட்டியை காண வசதி செய்தனர்.

பிரபலங்களின் படையெடுப்பு : மொகாலி போட்டியைக் காண இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களுடன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் வந்திருந்தனர். தவிர, பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், புபிந்தர் சிங் ஹோடா, கவர்னர் சிவராஜ் படேல், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிர் கான், ஷக்தி கபூர் உள்ளிட்ட பலரும் போட்டியை ரசித்தனர். 3 வாரத்துக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தி, வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்து போட்டியை பார்த்தார். திடீரென பாதுகாப்பை மீறி ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பார்க்கத்துவங்கினார்.

ஐ.சி.சி., மன்னிப்பு : தேசிய கொடியை விற்கும் உரிமையை, ஐ.சி.சி.,யிடம் பெற்றிருந்த வியாபாரி ஒருவர், மூவர்ணத்தில் ஆன பலூனை காலில் போட்டு மிதித்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.சி., கூறுகையில்,"" நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஒவ்வொரு இந்தியரிடமும் ஐ.சி.சி., மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது,'' என தெரிவித்துள்ளது.

பாக்., பிரதமருக்கு விருந்து : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி மைதானத்தில் நேரில் பார்த்தனர். இவர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஆசாத் சபிக், யூனிஸ் கானை, யுவராஜ் சிங் வெளியேற்றினார்.

மூன்றாவது முறை : நேற்று பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை அரங்கில் இந்திய அணி மூன்றாவது முறையாக (1983, 2003, 2011) பைனலுக்கு முன்னேறியது. கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2003ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லுமா என்பதை பைனலில் காண்போம்.

தொடரும் ஆதிக்கம் : உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஐந்து முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சச்சின் அபாரம் : ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய "மாஸ்ட் பேட்ஸ்மேன்' சச்சின், இதுவரை 44 போட்டிகளில் 6 சதம், 15 அரைசதம் உட்பட 2260 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார். இவர், இம்முறை 8 போட்டிகளில் பங்கேற்று 2 சதம், 2 அரைசதம் உட்பட 464 ரன்கள் எடுத்து, 2வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் மூன்று (1996, 2003, 2011) உலக கோப்பை தொடர்களில் தலா 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

courtesy.dinamalar

கடலுக்கு அடியில் ஒரு டூர்

தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்


வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார்.

இதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த்.ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார்.இதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார்.

விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

Sri Lanka vs New Zealand ---- Semifinal

இந்தியா-பாக். கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளிடையே நாளை நடக்கும் போட்டியை காண பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா. பாகிஸ்தான் பிரதமர் கிலானி உள்பட ஏராளமான வி.ஐ.பி.க்கள் வருகிறார்கள். இதனால் மொகாலி மைதானத்தில் வரலாறு காணாத வகையில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி, அமைச்சர்கள் புடைசூழ வர உள்ளார்.

இந்தியா அழைப்பை ஏற்று அவர் வருவதால் மொகாலியில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. கிலானி வந்த சிறிது நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வர உள்ளார். மொகாலி மைதானத்தில் மன்மோகன்சிங், கிலானி, சோனியா ஆகிய மூவரும் அருகருகே அமர்ந்து போட்டியை பார்ப்பார்கள். ராகுல்காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோரும் நாளை மொகாலி வருவார்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தேசிய கமாண்டோ படையின் 100 கருப்புப்பூனை படை வீரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவார்கள். மொகாலி மைதானத்தின் உள்பகுதி பாதுகாப்பை துணை நிலை ராணுவம் ஏற்றுள்ளது. மைதானத்துக்கு வெளியில் பஞ்சாப் மாநில போலீசார் 1800 பேர் நிறுத்தப்படுவார்கள். ஒவ்வொரு பார்வையாளரையும் அவர்கள் 3 இடங்களில் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். இருநாட்டு பிரதமர்கள் வருவதால் மைதானத்தை சுற்றி உள்ள உயரமான கட்டிடங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள.

தீவிரவாதிகள் வான்வழித் தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்பதற்காக மைதானத்தை சுற்றி விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த குண்டுகளை செயல் இழக்க செய்ய ரோபோ கருவியுடன் ஒரு வாகனம் மைதானம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. மைதானம் அருகில் வி.ஐ.பி.க்கள் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆள் இல்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் நாளை 3 மணி நேரத்துக்கு முன்பே வந்து இருக்கையில் அமர வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகின் பல நாடுகளில் சர்வதேச போட்டிகளுக்கு செய்யப்பட்டது போன்று மிக பிரமாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நாளை மொகாலி போட்டிக்காக செய்யப்பட்டுள்ளது.


**************

இந்தியாவும், பாகிஸ்தானும் கையில் ஆயுதங்களை வைத்து 'விளையாடியதை' நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் பேட்டும், பந்துமாக இரு தரப்பும் விளையாடியதை கிட்டத்தட்ட அத்தனை இந்தியர்களும் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். இந்த இரு நாடுகளின் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் அப்படி ஒரு 'வைப்ரேஷன்'.

இந்தியா என்றால் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் என்றால் இந்தியாவிலும், ஒரு மாதிரியான எண்ணத்தை இரு நாடுகளுமே சேர்ந்து விதைத்து விட்டன. விதை இன்று வளர்ந்து, விருட்சமாகி விட்டதால் அவ்வளவு சீக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றி விட முடியாது. மாற்ற முடியாத அளவுக்கு சூழல்களும் மோசமாகவே உள்ளன.

இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது அரை இறுதிப் போட்டியில் நாளை மோதப் போவதை வேடிக்கை பார்க்க பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டு பிரதமர் கிலானி பஞ்சாப் வருகிறார். அதேபோல நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் மொஹாலி விரைகிறார். இருவரும் சேர்ந்து இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் மோதிக் கொள்வதைப் பார்த்து ரசிக்கப் போகிறார்கள். விளையாட்டு முடிந்ததும் பரஸ்பரம் கை குலுக்கி விடை பெறப் போகிறார்கள்.

இது இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் இறுக்கத்தைக் குறைக்க உதவும் என்ற எதிர்பார்ப்பு இரு நாடுகளிடையேயும் நிலவி வருகிறது. நிச்சயம் அது நடக்கும்தான். அதேசமயம், விளையாட்டோடு நின்று விடாமல் அதையும் தாண்டி புனிதமான உறவாக இது மலர வேண்டும் என்ற ஆர்வம் இரு நாடுகளிலும் உள்ளதையும் மறக்கக் கூடாது.

இந்த சமயத்தில் இதற்கு முந்தைய இந்த இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவலைகள் வந்து போவதை மறக்க முடியாது.

முதல் பார்வை:

அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியைக் காண வருமாறு ராஜீவ் காந்தி அழைப்பு விடுக்க அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஜியா. ஆச்சரியம் பிளஸ் சங்கடத்துடன் அதை எதிர்கொண்ட அவர், வருகிறேன் என்று கூறி விட்டு வந்தும் விட்டார்.

முக மலர்ச்சியுடன் ஜியாவை வரவேற்ற ராஜீவ், அவருடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது உண்மை.

2வது பார்வை:

ஆண்டு 2005. பாகிஸ்தான் முஷாரப் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியாவில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஒரு நாள் போட்டியைக் காண முஷாரப் வந்தார். அவரும், மன்மோகன் சிங்கும் இணைந்து இப்போட்டியைக் கண்டு களித்தனர்.

ஆனால் இப்போட்டிக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உறவில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

3வது பார்வை:

இப்போது மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண இருநாட்டு ரசிகர்களைப் போலவே இருநாட்டுத் தலைவர்களும் தயாராகி விட்டனர்.

கிரிக்கெட்டில் இந்த இரு நாடுகளும், கடுமையான மோதலைக் கொடுக்க ஒருபோதும் தவறியதில்லை. 1992ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய விக்கெட் கீப்பர் கிரன் மோரேவை மியான்தத் கிண்டலடித்த விதம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலவில்லை.

அதேபோல வெங்கடேஷ் பிரசாத்தும், அஜார் மெஹமூதும் 2000மாவது ஆண்டு மோதிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல 2007ம் ஆண்டு ஷாஹித் அப்ரிதியும், கெளதம் கம்பீரும் உரசிக் கொண்டதும் நினைவிருக்கலாம்.

அதேசமயம், 1965ம் ஆண்டு இரு நாடுகளும் போரில் குதித்தபோது வேண்டாம் சண்டை, அமைதித் தீர்வு காண முயற்சியுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஹனீப் முகம்மதும், இந்திய ஜாம்பவான் மன்சூர் அலி கான் பட்டோடியும் கூட்டாக அழைப்பு விடுத்தது நிறைய பேருக்கு மறந்து போயிருக்கலாம்.

கிரிக்கெட்டில் இரு நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் கூட இந்திய ரசிகர்கள் தங்களது தோழமையை வெளிப்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக சென்னை ரசிகர்கள்.

1999ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி இரு நாடுகளும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடின. அப்போது சயீத் அன்வர் உலக சாதனை படைத்தார் ரன் குவிப்பில். அதை அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டி கை தட்டி உற்சாகமாக வரவேற்றதை பாகிஸ்தானியர்களே எதிர்பார்க்கவில்லை. அந்த அன்பில் அவர்கள் நெகிழ்ந்து போய் விட்டனர். அப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோது, ஏதோ இந்தியா வெற்றி பெற்றால் எப்படி வரவேற்பார்களோ அதேபோல ரசிகர்கள் எழுந்து நின்று பாகிஸ்தான் அணியைப் பாராட்டியது கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் ஆட்டம்தான் என்பதை நிரூபிப்பதாக அமைந்தது.

அதேபோல இந்திய அணி நீண்ட காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பந்து வீச்சாளர் எல்.பாலாஜி அபாரமாக பந்து வீசி பாகிஸ்தானை நிலை குலையச் செய்த விதத்தை அந்த நாட்டு அதிபர் முஷாரப் வெகுவாகப் பாராட்டினார்.

இப்படி இரு நாடுகளும் சண்டைக் கோழிகளாகவே இருந்தாலும் கூட கிரிக்கெட் ஆட்டத்தில் அவ்வப்போது தோழமையையும் காட்டத் தவறியதில்லை இரு நாடுகளும்.
***********************************
******************

அலுத்துக்கொள்ளும் அமெரிக்க பெண்கள்

அமெரிக்கா பணிபுரியும் பெண்களில் 38 சதவீதம் பேர் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான திறமையும், அனுபவமும் ‌இருக்கும் போதும் கூட அவர்களை வி‌ட குறைவாகவே சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர். பணியிடத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றி அமெரிக்காவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் அமெரிக்க பெண்கள் பலர் பணியிடத்தில் தங்களுக்கு சமத்துவம் இல்லை என தெரிவித்துள்ளனர். 39 சதவீத பெண்கள் பணியில் புரோமோஷன் வழங்குவதில் தாங்கள் சற்று பின்னுக்குத் தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

"மரண தண்டனை மனோபாவம் நீடிக்கிறது"

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 105 பேருக்கும் மேலானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆயினும் அதில் யாருக்கும் இந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும் அம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக இயக்கங்கள் நடத்தப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் மரண தண்டனைகள் அளிக்கும் போது அதிகரித்து வருகிறது என்று கூறிய இந்தியாவில் மரண தண்டனைகளுக்கு எதிரான தேசிய இயக்கத்தின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.வி.ராஜதுரை, இந்தியாவில் நீதித்துறை மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் மரண தண்டனையை சட்டப்புத்தகத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவமே இருப்பதாகக் கூறினார்.

1980ல் மரணதண்டனை இந்திய அரசியல் சட்டத்தின் 21வது பிரிவை மீறுகிறதா என்ற வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை அபூர்வத்திலும் அபூர்வமான வழக்குகளில் மட்டும் வழங்கவேண்டும் என்று கூறியது. ஆனால் எது அபூர்வத்திலும் அபூர்வமான கொலை என்பது பற்றிய வரையறை இல்லை என்றார் அவர்.

மரண தண்டனை எப்போதும் கொலைகளையோ அல்லது பாலியல் ரீதியான கொடும் குற்றங்களையோ தடுக்கும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல, இன்று ஒருவருக்கு ஒரு குற்றச்செயலுக்காகத் தரப்படும் மரண தண்டனை , பல ஆண்டுகள் கழித்து, வேறொரு இடத்தில் அதே மாதிரியான குற்றத்தை செய்யவிடாமல் தடுக்கும் என்று கூற முடியாது என்றார் ராஜதுரை.

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படாவிட்டாலும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அரிதாகவே இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட ராஜதுரை, இது இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் நிர்ப்பந்தங்களால் ஏற்படுகிறது என்றார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் பதவி வகித்த இரு இந்தியக் குடியரசுத் தலைவர்கள், மரண தண்டனைகளை நிறைவேற்ற ஒப்புதல் வழங்காததும் ஒரு காரணம் என்றார் ராஜதுரை.

வெளிநாட்டில் பிச்சைகாரர்கள் எப்படி ?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகதான் நள்ளிரவில் மின்தடை!?

அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் இருக்கும் நிலையில், கோடை கால மின் உற்பத்தி குறைவால், இரவிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருகிறது. "வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகதான் நள்ளிரவில் மின்தடை' என, கட்சிகளின் தொடர் புகார் காரணமாக, "மதுரை நகரில் மின்தடை ஏற்பட்டால், அந்த பகுதியில் பணம் பட்டுவாடா நடக்கிறதா' என கண்காணிக்க போலீசாருக்கு கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.தேர்தல் கமிஷன் நடவடிக்கையால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் கட்சிகள் தவிக்கின்றன. இருப்பினும் எப்படியாவது அவர்களை "கவனிக்க' வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றன. தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி, வாக்காளர்களின் பெயர், விபரங்கள், இலவச "டிவி', காஸ் உள்ளதா, தங்கள் கட்சிக்கு ஆதரவு தருபவரா? அரசின் உயிர் காக்கும் திட்ட சலுகை பெற்றவரா, இல்லையா, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை பெற்றவரா, வெளியூர்களில் வசித்தால் அந்த முகவரி மற்றும் மொபைல் போன் எண் உட்பட 14 வகையான விபரங்களை, தேர்தல் விதிமுறைகளுக்கு மீறாக சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து "கணக்கெடுப்பு' நடக்கிறது. இதை கண்காணிக்க, போலீசாரை நம்பாமல் எதிர்க்கட்சிகள் அந்தந்த வார்டில் சிலரை நியமித்துள்ளன. இவர்கள் கொடுக்கும் தகவல்களால்தான் தற்போது பணம் பட்டுவாடா குறித்த விபரம் தெரியவருகிறது. இந்நிலையில், தினமும் நள்ளிரவு அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை இயல்பாக மின்தடை செய்யப்படுகிறது. "இந்நேரத்தில் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்' என்று தகவல் பரவியதால், சபல வாக்காளர்கள் "காற்று' வாங்க கதவை திறந்து வைத்திருக்கின்றனர். "மின்தடையை பயன்படுத்தி பண வினியோகம்' குறித்து தொடர் புகார் வருவதால், மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். மின்தடை ஏற்பட்டவுடன், உடனடியாக நுண்ணறிவு போலீசார் அந்த பகுதிக்கு சென்று, பணம் பட்டுவாடா நடக்கிறதா என கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்பதே அது. மேலும், நகரில் இரவு 12 மணிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் மின்தடை ஏற்படுத்தக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதால், நள்ளிரவு மின்தடையால் ஏற்படும் பொதுமக்களின் புழுக்கத்திற்கு "விடிவு' ஏற்பட்டுள்ளது. "பணபுழக்கத்திற்கு' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'பணத்தை அறவழியில் செலவிடுங்கள்'- பில்கேட்ஸ்


மைக்ரோ சாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ், பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் ஆகியோர் இந்தியாவிலுள்ள பெரும் செல்வந்தர்கள் சிலரை சந்தித்து நற்பணிகளில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.மற்றவர்கள் இந்தப்பணிகளில் போதுமானளவு ஈடுபடுவதில்லையென குற்ற உணர்வு கொள்ள வைப்பது தமது நோக்கமல்ல என்று பில்கேட்ஸ் கூறுகிறார்.

பில் கேட்ஸூம், வாரன் பஃப்பெட்டும் அமெரிக்காவிலும் சீனாவிலும் உள்ள பல கோடீஸ்வரர்களை ஈர்த்து அவர்கள் தமது சொத்தில் பெரும்பகுதியை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தச் செய்யும் முயற்சில் வெற்றியடைந்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இந்தியாவில் நூறு கோடி டொலர்களை தாண்டிய பெறுமதியில் சொத்துக்களை வைத்திருக்கும் 55 பேரில் மிகச் சொற்பமானவர்களே இந்தப்பணிகளில் தமது ஆர்வத்தைக் காட்டியுள்ளனர்.

அண்மையில் விப்ரோ நிறுவன அதிபர் அசீம் பிரேம்ஜீ, 2 பில்லியன் டொலர் பெறுமதியான நன்கொடை நிதியொன்றை உருவாக்கி கிராமப்புற இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இன்னும் பல இந்திய செல்வந்தர்கள் இந்த வழியைத் தொடர்வார்கள் என்று பில்கேட்ஸூம் வாரன் பஃப்பெட்டும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தமது சொத்துக்களில் கணிசமான அளவை பொதுப் பணிகளில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை


குடும்ப ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* விலைவாசி கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வரப்படும்.

* “எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.

* நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.

*அத்மீறி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக் கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

* ஆண்டிற்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும் பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவச மாக வழங்கப்படும்.

* இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.

* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட மருத்துவ மனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.

* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் - அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.

* வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.

* வீடில்லா ஏழை குடும் பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

* கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.

* வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

* மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத் தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப்படை அமைக்கப்படும்.

* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம்.

* தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.

* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* 30,000 ஹெக்டேர் நிலப் பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.

* விவசாய கருவிகளை அ.தி.மு.க. அரசு இலவசமாக வழங்கும்.

* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.

* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப் படுத்துவோம்.

* விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்.

* கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப் பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப் பாளர்களுக்கும், விவசாயி களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.

* 2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மொகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* 2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 மெகாவாட் சூரிய சக்தி பூங்கா உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.

* தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

* கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சா ரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம்.

* நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.

* பருத்தி உற்பத்தியை மற்றும் விளைச்சலை இரண்டு மடங்காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும்.

* 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.

* 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இதன் மூலம் கிராமப் புறங்களில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

* 30லிருந்து 40 கிராமங்கள் வரை இணைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான அடிப்படை சாலை மற்றும் கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு இணைப்புகள், அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.

* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.

* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

* பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மாணவர் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

* பல்கலைக்கழகங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, சீர்படுத்தப்படும்.

* மாணவர்களின் பன்முக திறனை ஊக்குவிக்க தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும்.

* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும். * 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். * பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.

* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும்.

* மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும்.

* படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பல்வேறு தொழில் பூங்காக்களில் 25 சதவிகிதம் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.

* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.

* பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்படும்.

* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.

* தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

* 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

* முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

* அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும்.

* தமிழ் நாட்டு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.

* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து அதைப் பற்றி அறிய, திருக்குறள், தமிழ் காப்பியங்கள், இலக்கண இலக்கியங்கள், புராண, இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.

* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை கொடுக்கப் படும். அரசு ஊழியர் நலன்

* அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தி யாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும்.

* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் அவ்வப் போது நிறைவு செய்யப்படும்.

* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.

* மாற்றுத் திறனாளிகளுக் கென 3 சதவீத இட ஒதுக் கீடு அரசுப் பணியில் ஒதுக் கப்படும். * அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் உடனடியாக மாற்றம் செய்யப்படும்.

* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமை யாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

* டி.டி.எச். சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மொபைல் மின்அணு ஆளுமை திட்டம் செயல் படுத்தப்படும்.

* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனபடுத்தப்படும்.

* சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வி.ஐ.பி. மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழிவகை செய்யப்படும்.

* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.

* காவல் துறையினருக்கு சிறப்பு மன வளக்கலை பயிற்சி நடத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நடத்தப்படும்.

* ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

* நடைமுறையில் உள்ள மதுரை - தூத்துக்குடி - அருப்புக்கோட்டை காரிடார் - “தன்னிறைவு கொண்ட இன்டஸ்டிரியல் காரிடார்” ஆக அறிவிக்கப்பட்டு அதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்கப்படத் தேவையான பல்முனை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அதன் மூலம் தமிழகத்தை கப்பல் கட்டும் துறையில் முன்னோடியாக்குவோம்.

* தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்“ ஏற்படுத்தத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்தி கரிக்கத் தேவையான தொழில் நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராம நிர்வாக அலு வலர்கள் தேர்வு முடிவுகள் உட்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.

* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல் படுத்தப்பட மாட்டாது.

* உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல் படுத்தப்படும்.

* 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.

* சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

* போக்குவரத்து தொழி லாளர் நலன் பேணப்பட சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.

* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடை முறைபடுத்தப்படும்.

குத்தகைக்கு குட்டித் தீவுகள்.சிறந்த வங்கியாக எச்டிஎப்சி தேர்வு


இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக புத்தளம் மாவட்டம் கற்பிட்டிப் பகுதியில் இரு தீவுகளை வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட சுற்றுலா நிருவனங்களுக்கு 30 வருட குத்தகைக்கு விட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெள்ளைத்தீவு மற்றும் இன்பத்தீவு ஆகியன இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தளமாகக் கொண்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சரான லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன அறிவித்துள்ளார்.

ஆனால் இந்த தீவுகள் தம்மால் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்ற அப்பகுதி மீனவர்கள், இவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடுவத்டு தமது வாழ்வியலைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக தமிழோசையுடன் பேசிய தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கற்பிட்டிப் பிராந்திய இணைப்பாளரான ஜே. பத்மநாதன், சுமார் 600 மீனவ குடும்பங்கள் வரை இந்தத் திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கூறுகிறார்.

*************************************************************

சிறந்த வங்கியாக எச்டிஎப்சி தேர்வு

இந்தியாவின் சிறந்த சில்லறை வணிக வங்கியாக எச்டிஎப்சி வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தனியார் துறையில் மிகப் பெரிய வங்கியாகக் கருதப்படுகிறது எச்டிஎப்சி வங்கி. ஆசியன் பேங்கர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந் வங்கிகளைக் கண்டறிந்து அறிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க பகுதிகளின் சிறந்த வங்கிகளைத் தேர்வு செய்து அறிவித்தது ஆசியன் பேங்கர்ஸ்.

இதில் இந்தியாவின் சிறந்த சில்லறை வர்த்தக வங்கியாக எச்டிஎப்சி தேர்வு பெற்றுள்ளது. 29 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 150 நிதி அமைப்புகளை இதற்காக பரிசீலனை செய்தது ஆசியன் பேங்கர்ஸ் அமைப்பு.

Pakistan vs West Indies Full Match Highlights World Cup 2011

உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி சுலபமாக முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தான் சுழலில் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 112 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக வெளியேறியது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள மிர்புர் நகரில், நேற்று நடந்த முதலாவது காலிறுதியில் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. "டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
மூன்று மாற்றம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. கிறிஸ் கெய்ல், சந்தர்பால், கீமர் ரோச் வாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு பதிலாக எட்வர்ட்ஸ், பென், ஆன்ட்ரி ரசல் நீக்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ரெஹ்மானுக்கு பதிலாக சயீத் அஜ்மல் வாய்ப்பு பெற்றார்.
சுழல் ஜாலம்:
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல், டேவன் ஸ்மித் ஜோடி துவக்கம் கொடுத்தது. உமர் குல் வேகத்தில் கெய்ல் (8) நடையை கட்டினார். ஹபீஸ் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் டேவன் ஸ்மித் (7), டேரன் பிராவோ (0) அவுட்டானார்கள். சிறிது நேரம் தாக்குப்பிடித்த சர்வான் (24), போலார்டு (1), டேவன் தாமஸ் (0) உள்ளிட்டோர் அப்ரிதி சுழலுக்கு பலியாகினர். பின், சயீத் அஜ்மல் சுழலில் கேப்டன் சமி (1), பிஷூ (0) வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 27.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து திணறியது.
சந்தர்பால் ஆறுதல்:
பின் இணைந்த அனுபவ சந்தர்பால், கீமர் ரோச் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக தடுத்து ஆடிய இந்த ஜோடி படுமந்தமாக ரன் சேர்த்தது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த போது கீமர் ரோச் (16), அப்துல் ரசாக் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த ரவி ராம்பால் (0), அப்ரிதி சுழலில் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 112 ரன்களுக்கு சுருண்டது. சந்தர்பால் (44) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 4, முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல் தலா 2, உமர் குல், அப்துல் ரசாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அசத்தல் வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்தை வெளுத்து வாங்கிய ஹபீஸ், ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய இந்த ஜோடி 20.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கம்ரான் அக்மல் (47), ஹபீஸ் (61) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது குறைந்தபட்சம்
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 112 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, <உலக கோப்பை அரங்கில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கென்யா (93 ரன்கள், 1996), ஆஸ்திரேலியா (110 ரன்கள், 1999) அணிகளுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.
* இது, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 9வது குறைந்த பட்ச ஸ்கோர். கடந்த 2004ல், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 54 ரன்களுக்கு சுருண்டதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான ஸ்கோர். ஐந்து முறை 100 ரன்களுக்கும் குறைவாக சுருண்டது.
---
ஏழாவது முறை
நேற்று வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் ஏழாவது முறையாக (1979, 83, 87, 92, 96, 99, 2011) காலிறுதிக்கு முன்னேறியது.
* இதில் கடந்த 1979, 83, 87ல் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, கடந்த 1992ல் முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 1996ல் காலிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, 1999ல் பைனல் வரை முன்னேறியது. கடந்த 1975, 2003, 2007ல் நடந்த தொடர்களில் முதல் சுற்றோடு வெளியேறியது.
---
முதன்முறை
வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக யு.ஏ.இ., (1996), நியூசிலாந்து (1999) அணிகளுக்கு எதிராக தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
* இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக நியூசிலாந்து (1986), வங்கதேசம் (2008) அணிகளுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வருகிறது பாக்.,
கடந்த 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணி, தனது பயணத்தை ரத்துசெய்தது. இதனால் இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் உட்பட அனைத்து வித விளையாட்டு போட்டிகளும் ரத்தானது. அதன்பின், இரு அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர் நடக்கவே இல்லை. தவிர, பாகிஸ்தான் அணியும் இந்தியா வரவில்லை.
இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற அனைத்து லீக் போட்டிகளும் இலங்கையில் நடந்தன. இந்நிலையில் வங்கதேசத்தில் நடந்த உலக கோப்பை காலிறுதியில் வென்ற பாகிஸ்தான், வரும் 30ம் தேதி, நடக்கும் அரையிறுதியில் பங்கேற்க இந்தியா வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்று முன்னதாகவே நினைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, இந்திய செல்வதற்கு தூதரகத்திடம் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்தனர்.


100 ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு நிகழ்ச்சி, குருசாமிபாளையத்தில் கோலாகலமாக நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம், சிவசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 11ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்வாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 19ம் தேதி ஸ்வாமிக்கு திருக்கல்யாணமும், திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, தொன்று தொட்டு நடந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமிபாளையத்தில், கைத்தறி நெசவு முக்கிய தொழிலாக விளங்குகிறது. அப்பகுதியில், கைத்தறிக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் பிளேக் நோயால் இவ்வூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முஸ்லிம் மதத்தினர் சிலர் ஊருக்கு பொதுவான இடத்தில் சென்டா மரம் என்று அழைக்கப்படும் புளியமரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "பாத்தியா ஓதி' பொட்டுக் கடலையும், நாட்டு சர்க்கரையும் வழங்கினர். அதை தொடர்ந்து நோய் குணமானதாக கூறப்படுகிறது. இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. மேலும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகவும், முஸ்லிம் மதத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன், ஊர் பெரிய தனக்காரர் கேசவமூர்த்தி தலைமையில், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளி வாசலுக்கு, தேங்காய் பழத்தட்டுடன் சென்று விழாவுக்கு அழைப்பர். முஸ்லிம் மதத்தினரும் விழாவில் பங்கேற்று, வீடு தோறும் சந்தனம் பூசுவார்கள். அந்நிகழ்ச்சி நேற்று நடந்தது,

சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து கிழக்கு தெரு பள்ளி வாசல் நிர்வாகி ஹனிபா தலைமையில், அப்துல் அஜிஸ், கவுன்சிலர் காதர்பாஷா உள்ளிட்டவர்கள், குருசாமிபாளையம் வந்தனர். சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, வெள்ளைக்கொடி ஏந்திச் சென்று வீடுகள் தோறும் சுவர்களில் சந்தனத்தை பூசினர். தொடர்ந்து, பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடி ஏற்றினர். அப்போது ஊர் பெரியதனக்காரர் கேசவமூர்த்தி கைகளில், பள்ளி வாசல் ஹனிபா சந்தனம் பூசினார். அவருக்கு கேசவமூர்த்தி சந்தனம் பூசினார். ஒருவருக்கு ஒருவர் மாலைகள் மாற்றி கொண்டனர். தொடர்ந்து "பாத்தியா ஓதி' முஸ்லிம்கள் நாட்டு சர்க்கரையும், பொட்டுக் கடலையும் வழங்கினர். நிகழ்ச்சியில், முஸ்லிம் மதத்தினர், நெசவாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருவதால், உலக அமைதி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கரூர் - குதூகலத்தில் வாக்காளர்கள்!

கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியத் தொகுதியில் 'கரன்ஸி மழை' தொடங்கி விட்டதாம். கொளுத்தும் கடும் வெயிலுக்கு மத்தியில் வந்துள்ள இந்த 'மாமழை'யைப் பார்த்து மக்கள் மகிழ்ந்து போயுள்ளனராம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில்தான் இந்த கரன்சி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறதாம். இந்த மாவட்டத்தில் கரூர், அவரக்குறிச்சி, கிருஷ்ணராபுரம், குளித்தலை என நான்கு தொகுதிகள் உள்ளது.

இதில் உள்ள ஒரு தொகுதியில் இந்திய பணக்காரர்களில் ஒருவராக உள்ள ஒருவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பலர் களம் இறங்கி இரவு பகலாக வேலை செய்து வருகின்றார்களாம்.

'மாலை 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது' என்று வடிவேலு படத்தில் வசனம் வரும். ஆனால் இந்த தொகுதியிலோ ஆறு மணிக்கு மேல்தான் சுறுசுறுப்பாக பணியில் இறங்குகிறார்களாம்.

குழு குழுவை கிராமங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள தங்களுக்கு ஆதரவானவர்களை சந்தித்து கரன்சிகளை கையில் அழுத்தி, மறக்காதீர் என்று கேட்டு தங்களது சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி திரும்புகிறார்களாம்.

இது குறித்து எதிர் தரப்பு வேட்பாளர், தேர்தல் அதிகாரியான கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு சென்றாராம். ஆனால் சரிவர நடவடிக்கை இல்லையாம். இதனால் கலெக்டர் மீதே குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளனவாம்.

சிறந்த காணொளிகள்
ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு

பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார்.

ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.

அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:

ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.

அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் 'நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்' என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.

இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம்.

ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார் ரஜினி.

இந்த கூட்டத்தில், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், இரா.செழியன், படஅதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், எஸ்.தாணு, எடிட்டர் மோகன், புஷ்பாகந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

உலகக் கோடீஸ்வரர் வாரன் பஃபே பெங்களூர் வருகிறா


உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவருமான வாரன் பஃபே இந்த வாரம் இந்தியா வருகிறார்.

இந்த வருகையின் போது அவர் பார்க்க விரும்பும் முதல் இந்திய நகரம்... பெங்களூர்தான். இங்குள்ள டேகு டெக் இந்தியா என்ற நிறுவனத்தைப் பார்வையிடுகிறார் வாரன் பஃபே. அதென்ன இந்த நிறுவனத்தின் மீதுமட்டும் அவ்வளவு அக்கறை?

2000-ல் நிறுவப்பட்ட இந்த டேகு டெக், தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎம்சியின் இந்தியப் பிரிவாகும். டங்ஸ்டன் கார்பைட் இழைகள் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகளை வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹாத்வே வாங்கியுள்ளது.

இந்த முதலீட்டைப் பெற்ற சில ஆண்டுகளுக்குள் அதற்கான வருவாயை இரட்டிப்பாக்கிக் கொடுத்துள்ளது டேகு டெக். அதனால்தான், தனது இந்தியப் பயணத்தின் முதல் விசிட்டே பெங்களூராகத்தான் இருக்க வேண்டும் என வாரன் பஃபேயை முடிவு செய்தாராம்.

இதுகுறித்து டேகு டெக் நிறுவனத்தின் தலைவர் எல் கிருஷ்ணன் கூறுகையில், "வாரன் பஃபே வருகிறார் என்று தெரிந்ததுமே எனது போன்கள் ஓயாமல் அலறிக் கொண்டுள்ளன. அத்தனை விசாரிப்புகள். அவரது வருகை, ஒட்டுமொத்த இந்தியாவையும் எங்கள் நிறுவனத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது..." என்றார்.

இந்தப் பயணத்தின்போது, பெங்களூரில் உள்ள மற்ற பெரும் தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் சிஇஓக்களையும், சிஐஐயின் உறுப்பினர்களையும் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் வாரன் பஃபே.

தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம்

1.விருத்தாச்சலம்

2. திருக்கோவிலூர்

3. ரிஷிவந்தியம்

4. திருச்செங்கோடு

5. ஆரணி

6. செங்கம் (தனி)

7. பட்டுக்கோட்டை

8. கும்மிடிப்பூண்டி

9. திருத்தணி

10. சோளிங்கர்

11. தர்மபுரி

12. கங்கவல்லி (தனி)

13. மதுரை மையம்

14. கூடலூர் (தனி)

15. திருவாடானை

16. திட்டக்குடி (தனி)

17. குன்னம்

18. மயிலாடுதுறை

19. திருவெறும்பூர்

20. சேலம் (வடக்கு)

21. ராதாபுரம்

22. சூலூர்

23. விருகம்பாக்கம்

24. ஓசூர்

25. லால்குடி

26. பேராவூரணி

27. செங்கல்பட்டு

28. எழும்பூர் (தனி)

29. செஞ்சி

30. ஈரோடு (கிழக்கு)

31. கம்பம்

32. சேந்தமங்கலம்

33. திருப்பரங்குன்றம்

34. விருதுநகர்

35. ஆத்தூர்

36. பண்ருட்டி

37. அணைக்கட்டு

38. பத்மநாபபுரம்

39. வேப்பணஹள்ளி

40. மேட்டூர்

41. ஆலந்தூர்.

அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
பொன்னேரி தனி - பொன். ராஜா
திருவள்ளூர் - பி.வி. ரமணா
பூந்தமல்லி - மணிமாறன்
ஆவடி - அப்துல் ரஹீம்
அம்பத்தூர் - வேதாச்சலம்
மாதவரம் - வி.மூர்த்தி
திருவொற்றியூர் - குப்பன்
ஆர்கே நகர் - வெற்றிவேல்
கொளத்தூர் சைதை துரைசாமி
வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
ராயபுரம் - ஜெயக்குமார்
துறைமுகம் - பழ. கருப்பையா
ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
அண்ணா நகர் - கோகுல இந்திரா
சைதாப்பேட்டை - செந்தமிழன்
தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
மயிலாப்பூர் - ராஜலட்சுமி
வேளச்சேரி- எம்.கே. அசோக்
சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
பல்லாவரம் - தன்சிங்
தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
அரக்கோணம் தனி - சு.ரவி
காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
மைலம் - கே.பி.நாகராஜன்
திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
வானூர் தனி - ஜானகிராமன்
விழுப்புரம் - சி.வி.சண்முகம்
உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
சங்கராபுரம் - ப.மோகன்
கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
ஏற்காடு - செ.பெருமாள்
ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
எடப்பாடி - கே.பழனிச்சாமி
சங்ககிரி - விஜயலட்சுமி
சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
சேலம் - தெற்கு செல்வராஜ்
வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
ராசிபுரம் தனி - தனபால்
நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
குமாரபாளையம் - பி.தங்கமணி
ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
பவானி - பி.ஜி.நாராயணன்
அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
உதகமண்டலம் - புத்தி சந்திரன்
மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
கோவை வடக்கு - தா.மலரவன்
தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
நத்தம் - இரா.விசுவநாதன்
வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
கரூர் - வி.செந்தில்பாலாஜி
கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
குளித்தலை -பாப்பா சுந்தரம்
மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
மணச்சநல்லூர் - டி.பி.பூனாட்சி
முசிறி - என்.ஆர்.சிவபதி
துறையூர் தனி - டி. இந்திரா காந்தி
பெரம்பலூர் தனி - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
அரியலூர் - துரை மணிவேல்
ஜெயங்கொண்டம் - பா. இளவழகன்
நெய்வேலி - எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
கடலூர் - மு.சி. சம்பத்
குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இராஜேந்திரன்
புவனகிரி - செல்வி ராமஜெயம்
காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
சீர்காழி தனி - ம. சக்தி
பூம்புகார் - பவுன்ராஜ்
நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
வேதாரண்யம்- என்.வி.காமராஜ்
மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன்
நன்னிலம் - ஆர்.காமராஜ்
திருவிடைமருதூர் தனி - பாண்டியராஜன்
கும்பகோணம் - இராம. ராமநாதன்
பாபநாசம் - துரைக்கண்ணு
திருவையாறு - ரத்தினசாமி
தஞ்சாவூர் - ரங்கசாமி
ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
கந்தர்வக்கோட்டை தனி - ந.சுப்பிரமணியன்
விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
திருமயம் - பி.கே.வைரமுத்து
ஆலங்குடி - கு.ப.கிருஷ்ணன்
அறந்தாங்கி - மு.ராஜநாயகம்
காரைக்குடி - சோழன் சித.பழனிச்சாமி
திருப்பத்தூர் - ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
மானாமதுரை தனி - ம.குணசேகரன்
மேலூர் - ஆர்.சாமி
மதுரை கிழக்கு - கே.தமிழரசன்
சோழவந்தான் தனி -எம்.வி. கருப்பையா
மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
திருமங்கலம் - ம.முத்துராமலிங்கம்
ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
ராஜபாளையம் - கே.கோபால்சாமி
சாத்தூர் - ஆர்.பி.உதயக்குமார்
சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி
அருப்புக்கோட்டை - வைகைச் செல்வன்
பரமக்குடி தனி - எஸ்.சுந்தர்ராஜ்
முதுகுளத்தூர் - மு.முருகன்
விளாத்திகுளம் - ஜி.வி மார்க்கண்டேயன்
தூத்துக்குடி - ஏ.பால்
திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
கோவில்பட்டி - கடம்பூர் செ.ராஜு
சங்கரன்கோவில் தனி - சொ.கருப்பசாமி
வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
குளச்சல் - பி.லாரன்ஸ்
கிள்ளியூர் - ஆர்.ஜார்ஜ்

காலிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதல் (india vs West indies highlights)

ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தன.குருப் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அப் பிரிவின் கடைசி போட்டியில் போட்டியில் ஜிம்பாப்வே கென்ய அணியை 161 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இருந்தும் இந்த இரு அணிகளும் ஏ பிரிவில் கால் இறுதிக்கு தகுதி பெறவில்லை. அதே போல கனடா அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று குருப் 'பி' பிரிவில் சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி ஆகியவை அடுத்த கட்டமான காலிறுதிக்கு தகுதியடைந்துள்ளது. இப்பிரிவில் நெதர்லாந்து, வங்கதேசம், அயர்லாந்து ஆகிய நாடுகள் தகுதிபெறவில்லை.

புதன்கிழமை நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும், வியாழக்கிழமை இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடும்.

மூலிகை அறிமுகம் 8 - ஐயம்பனா1) வேறு பெயர்கள்: Apana, Ayapana, Inpana

2) தாவரப் பெயர்கள்: Eupatdrium Triplinerve

3) வளரும் தன்மை: இது ஒரு அரிதான மூலிகைச் செடி. இது முதன்முதலில் மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்டது. இது அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியது. இது மருத்துவ குணமுடைய செடி. 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டு கெட்டியாகவும் வேர் விட்டுப் படரும் தன்மையும் கொண்டது. இலைககள் மென்மையாக கரும்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இலைகள் எதிர் வரிசையில் 5 முதல் 6 சென்டிமீட்டர் நீளத்தில் வாசனையுடன் கூர்மையான நுனியைக் கொண்டிருக்கும். இது முதிரும் போது 6 முதல் 7 மில்லி மீட்டர் நீளமுள்ள சுமார் 20 மலர்கள் நீல நிறத்துடன் சிறிய காம்புகளைக் கொண்டதாக ஐந்து இதழ்களுடன் பூக்கும். இதழ்கள் ஒவ்வொன்றும் 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது. இந்த இலையில் 1.14 சதவீதம் ‘அபயன்’ எண்ணெய் உள்ளது. இது கட்டிங் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

4) பயன்படும் உறுப்பு: இலைகள் மட்டும்.

5) பயன்கள்: இது தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால் கேரளா மாநிலத்தில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பேர் இதை ரகசியமாக வைத்துக் கொண்டு மூல நோயைக் குணப்படுத்தி பொருள் ஈட்டுகிறார்கள். என் கேரளா நண்பர் மூலம் அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால் மூல நோய் உள்ளவர்கள் அல்லது நோய் ஆரம்ப காலமாக உள்ளவர்கள் தினமும் தொடர்ந்து அதிகாலை வெறும் வயிற்றில் இரண்டு முற்றிய ஐயம்பனா இலைகளை பத்து நாட்கள் சாப்பிட்டால் பூர்ண குணமடையும். இதன் பயன்பற்றி ‘Koster’ என்பவர் கூறும் போது இதன் புளிப்பான இலையை சாப்பிடும் போது குளிர் காய்ச்சலைக் குணப்படுத்துவதுடன், வயிற்றுப் போக்கையும் குணப்படுதுக்கிறது என்றார்.

தலைவலி வந்தால் இதன் இலையை ஆமணக்கு விளக்குச் சுடரில் வாட்டி முன் நெற்றியில் வைத்தால் குணமடையும். இதன் ஆயிலை மருந்தாகவும் டானிக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இதை குளிர்பானமாக பயன்படுத்தும்போது குடல்புண், சீதபேதி, இரத்தக் கடுப்பு, அல்சர் போன்ற நோய்களும் இதனால் குணமடைகிறது.

Bouton என்பவர் தனது ‘Med Plants of Mauritius’ என்ற புத்தகத்தில் 96ம் பக்கத்தில் ‘it appears to hold a high place among the medicinal plants of the Mauritius, being there in daily use in the form of infusion given in dyspepsia and other affection of the bowels and lungs’.

இதை அளவுடன் அருந்தினால் தாதுபுஸ்டியாகும், மேலும் இதை டானிக்காவும் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றைக் காலி செய்துவிடும்.

கூலிப்படையை வைத்து காரை உடைத்த கோடீஸ்வரர்

ரிப்பேரை சரிசெய்யமுடியாத கோபத்தில், கோடிக்கணக்கான மதிப்புடைய சூப்பர் காரை சீன கோடீஸ்வரர் ஒருவர் கூலிக்கு ஆள் அமர்த்தி நடுரோட்டில் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவின் கிங்டாவோ நகரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஆசை ஆசையாய் பிரபல நிறுவனத்தின் சூப்பர் காரை பிரிட்டனில் இறக்குமதி செய்து வாங்கினார். சூப்பர் கார் வாங்கியதும் கிங்டாய் நகரத்தை ஒரு ரவுண்டு வந்து சந்தோஷத்தில் திளைத்தார்.

ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. அவரது சூப்பர் காரின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு ஆங்காங்கே நின்று கொண்டது. புதிதாக வாங்கிய காரின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், வருத்தமடைந்த அவர் கார் வாங்கிய டீலரிடம் எடுத்து சென்றார்.

சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்து வீட்டுக்கு எடுத்து வந்ததும், மீண்டும் கார் 'ஜோலி' கொடுக்க ஆரம்பித்தது. கார் ரிப்பேர் ஆவதும், அதை டீலருக்கு எடுத்து சென்று சர்வீஸ் செய்வதுமே பொழப்பாகி போனதால், வெறுத்துபோனார் அந்த கோடீஸ்வரர்.

என்னதான் கோடீஸ்வரராக இருந்தாலும், கையிலும், பையிலும் பணம் கொட்டி நிரம்பி வழிந்தாலும், சாதாரண மனிதர்தானே அவரும். மேலும் அவரது வெந்த புண்ணில், 'ஆசிட்' ஊற்றுவது போல, மெக்கானிக்குகளும் தங்கள் பங்குக்கு காரின் பம்பர் மற்றும் சேஸிஸ் ஆகியவற்றை சேதப்படுத்தினர் 'வெள்ளையாடி' விட்டனர்.

பயங்கர டென்ஷனான அவர், கோபத்தின் உச்சத்திற்கு சென்று டீலரை அணுகி தகராறு செய்தார். கோடீஸ்வரரின் சுத்தமான ஆங்கில வார்த்தைகளை சகிக்க முடியாத அந்த டீலர், பிரிட்டனில் உள்ள சூப்பர் கார் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு நேராக போனை போட்டு சீன பார்ட்டியின் கையில் கொடுத்துவிட்டார்.

அவரிடம், இங்கிலாந்து நிர்வாகிகள் ஏதேதோ சமரசம் செய்து பார்த்தனர். ஆனால் நம்மவர் விடவில்லை. வறுத்தெடுத்து விட்டார் 'நூடுல்ஸை' வேக வைப்பது போல.

பின்னர் வீட்டுக்கு வந்தும் கோபம் அடங்காத அவர், சட்டென ஒரு முடிவுக்கு வந்தார். இனியும் இந்த காரை கட்டிக்கொண்டு அழுவதைவிட நிர்வாகிககளுக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில், காரை நடுரோட்டில் உடைக்க முடிவு செய்தார்.

இதற்காக, காசு கொடுத்து ஒரு குழுவினரை பணிக்கு அமர்த்தினார். கிங்டாவோ நகரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை சுற்றிலும் பெரிய பெரிய சுத்தியல்களுடன் நின்ற "உடைப்பு" குழுவினர் காரை சுற்றிவளைத்து அடித்து உடைத்தனர்.

கருப்பு நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புடைய அந்த கார் உடைப்பு குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி சிறிது நேரத்தில் சிக்கி சின்னாபின்னமானது. அப்போதுதான் அந்த கோடீஸ்வரரின் கோபம் தணிந்தது. நூற்றுக்கணக்கானோர் மத்தியில் நடந்த இந்த கார் உடைப்பு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்களால் நம்ப முடிகிறதா இவள் ஆண் என்று ?


நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ்!

பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர் களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

"முகேஷ் அம்பானியை இந்தப் பதவியில் அமர்த்தியதன் மூலம் பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் உலகளாவிய பலன்களைப் பெறுவார்கள். இடர்ப்பாடு மேலாண்மையில் தனி நிபுணத்துவமும், பல்வேறுபட்ட வர்த்தகப் பிரிவுகளைக் கையாளுவதில் அவருக்குள்ள அனுபவமும் வங்கிக்குப் பயன்படும்", என அந்த வங்கியின் தலைவர் சார்லஸ் ஓ ஹாலிடே கூறியுள்ளார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளதை தனி கவுரவமாகக் கருதுகிறேன். உலகின் மிகப்பெரிய நிதி அமைப்பான இந்த வங்கியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் முறையில் செயல்படுவேன்," என்றார்.

ஏற்கெனவே, இந்தியப் பிரதமரின் தொழில் மற்றும் வர்த்தகக் கவுன்சில், உலக பொருளாதார பேரவை உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி.