காலிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதல் (india vs West indies highlights)

ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தன.குருப் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அப் பிரிவின் கடைசி போட்டியில் போட்டியில் ஜிம்பாப்வே கென்ய அணியை 161 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இருந்தும் இந்த இரு அணிகளும் ஏ பிரிவில் கால் இறுதிக்கு தகுதி பெறவில்லை. அதே போல கனடா அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று குருப் 'பி' பிரிவில் சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி ஆகியவை அடுத்த கட்டமான காலிறுதிக்கு தகுதியடைந்துள்ளது. இப்பிரிவில் நெதர்லாந்து, வங்கதேசம், அயர்லாந்து ஆகிய நாடுகள் தகுதிபெறவில்லை.

புதன்கிழமை நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும், வியாழக்கிழமை இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடும்.

No comments: