NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Saturday, December 31, 2011

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியீடு

பிரான்ஸ்சில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியிடடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலரான கார்த்திகைப் பூ, புலிக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட 4 வகையான தபால் தலை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இவற்றைப் பயன்படுத்தி தங்களது தபால்கள் மற்றும் சரக்குகளை தமிழர்கள் அனுப்ப முடியும் என தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரான்ஸ் வாழ் சிங்கள மக்கள் மற்றும் இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் தூதரகம் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் சின்னங்களைக் கொண்ட தபால் தலைகள் வெளியானது குறித்து எங்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அஞ்சல்துறை லபோஸ்ட் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

Post Comment

சச்சினும் ஒரு சாதரண பேட்ஸ்மேன்தான் - பீட்டர் சிடில்


மெல்போர்னில் மோதிய முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை ஆஸி. வீரர் பீட்டர் சிடில் வீழ்த்தினார்.

சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து பத்திரிகையாளர்கள் பீட்டர் சிடிலிடம் கேட்டதற்கு; சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதற்கென்று திட்டம் ஏதும் வகுக்கவில்லை. முதல் இன்னிஸில் போல்டானார். இரண்டாவது இன்னங்ஸில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். 

அவ்வளவே. என்னைப் பொறுத்த வரை அணியில் சச்சினும் ஒரு சாதரண பேட்ஸ்மேன்தான். அவர் ஒபன் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, 11-வது பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒன்றுதான். இந்த முறை அவரது விக்கெட்டை நான் வீழ்த்தினேன். அடுத்த முறை பாட்டின்சனோ அல்லது நாதன் லியோனா வீழ்த்துவார்கள். என்றார். 

கடந்த 2008-ல் இந்த இரு அணிகளுக்கும் இடையே மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பீட்டர் சிடில் அறிமுகமானார். டெஸ்ட் வரலாற்றில் அவர் வீழ்த்திய முதல் விக்கெட் சச்சின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் சச்சினின் விக்கெட்டை மூன்று முறை வீழ்த்தியிருக்கிறார்.

Post Comment

புத்தாண்டு தலைவர்கள் வாழ்த்து



  இந்தப் புத்தாண்டில் புதிய சாதனைகள் பூத்துக் குலுங்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

நாளை மலரும் ஆங்கிலப் புத்தாண்டு 2012 குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:

புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக நிகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. இந்த வேளை தமிழக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட மாநிலத்தில் புதிய சாதனைப் பூக்கள் பூத்துக்குலுங்கி எங்கும் மணம் பரப்பிட உளப்பூர்வமாக உழைக்கின்ற தருமணம் இது.

சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா.

ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம்! உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்!

இந்த இனிய புத்தாண்டில் எனது அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




தி.மு.க. தலைவர் கருணாநிதி:-
 
தமிழக மக்கள் வளம்பெற- தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றி கண்ட மனநிறைவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த வேளையில் ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக தந்து 2011-ஆம் ஆண்டு மறைகிறது.
 
அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் பறித்திடும் ஆணை போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் விடுத்த கண்டனக் கணைகளே இன்றைய மாநில அரசின் நிர்வாகத்தை பறைசாற்றுகின்றன.
 
ஏழை, எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும், மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும், அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து, தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்- தொடங்கும் 2012 ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:-
 
நாட்டில் எவர் ஒருவரும் உணவுக்கு ஏங்குகிற நிலை போக்க சோனியாகாந்தி வழி காட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உணவுக்கு உத்தரவாதம் தருகிற சட்டம் இப்புத்தாண்டில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்.
 
பொதுப் பிரச்சினையில் நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-
 
2011-ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. பொருட்களின் விலை உயர்வு என்று மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தின. தமிழ் நாட்டு மக்கள் இந்த ஆண்டின் இறுதியில் மிகத் தீவிர புயலும் தமிழ் நாட்டையும், புதுச்சேரியையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வரவேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன் னேற்றத்தையும் தரவேண்டும் என்றும், போனது புயலாக இருக்கட்டும், வருவது தென்றலாக இருக்கட்டும்.
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
 
புத்துணர்வு அளிக்கும் ஆண்டாக 2012- ஆம் ஆண்டு அமையட்டும். இதற்காக நாம் மேற்கொண்ட புதிய தீர்மானங்களை நிறைவேற்றி முடிக்க சபதம் ஏற்போம்.
 
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக்க வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடக்கூடாது. அந்த வகையில் நம் கனவை நிறைவேற்ற புதிதாக போராடுவோம் என்று சபதமேற்கொண்டு செயல்பட கற்றுக் கொள்வோம்.
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
 
கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ்க் குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென்தமிழ்நாட்டின் வாழ் வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் எனப் பல்வேறு துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு உரிமை காக்க கட்சி, சாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர் காலத்தைப் பற்றிய நம் பிக்கை ஊட்டுகிறது.
 
சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணங்களாகும். இத்தீமைகளிலிருந்து தமிழகம் விடுபட்டு உன்னத நிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழததமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரவும் ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012-ஆம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
 
2011-ம் ஆண்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருடத்தின் கடைசி நாட்களில் 'தானே' புயலின் தாக்குதலையும் சமாளித்து 2012-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்த காலப்படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு 2012-ம் ஆண்டினைத் திட்டமிட்டு தமிழினத்தின் தலைநிமிர்வுக்கான ஆண்டாக அமைத்துக் கொள் ளும் வகையில் இப்புத் தாண் டினை வரவேற்போம்.
 
ஈழத் தமிழர்களின் துயர்களைத் துடைப்பதற்கும், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், சாதிக்கொடுமை உள்ளிட்ட பிற வன்கொடுமைகளிலிருந்து தலித் மற்றும் அனைத்து விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்றதொரு ஆண்டாக 2012-ம் ஆண்டு அமைந்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து நிற்போம் எனவும் இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
 
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்:-
 
தமிழர்களுக்கு, துன்பச் சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் சக்தியினால் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும். இந்த வலிமை மிக்க மக்கள் சக்தி புத்தாண்டில் வெற்றி பெற வேண்டும்.
 
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-
 
ஏழை, எளிய மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் புத்தாண்டில் கூடங்குளம், முல்லைப் பெரியாறு என்று தமிழகத்தை அச்சுறுத்தும் பிரச்சினைகள் சுமூகமாக தீர வேண்டும். நம்நாட்டு மக்கள் அனைவரும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்னும் உணர்வோடு எதிர் வாரும் காலங்களில் ஒன்று பட்டு அத்தனை சவால்களையும் சந்தித்து வெற்றி காண்போம்.
 
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:-
 
வருகின்ற புத்தாண்டு (2012) அனைவருக்கும் அனைத்தும் தரும், அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக மனிதநேயம் மலர அடையட்டும்.
 
கார்த்தி சிதம்பரம்:- மலருகின்ற 2012-ஆம் ஆண்டு நம் அனைவரது வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கிடவும், அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டி, பயங்கரவாத வன்முறையை வேரறுத்து, நம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து, மனிதநேயம், மத நல்லிணக்கம், சகோதரத்துவம் வளர்ப்போம்.
 
முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், அம்பேத்கார் முன்னணி கழக தமிழ் மாநில பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமலு, தேசிய அம்பேத்கார் மக்கள் கழக ஒருங்கிணைப்பாளர் அ.ஞான சேகரன், சிறுபான்மை சமூக புரட்சி இயக்க தலைவர் லியாகத் அலிகான், தமிழ் திருநாடு நிலம், வீடு, மனை தரகர்கள் நலச்சங்க மாநில தலைவர் விருகை கண்ணன், தமிழ் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Post Comment

36 நொடியில், 115 கிரிக்கெட் வீரர் பெயர் சொல்லி மாணவர் சாதனை


கரூரில், 36 நொடியில், 115 கிரிக்கெட் வீரர்கள் பெயரை சொல்லி, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்'டில், பரணிபார்க் பள்ளி மாணவன் இடம் பெற்றார்.

கரூர் அன்ன சாயி பாலாஜி சேவா டிரஸ்ட் மற்றும் பரணிபார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டின் முந்தைய சாதனையை முறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் பரணிபார்க் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் விக்னேஷ் வருண், 36 நொடியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 115 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொல்லி, முந்தைய சாதனையை முறியடித்தார். அவருக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டின் தமிழக பொறுப்பாளர் ஜெட்லி, பரிசு கோப்பையை வழங்கினார்.

சாதனை குறித்து நடுவர் ஜெட்லி கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேந்தர் கோஸ்வாமி, கடந்த மே மாதம், 45 நொடிகளில், 110 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொன்னது சாதனையாக இருந்தது. மாணவன் விக்னேஷ் வருண், கடந்த நான்கு மாதங்களாக பயிற்சி எடுத்து, 45 நொடிகளில், 110 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொல்வது தான் போட்டியாக இருந்தது. ஆனால், மாணவன் விக்னேஷ் வருண், எதிர்பார்த்ததை விட குறைந்த நேரத்தில், அதாவது, 36 நொடியில், 115 வீரர்களின் பெயர்களை சொல்லி, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளார். இவ்வாறு ஜெட்லி கூறினா

Post Comment

தற்போதைய பரபரப்பு நிலவரம்- ஜே- சசி உறவு

சி தரப்பை மீண்டும் ஜெ.’ கார்டனுக்கு கூப்பிட்டுக்கொள்வாரோ என்ற யோசனையில் இருந்த ர.ர.க்கள் கூட இப்போது ஜெ.’வின் மன உறுதிகண்டு மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். இனி தங்கள் கருத்துக்களை எந்தவித தடையும் இல்லாமல் கார்டனின் பார்வைக்குக் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கை ர.ர.க்கள் மத்தியில் நிலவுகிறது. மன்னார்குடி தரப்பால் பாதிக்கப்பட்ட பலரும் இப்போது தைரியம் பெற்று தங்கள் அனுபவங்களை கார்டனுக்கு கடிதம் கடிதமாய் எழுதிக் குவித்து வருகின்றனர்.


முப்பது வருடங்களாக உடனிருந்த உயிர்த் தோழி சசிகலாவை வெளியேற்றி 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஜெ., உறுதிகுலையாமல் இருக்கிறார். தான் எடுத்த முடிவில் இருந்து அவர் கொஞ்சம்கூட மாறவில்லை. சசி உறவினர்கள் நடத்திய பல்வேறு லீலைகள் குறித்த புகார்களும் குமுறல்களும் ஜெ.’வின் மேஜை மீது வந்து குவிந்தபடியே இருக்கிறது. 

ஜெ.’வின் இன லாபியில் இருப்பவர்கள் ஜெ.’விடம் "உங்களுக்கும் குழந்தையில்லை. சசிகலாவிற்கும் குழந்தையில்லை. அப்படியிருக்க மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு யாருக்காக கோடிகோடியாய்ப் பணத்தை சேர்க்கவேண்டும்? எம்.ஜி.ஆர். போல் சாகும்வரை நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லையா?' என திரும்பத் திரும்பக் கேட்டதுதான் ஜெ.வை அதிகம் யோசிக்க வைத்தது. இந்த யோசனையில் ஆரம்பித்த தீப்பொறிதான் சசி தரப்பை வெளியேற்றும் அளவிற்கு ஜெ.வை கொதி நிலைக்குக் கொண்டுபோனது.


சசியோடு தான் பங்குதாரராக இருக்கும் சொத்துக்கள் குறித்தும் சசி உறவினர்கள் பெயரில் பினாமியாக பெருமளவில் வாங் கிப்போட்ட சொத்துக்கள் குறித்தும் தனது இனத்தைச் சேர்ந்த ஆடிட்டரோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் ஜெ. சசி குடும்பத்தார் பெயரில் இருக்கும் தனது சொத்துக்களை எப்படி மீட்பது  என்பதுதான் ஜெ.’வின் தற்போதைய தீராத சிந்தனை. 

ஜெ.’வின் கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா, இளவரசிக்கும் பங்குகள் இருக்கிறது. அந்த பங்குகளையெல்லாம் தனது பெயருக்கு மாற்று வதற்கான ஏற்பாடுகளையும் பரபரப்பாக முடுக்கிவிட்டிருக்கிறார் ஜெ. இதேபோல் பெரிய மதுபான நிறுவனமான மிடாஸ் டிஸ்டில்லரீ         ஸின் முழு உரிமையும் சசி குடும்பத்தார் பெயரிலேயே இருக்கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் இட மதிப்பே 200 கோடி ரூபாய்க்கும் மேலாகிறது. அதோடு அதற்குள் இருக்கும் அதி நவீன கருவிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் லைசென்ஸ் வேல்யூ என்று கணக்கிட்டால் இவை 150 கோடி ரூபாய்க்குமேல் இருக்கும். ஆக ஏறத்தாழ 350 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மதுபான நிறுவனத்தை தன் பெயருக்கு மாற்றினால், மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுமோ என யோசிக்கும் ஜெ., வேறு பினாமி பெயர்களில் மாற்றலாமா அல்லது சட்டச் சிக்கல் உண்டாகும் பட்சத்தில் சசி தரப்பிடமே கொஞ்சநாள் விட்டுவைக்கலாமா? இல்லையென்றால் யாரிடமாவது விற்றுவிடலாமா? என்றெல்லாம் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.




எம்.ஜி.ஆர் நினைவு நாளான 24-ந் தேதி அவரது நினைவிடத்திற்கு ஜெ.’ போன போது திரண்டிருந்த ர.ரக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. கூட்டத்தோடு கூட்டமாய் சசியால் எம்.எல்.ஏ.வான ஒருவர் ஜெ.’வின் அருகே சென்று கும்பிடுபோட, இதைக் கண்ட ர.ர.க்கள் சிலர், "சசி கும்பல் நடிக்குது. நம்பாதீங்க'’என சத்தம் போட்டனர். இதை கவனித்த ஜெ.’ தொண்டர்கள் முழுக்க முழுக்க தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் புன்ன கைத்தார். அங்கிருந்து கார்டன் திரும்பிய ஜெ.’வின் கண்கள், வாசலில் கூடியிருந்த கூட்டத்தைத் துழாவத் தவறவில்லை. உள்ளே சென்ற ஜெ. வாசலில் கூட்டத்தோடு கூட்டமாய்க் காத்திருந்த புதுக்கோட்டை மாவட்ட கட்சி சீனியர் குழ.செல்லையாவை...




source:nakkeeran

Post Comment

ரஜினி ரூ 25 லட்சம் நிதியுதவி பழைய பள்ளியின் சீரமைப்புக்கு

பெங்களூரில் தான் படித்த பழைய பள்ளிக்கூடத்துக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

பெங்களூரில் கெம்பே கவுடா நகரில் உள்ள கவிபுரம் அரசு கன்னட மாதிரி தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில்தான் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார்.

தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வரும் இந்தப் பள்ளி இப்போது மிக மோசமான நிலையில் உள்ளது. 

இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

இதனிடையே, இப்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி கோரிக்கை விடுத்தது.

இதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், இந்த தொகையை அனுப்பி வைப்பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

பள்ளியின் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியை ஜனவரி 1-ந்தேதி தொடங்க வேண்டும். இல்லையெனில், முதல்வர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம் என்று ரஜினி சேவா சமிதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி சமிதியின் தலைவர் முருகன் கூறுகையில், "பள்ளி விவகாரத்தில் உடனடியாக கவனிக்குமாறு உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டுள்ளோம். முதல்வரைச் சந்திக்க இருக்கிறோம்.

ரஜினியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் இந்த பள்ளியில்தான் கொண்டாடி வருகிறோம். பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஜனவரி 1-ந்தேதி பழைய கட்டிடத்தை இடிக்கும் வேலையை தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இல்லையெனில் முதல்வர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம்.

இந்த பள்ளிக்கு ரஜினிகாந்த் ரூ.25 லட்சம் நன் கொடை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்கவும், நூலகம் அமைக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும்," என்றார்.

Post Comment

Friday, December 30, 2011

கடவுள் என்னைக் காப்பாற்றுவார்

ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான்.


வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.

மேலுலகம் போன போது அவனுக்குக் கடவுள் மீது தீராத கோபம். அவன் கடவுளைக் கேட்டான். “உங்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேனே கடவுளே, இப்படி என்னைக் கை விட்டு விட்டீர்களே இது நியாயமா?”

கடவுள் கேட்டார். “வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததும், ஜீப் வந்ததும், படகு வந்ததும் யாரால் என்று நீ நினைக்கிறாய்?”

இந்த உதாரணக் கதையில் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கிராமவாசி கடவுள் புஷ்பகவிமானத்தை இறக்கி அதில் அவனை அழைத்துப் போவார் என்று நினைத்தானோ என்னவோ? இது கற்பனைக்கதை என்றாலும் நிஜத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இதை விட வேடிக்கையான முட்டாள்தன மனோபாவம் பலரிடம் இருக்கிறது.

கடவுள் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுத்திருக்கிறார். அவன் கண்முன்னால் எத்தனையோ உதாரணங்கள் கொடுத்திருக்கின்றார். உழைக்கின்ற சக்தியைக் கொடுத்திருக்கிறார். எதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும் அதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் ஏற்படுத்திக் கொள்ளார். மனிதன் அத்தனையையும் முதலில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி மனிதன் தன் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்ப அனைத்தையும் செய்து விட்டு பிறகு அதையும் மீறி வரும் பிரச்னைகளில் இருந்து அவனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது தான் சரி.

எனவே கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவை மழுங்கடித்துக் கொள்வதல்ல. முயற்சியே எடுக்காமல் முடங்கிக் கிடப்பதல்ல. சோம்பித் திரிய கிடைக்கும் அனுமதியும் இல்லை. பொறுப்பற்று அலட்சியமாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு உத்திரவாதமுல்ல. ஆனால் பலரும் கடவுளை வணங்கினால் அது ஒன்று போதும், எல்லாம் தானாக நடந்து விடும், என்று நினைத்து விடுவது தான் வேடிக்கை.

குழந்தை பிறக்கின்ற போது தாயின் மார்பகங்களில் பாலைத் தயாராக வைத்திருக்கும் கருணையுள்ள கடவுள் நம் உண்மையான தேவைகளுக்கு வேண்டியதைக் கண்டிப்பாக மறுக்கப் போவதில்லை. ஆனால் கடவுள் நம் அடியாள் போல இருந்து நம் குறிப்பறிந்து அனைத்தையும் செய்து வந்து நம்மைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், அதற்குக் கூலியாக நாம் சும்மா அவரைக் கும்பிட்டுக் கொண்டு இருப்போம் என்ற அபிப்பிராயத்தில் யாரும் வாழ்ந்து விடக் கூடாது.

முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பிரார்த்தனை இருக்க வேண்டுமே ஒழிய முயற்சிக்குப் பதிலாக பிரார்த்தனையில் ஈடுபடுவது முட்டாள்தனமான செய்கையாகும். கடவுள் அளித்த எத்தனையோ வரப்பிரசாதங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், கடவுளிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே தவிர வேறில்லை.

“கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால் வழியில் புயலே வராது என்ற உத்திரவாதம் தர மாட்டார்” என்று ஒரு பொருள் பொதிந்த பழமொழி உண்டு.
பல நேரங்களில் பிரச்னைகளும், சிக்கல்களும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன. அதை சமாளித்து முடிக்கையில் நாம் அறிவிலும், சக்தியிலும் நாம் மேம்படுகிறோம். வாழ்க்கை என்ன என்பதை அப்போது தான் உண்மையில் பலரும் உணரவே ஆரம்பிக்கிறோம். அதனால் அந்தப் பாடங்களே வேண்டாம் என்று மறுப்பது நம் முன்னேற்றத்தையே மறுப்பது போலத் தான்.

எனவே அறிய வேண்டியதை அறியவோ, செய்ய வேண்டியதைச் செய்யவோ சோம்பி இருக்காமல் அறிந்து, அறிவார்ந்த முயற்சிகள் எடுத்து உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். ஆனால் எல்லாமே நம் அறிவுக்கும் முயற்சிக்கும் உட்பட்டு நடந்து விடுவதில்லை என்பதும் உண்மையே. அப்படிப் பட்ட நிலையில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, நம்மை மீறிய விஷயங்களுக்கு கடவுளைப் பிரார்த்தியுங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.
******************
source.enganesan

Post Comment

2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்

1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும் (Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது.

ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐ போன் 4 எஸ் உடன் கிடைக்கிறது. வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்து கையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது. மிகக் குறைவான தடிமனில், ஆண்ட் ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப் பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.

3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில், ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து, தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால், மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது, ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4.விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும், அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது. காப்பி அண்ட் பேஸ்ட் வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கேமரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற் கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களி டையே கொண்டு வரும் முயற்சி யானது. மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ்போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.

5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது. சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை, கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக, அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர். நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பாக்ஸைப் பின்னுக்குத் தள்ளி யுள்ளது உண்மை.

வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

Post Comment

ஐ.டி., துறையை விட, அதிக சம்பளம்

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும், மத்திய அரசு பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது, குறைந்து வருகிறது. ஐ.டி., துறையை விட, அதிக சம்பளம் தரும் இப்பணிகளுக்கு, மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க வேண்டும் என, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், தென் மண்டல இயக்குனர் பாக்யதேவி ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் "தினமலருக்கு' அளித்த பேட்டி: மத்திய அரசுக்குத் தேவையான, 60 சதவீத பணியாளர்களை, ஸ்டாப் செலக்ஷன் கமிஷனும், 40 சதவீத பணியாளர்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் தேர்வு செய்கிறது. பெண்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 18 வயது முதல் 25 வயது வரையிலான எவரும், விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினருக்கு, வயது வரம்பு இல்லை. தமிழகத்தின் முக்கிய நகரங்களில், தேர்வு மையங்கள் உள்ளன. ஆனாலும், தென் மாநிலங்களை பொருத்தவரையில், இப்பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், விண்ணப்பிப்பது குறைவாகவே உள்ளது. கடினமாக உழைத்தால், இத்தேர்வுகளில் எளிதில், வெற்றி பெற்று விடலாம். மத்திய பணியாளர் தேர்வாணையத்தில், 2010முதல் நிறைய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டையும், ஆன்லைனில் பெற முடியும். தேர்வு முடிவுகள் வெளியான பின், பெற்ற மதிப்பெண்கள், ஓ.எம்.ஆர். அட்டையின் நகல் உட்பட அனைத்து விவரங்களையும் காணலாம். அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகளின் பட்டியல் தேதிவாரியாக வெப்சைட்டில் உள்ளது.

தென் மண்டலத்தில், 90 சதவீத விண்ணப்பங்கள், ஆந்திராவில் இருந்து வருகின்றன. 10 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே, தமிழகத்தில் இருந்து வருகின்றன. 2010-11ல், இந்தியா முழுவதும் 40.85 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். இதில், தென் மாநிலங்களைச் சேர்ந்த, 2.51 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதற்கு முந்தைய ஆண்டிலும், இதே போன்ற விகிதாச்சாரம் தான். ஆகவே, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், அனைத்து மத்திய அரசு பணிகளுக்கும் விண்ணப்பிக்க முன்வர வேண்டும்.

இன்ஜி.,பணியாளர்கள் அதிகரிப்பு: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும், பணிகளுக்கு கடந்த ஆண்டு, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில், 500 பேர் இன்ஜி., பட்டதாரிகள். டி.சி.எஸ்.,இன்போசிஸ் உள்ளிட்ட பிரபல ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோரும், இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் கண் விழித்து பணிபுரிந்தால் கிடைக்கும் சம்பளத்தை, வாரம் இருநாள் விடுமுறையுடன், அரசுப் பணியில் சம்பாதித்து விடலாம். எங்களுக்கு நல்ல திறமையான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். டேடா என்ட்ரி துறையிலும், நிறைய பணியாளர்கள் தேவை. ஐ.டி., மட்டுமே முடிவு அல்ல. தவறான எண்ணத்தால் நல்ல அரசு பணி வாய்ப்புகளை, தமிழக மாணவர்கள் தவற விடுகின்றனர். இவ்வாறு, பாக்யாதேவி கூறினார்.

courtesy.dinamalar

Post Comment

நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்







 


 



 

Post Comment

Thursday, December 29, 2011

தனுஷுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்

இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அவரது இந்த பாப்புலாரிட்டியால் வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். கொலவெறிக்குப் போட்டியாக ஒருபாட்டை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு என்னென்னமோ காமெடி செய்து வருகிறார்கள்.
ஆனால், 'கூல்' தனுஷுக்கோ கேட்காமலே தேடி வருகிறது கவுரவங்கள். ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், 'கொலவெறி பாடலுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும், மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த அளவுக்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும்தான் காரணம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

'உங்கள் மாமனார் (ரஜினிகாந்த்) சமீபத்தில் உங்களுக்கு சொன்ன அறிவுரை என்ன?' என்று அவரிடம் கேட்டதற்கு, "சமீபத்தில் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொல்லவில்லை. என் கல்யாணம் நடந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார். 'சுற்றி குடிசைகள் இருக்கும்போது, நாமும் குடிசைதான் கட்டணும்'' என்றார். அதற்கு அப்புறம் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை" என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.

உங்கள் மாமனாரும் நீங்களும் சேர்ந்து நடிக்கும் காலம் வருமா? என்ற கேள்விக்கு, "அதை சார் (ரஜினிகாந்த்)தான் சொல்லணும். இதை நான் மருமகனாக சொல்லவில்லை. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில், நானும் ஒருவன். அவரை பிரமிப்பாக பார்க்கிற கூட்டத்தில், நானும் ஒருவனாக சொல்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3' என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

கொலவெறி பாடலுக்குப் பின் படுபாப்புலராகி, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததற்கும், என் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குநர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்க சண்டை போட்டுக்கொண்டதுண்டு. இது, எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான்.

ஐஸ்வர்யா தொடர்ந்து இனி படங்கள் இயக்குவார். ஆனால், அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். வெளி கம்பெனிகளுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார்.

இதுவரை பல நடிகைகளுடன் நடித்துவிட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர். மற்றபடி, 'கெமிஸ்ட்ரி' என்று சொல்கிறார்களே, அதன்படி நயன்தாரா பொருத்தமானவர்.

எனக்கு கிடைக்கும் பெருமைகள், விருதுகள் போன்றவற்றுக்குக் காரணம், எதையும் எதிர்ப்பார்க்காமல் நான் என் வேலையைச் செய்வதுதான்.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வார்கள். அதன்படி, நான் என் வேலையை செய்கிறேன். எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்ய வேண்டும். என் வேலைகளை சந்தோஷமாக செய்கிறேன். கடவுளும், மக்களும் கொடுக்கும் வரவேற்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Post Comment

நடுவிரலைக் காட்டிய சோனம் கபூர்!

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார் இந்தி நடிகை சோனம் கபூர்.

அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இந்தியில் நாயகியாக வலம் வரும் சோனம், வெளி்பபடையாக பேசக் கூடியவர். தைரியமாக பேசக் கூடியவர்.ஆனால் தற்போது அவர் நடுவிரலைக் காட்டி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ஆனாலும் சோனம் இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என்று பாலிவுட்டில் பேச ஆரம்பித்துள்ளனர்.

பிளேயர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சோனம் கபூர். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சோனம் கபூர், பிரஸ் மீட் முடிந்து கிளம்பியபோது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார்.

நடுவிரலைக் காட்டியது குறித்து சோனத்திடம் கேட்டபோது, நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. திரைப்படங்களுக்கு சென்சார் செய்வது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதைத்தான் நான் நடுவிரலைக் காட்டி வெளிப்படுத்தினேன். வேறு எந்தக் காரணமும் இதற்கு இல்லை.

இளைஞர்கள் இப்போது நடுவிரலை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வது சாதாரண விஷயம். ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால் நடுவிரலைக் கொள்வது சகஜமானதுதான்., இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் கலை, திரைப்படங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இதெல்லாம் சாதாரணம். மேலும் இந்தியா பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குப் பெயர் போனது. அப்படிப்பட்ட நாட்டில் நான் நடுவிரலைக் காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக உள்ளது என்றார்.

Post Comment

122 ரன் வித்தியாசத்தில் தோல்வியில் வீ்ழ்ந்த இந்தியா


ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறிப் போன இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியை 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பறி கொடுத்தது. சற்றே போராடியிருந்தால் நிச்சயம் இப்போட்டியில் இந்தியா வென்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக், டிராவிட், லட்சுமன், டோணி, விராத் கோலி, கம்பீர் என முக்கிய வீரர்கள் யாருமே சரியாக ஆடாமல் போனதே, வென்றிருக்கலாம் என்ற வாய்ப்பில் இருந்த ஒரு போட்டியை இந்தியா நழுவ விட முக்கியக் காரணம். இந்தியத் தரப்பில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் யார் என்றால் சச்சினும், அஸ்வினும்தான். சச்சின் கூட இந்த முறை 32 ரன்களில் வீழ்ந்து விட்டார். அஸ்வின் கடைசி நேரத்தில் வந்து காட்டிய வான வேடிக்கையால் எந்தப் பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 333 ரன்களுக்குஆல்- அவுட்டானது. அதன்பிறகு இந்தியா தனது முதல் இன்னிங்க்சில் 282 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் ஹிப்பின்கஸ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா நேற்று 3வது நாள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்களை எடுத்திருந்தது. இன்று காலையில் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா, மீதம் இருந்த 2 விக்கெட்களையும் விரைவாக இழந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 298 ரன் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

300 ரன்கள் வரை கூட எங்களால் சேஸ் செய்ய முடியும் என்று வீரேந்திர ஷேவாக் நேற்று தெம்பாக கூறியிரு்நதார். இதனால்ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இந்தியா தனது விக்கெட்களை சடசடவென பறி கொடுத்து பரிதாபமாக காட்சியளித்தது.

இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்பாக விளையாடவில்லை. 300 ரன் வரை சேஸ் செய்வோம் என்று நேற்று கூறிய ஷேவாக்தான் முதல் ஆளாக அவுட்டாகி வெளியேறினார். அவரது பங்கு 7 ரன்கள். தொடர்ந்து கம்பீர் 13 ரன்களில் வெளியேற, டிராவிட் 10 ரன்களுடன் பெட்டியைக் கட்டினார்.

சச்சினாவது காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் கூட பொய்யானது. அவர் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த விவிஎஸ் லட்சுமன் 1 ரன்னிலும், விராத் கோஹ்லி முட்டையுடனும் வெளியேறி ரசிகர்களை கடுப்படித்தனர்.

இந்த நிலையில், கேப்டன் டோணியும் (23), அஸ்வினும் (30) சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடினார். இவர்களில் அஸ்வின் ஆட்டம், முதல் இன்னிங்ஸைப் போலவே சிறப்பாக இருந்தது. இருந்தாலும் புண்ணியம் இல்லை. இவர்கள் 2 பேரும் அவுட்டாக இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் கனவு பலிக்காது என்பது தெளிவானது.

அடுத்த வந்த ஜாகிர்கான் தன் பங்குக்கு 13 ரன்கள் எடுத்தார். கடைசியாக இஷாந்த் சர்மா(5), உமேஷ் யாதவ்(14) ஆடி தங்களால் முடிந்த வரை முயற்சி செய்தனர். இறுதியாக இந்தியா 122 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட்டன்சன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களையும், சிடில் 3 விக்கெட்களையும் எடுத்தனர்.

அருமையான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டியது சேஸிங்கில் மிக முக்கியமானது. அப்போதுதான் பின்னால் வரும் வீரர்கள் சிறப்பாக முடியும். அந்த வகையில் ஷேவாக்கும், கம்பீரும்தான் இன்றைய தோல்விக்கு முக்கியப் பொறுப்பாவார்கள். இருவரும் சற்றும் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. இத்தனைக்கும் இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி உள்ள நிலையில் ஏன் இப்படி படு வேகமாக ஆடி படு மோசமான தோல்விக்கு அவர்கள் வித்திட்டார்கள் என்பது புரியவில்லை. ஷேவாக் என்னதான் அதிரடி வீரராக இருந்தாலும் நிலைத்து ஆடவும் அவர் முயற்சித்தால்தான் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு நல்லது.

இளம் வீரர்கள் நிறைந்த அணி, இந்தியாவோ அனுபவ வீரர்களைக் கொண்ட அணி, எனவே இந்தியா முயற்சித்தால் ஆஸ்திரேலியாவை எளிதில் வெல்லலாம் என்று பலரும் கணித்திருந்த நிலையில் அதை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பொய்த்துப் போக வைத்து விட்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்லுமா என்ற கேள்விக்குறி இருந்து வந்த நிலையில், அதை ஆச்சரியக்குறியாக்கி விட்டது அந்த அணியின் இளம் பந்து வீச்சுப் படை.

போகட்டும் முதல் போட்டிதானே போயுள்ளது. இன்னும் 3 போட்டிகள் இருக்கிறதே. அதில் இந்தியா சாதிக்கும் என்று நம்புவோம்.

Post Comment

அரசு பள்ளிகளில் புதிதாக 8462 ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் 8,462 ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டுக்கு நியமிக்கப்பட்ட 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியத்தில் ரூ.4 ஆயிரத்தை உயர்த்தியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாசாரப்படி, நடப்பு கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும்.

இதுமட்டுமல்லாமல், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தி அவர்களை வருங்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்த்த பாடுபடும் ஆசிரியர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை/ சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும்.

கெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் உயர்வு..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் தரமான கல்வியைப் பெற தகுந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதுடன், தகுதியானோர் ஆசிரியர் பணி பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் புதிதாக 8462 ஆசிரியர் பணியிடங்கள்!

Post Comment

நண்பன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Click the image to full view







































Post Comment

Wednesday, December 28, 2011

கெட்டப் மாறும் விஜய் துப்பாக்கி படத்துக்காக

துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.

பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.

'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.

இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். 

மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

Post Comment

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில் ஹஸாரேவுக்காக உண்ணாவிரதமா?

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில், ஊழலை ஒழிக்க ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கிறார்கள், என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 127வது ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்பட பல நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோஷங்களை முழங்கினார்கள்.

பின்னர் நிருபர்களைச் சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த இளங்கோவன், "ஹஸாரேவுடன் இயங்குபவர்கள் யார்... பெரும்பாலும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், ஒழுங்காக கணக்கு காட்டாதவர்கள்.

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) அவருக்கு ஆதரவாக போராட்டமே நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று பாருங்கள்... சென்னையில் 100 பேரைக் கூட திரட்ட முடியாத ஒரு போராட்டம். இன்று வேடிக்கை பார்க்க வந்தவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் 10 பேர்தான் தேறியிருப்பார்கள்.


மக்கள் தெளிவானவர்கள். அவர்களை எப்பேர்ப்பட்டவர்களாலும் ஏமாற்றவே முடியாது. மண்டபம் கொடுத்தவர்களுக்கும் இது புரிந்திருக்கும்.

ஹசாரேவை இந்த வருட தொடக்கத்தில் ஊடகங்கள் பெரிதாக உருவகப்படுத்தின. அவரது நிஜ உருவம் இப்போது தெரிந்து விட்டது.

ஹசாரே இப்போது காற்று போன பலூன் அவர் புஸ்வாணம் ஆகி விட்டார் என்பதுதான் புத்தாண்டின் இனிப்பான செய்தி. காங்கிரஸ் 50 ஆண்டுகள் விடுதலைக்காக போராடிய மாபெரும் மக்கள் இயக்கம். 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் கட்சி இது. ஏழை மக்களின் பாதுகாவலன் காங்கிரஸ் மட்டுமே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ்தான். இதை திரித்துக் கூறி பொய்யைப் பரப்பிய பிஜேபி, ஆர்எஸ்எஸ், அவர்களின் முகமூடி ஹஸாரேயின் சாயம் இன்று ஒரே நாளில் வெளுத்துவிட்டது," என்றார்.

Post Comment

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் கோமனத்தை உருவும் தந்திரமும்..

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி..... 

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... 

               இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள்  (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.
Terms & Conditions - www.asknagravi.com/orukodi

Mimiciri by - Seeni Prabhu

Day Light Robbery Charges for this program.

courtesy: www.asknagravi.com






Post Comment

POPULAR

Followers

FOLLOW ME