கரூரில், 36 நொடியில், 115 கிரிக்கெட் வீரர்கள் பெயரை சொல்லி, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்'டில், பரணிபார்க் பள்ளி மாணவன் இடம் பெற்றார்.
கரூர் அன்ன சாயி பாலாஜி சேவா டிரஸ்ட் மற்றும் பரணிபார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டின் முந்தைய சாதனையை முறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் பரணிபார்க் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் விக்னேஷ் வருண், 36 நொடியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 115 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொல்லி, முந்தைய சாதனையை முறியடித்தார். அவருக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டின் தமிழக பொறுப்பாளர் ஜெட்லி, பரிசு கோப்பையை வழங்கினார்.
சாதனை குறித்து நடுவர் ஜெட்லி கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேந்தர் கோஸ்வாமி, கடந்த மே மாதம், 45 நொடிகளில், 110 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொன்னது சாதனையாக இருந்தது. மாணவன் விக்னேஷ் வருண், கடந்த நான்கு மாதங்களாக பயிற்சி எடுத்து, 45 நொடிகளில், 110 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொல்வது தான் போட்டியாக இருந்தது. ஆனால், மாணவன் விக்னேஷ் வருண், எதிர்பார்த்ததை விட குறைந்த நேரத்தில், அதாவது, 36 நொடியில், 115 வீரர்களின் பெயர்களை சொல்லி, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளார். இவ்வாறு ஜெட்லி கூறினா
0 Comments