NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Monday, February 28, 2011

இன்டர்நெட்டில் திருக்குறள் படிக்கலாம்


திருக்குறள் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பெருநூலாக விளங்குகின்றது. உலக அளவில் பலமொழிகளில் பல வடிவங்களில் திருக்குறள் பரவியுள்ளது. ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள் அச்சுவடிவம் கண்டதுபோல் இணையவெளியிலும் பல தளங்களில் பலவாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயன்படும்வண்ணம் திருக்குறள் மூலமாகவும், உரையுடனும், மொழிபெயர்ப்புடனும், ஒலி, ஒளிவடிவிலும், திருக்குறள் கருத்துகள் அசைவுப்படங்களாகவும், படக்கோப்புகளாகவும், ஒருங்குகுறிவடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்துகளிலும், தனியார் நிறுவனங்களின் எழுத்துகளிலும் உள்ளன. திருக்குறளைச் செல்பேசிகளில் எடுத்துச்செல்லும் வண்ணம் தரவிறக்கும் வாய்ப்புகளுடனும் உள்ளது.

ஒலிவட்டுகளாக்கி மூலமும் உரையும் இணைந்த பேச்சு வடிவிலும் திருக்குறள் உள்ளது. திருக்குறள் சார்ந்த அறிஞர்களின் பேச்சுகளாவும் திருக்குறள் இணையத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருக்குறள் பரவல் இணையப்பெருவெளியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் பதிப்புகள் பற்றியும் இணையதளங்களின் பதிப்புச் சிறப்புகள், சில தளங்களின் மேம்படுத்தலின் இன்றியமையாமை பற்றியும் இக்கட்டுரையில் சில செய்திகள் பதிவாக உள்ளன.

திருக்குறள் இணையப் பதிப்புகளின் பொதுத்தன்மைகள்:

திருக்குறள் தொடக்கத்தில் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. படக்கோப்புகளாகவும் (பி.டி.எப்.) சில தளங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சில தளங்கள் தனியார் நிறுவன எழுத்துகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன (கலைஞரின் திருக்குறள் உரை, குறளோவியம்). இன்று ஒருங்குகுறிப் பயன்பாட்டின் முதன்மை தெரிந்த பிறகு பல இணையதளங்களும் ஒருங்குகுறி எழுத்துருவில் யாவரும் படிக்கும் வண்ணம் எந்த எழுத்துருச்சிக்கலும் இல்லாமல் படிக்கும் வகையில் பதிப்பித்துள்ளன.

தினமலர் போன்ற நாளிதழ்களின் தளத்தில் திருக்குறள் சிறப்பாக மூலத்துடனும் உரையுடனும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழ்த் தளத்தில் நாளும் ஒரு திருக்குறள் இடம்பெறுகின்றது. அருகில் உள்ள பொத்தானை அழுத்தி திருக்குறளுக்கு உரிய பொருளை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கணினி, இணையத் தொழில்நுட்பம் அறிந்த ஆர்வலர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் திருக்குறளைப் பலவகையாகப் படித்து மகிழும்வண்ணம் பதிப்பித்துள்ளனர். பொதுவாகப் பால்பகுப்பு, இயல்பகுப்பு, அதிகாரப் பகுப்பு இவற்றின் வழியாகத் திருக்குறளைப் பார்வையிடும்படி செய்துள்ளனர். சில தளங்களில் திருக்குறள் எண்ணைச்சொடுக்கியும் திருக்குறளைக் காணலாம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பதிப்பில் மூலமும் மொழிபெயர்ப்புகளும் உரைகளும் பலவாக இருக்கின்றமை பயனாளிகளுக்குப் பெரும் பயன் தரும் ஒன்றாகும்.

மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தின் முகப்பிலும் குறள் அமுதம் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் உள்ள திருக்குறள் தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் உள்ளன. இந்த எழுத்துகளை நம் கணினியில் உள்ளிட்ட பிறகே திருக்குறள் பயன்பாட்டை நுகரமுடியும்.ஒருங்குகுறி வடிவில் இருக்கும்பொழுதே இதன் பயன்பாடு எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும்.

இதில் பரிமேலழகர் உரை,பாவாணர் உரை, கலைஞர் உரை எனப் பல உரைகள் உள்ளிடப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் ஆங்கிலமொழிபெயர்ப்பும், சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. ஒலிவடிவில் கேட்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் தொழில்நுட்பம் எளிமைப்படுத்தப் படவேண்டும்.

முத்து வ.,சித்தார்த் என்னும் இருவர் (http://kural.muthu.org/)உருவாக்கியுள்ள தளத்துக்குச் சென்றால் திருக்குறள் பயன்படுத்துவதற்கு எளிய முறையில் உள்ளிடப்பட்டுள்ளது. பால் பகுப்பும், இயல்பகுப்பும், அதிகாரப் பகுப்பும் சிறப்பாக உள்ளது. தேடும் வசதியும் இந்தத்தளத்தில் சிறப்பாக உள்ளது.

திருக்குறள் (http://www.thirukkural.com/) என்னும் தளத்தில் எளிமையான அமைப்பில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளனர். பயன்மிகு பக்கங்கள் என்ற தலைப்பில் பல இணைப்புகளும் வைத்துள்ளனர். எழுத்துகள் ஒருங்குகுறி அமைப்பில் இருப்பதால் எந்தக் கணினியும் சிக்கலின்றி எழுத்துகளைக் காட்டும்.கலைஞர் உரை, மு.வ. உரை.சாலமன் பாப்பையா உரை ஆங்கில உரைகள் யாவும் சிறப்பாகப் பயன்படுத்தும்படி உள்ளன.

அகரம் (http://agaram-thirukkural.blogspot.com/) என்னும் தளத்துக்குச் சென்றால் தமிழ் ஆங்கில விளக்கத்துடன் திருக்குறள் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குறள்களை எண்ணைச் சொடுக்கிப் பயன்படுத்தும் வகையில் எளிய உரைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்(http://senthamil.org) என்னும் தளத்தில் திருக்குறளின் முதற்சீர் மட்டும் குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது. அதனைச் சொடுக்கினால் உரிய திருக்குறள் மூலத்தை மட்டும் படிக்கலாம்.இதில் ஒரு நெறிமுறை இல்லாமல் இல்லாத முறையைச் சீர் செய்தால் சிறந்த தளமாக அமையும்.

மதுரைத்திட்டத்தில் (http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html) உள்ள திருக்குறள் மூலம் மட்டும் கொண்டதாக அமைந்துள்ளது. படக்கோப்பு வடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவிலும்,ஒருங்குகுறி வடிவிலும் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

ஆச்சார்யா தளத்தில் (http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.php) உள்ள திருக்குறள் யாவும் மூலமும் அதற்கு ஆங்கில விளக்கமுமாக உள்ளன. எண்ணைச்சொடுக்கிக் குறளைப் பெறும் வகையில் தளம் உள்ளது.

தமிழன் வழிகாட்டி (http://www.tamilsguide.com/) இணைய தளத்தில் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது. தமிழ் ஆங்கிலம் என்னும் இருமொழிகளில் அறியும்வண்ணம் உள்ளது. திருக்குறளுக்குத் தமிழ் உரையை அ.பொ.செல்லையா அவர்கள் வழங்கியுள்ளார். ஆங்கில விளக்கவுரையை அவர் துணைவியார் திருவாட்டி யோகரத்தினம் செல்லையா வழங்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் அதிகார எண், குறள் எண், ஆங்கில எழுத்தில் குறள், ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. தமிழிலும் இந்த வரிசைமுறையில் குறட்பாக்கள் உள்ளன. உரையாசிரியர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பு.


பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் பற்றி அறிய http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm என்னும் தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் சௌராட்டிரமொழி, இந்தி, வங்காளம், குசராத்தி, ஒரியா, மராத்தி, தெலுங்கு, அரபி, உருது, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, இசுபானிசு, சுவீடிசு, என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விவரங்களை ஓரிடத்தில் பெறலாம்.

திருக்குறள் ஒலிப்பதிப்பு (http://universalepublishers.com/)

திருக்குறள் ஒலிப்பேழைகளாக (கேசட்) முன்பு உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.

1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர். முன்னுரையும், பால்பகுப்பும் சுட்டி, இயல் பகுப்பு உணர்த்தி, அரிய இசை முன்னோட்டமும், அதிகாரத்தின் எண்ணும், அதிகாரத் தலைப்பும், குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது. பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.

திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவந்தது.திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடந்த தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்படும்.ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00

திருக்குறள் மறைமொழி (http://panainilam.blogspot.com/2009/02/1330.html)

1330 திருக்குறளும் இசையுடன் பாடிக் குறுவட்டாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியுள்ளது. எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த இரா.இளங்குமரனார் அவர்கள் இதன் விலை 5 அமெரிக்க டாலர் ஆகும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள தமிழ் மையம் திருக்குறளின் 330 குறட்பாக்களை 50 பாடல்களாக உருவாக்கியுள்ளது. திருக்குறள் இசைத்தமிழ் என்னும் பெயரில் இம்மையம் குறுவட்டை உருவாக்கியுள்ளது. செம்மொழி நிறுவனத்தின் தளத்திற்குச் சென்று(http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam ) இலவயமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

திருக்குறள் சார்ந்த பதிப்புகளையும், இணையதளங்களையும் ஆய்வதுடன் திருக்குறள் பதிப்புகள் முறையாக இணையத்தில் உள்ளனவா என்று ஆராய்வது இன்றைய தேவையாக உள்ளது.திருக்குறள் பதிப்புகள், உரைவெளியீடுகள் மிகுந்துவரும் இந்த நாளில் அவற்றை இணையப் பதிப்புகளாக வெளியிடுவது மிகவும் எளிதாகும். அவ்வாறு வெளியீடு செய்தால் இணையப் பெருவெளியில் திருக்குறள் உரைகள் யாவும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு ஏற்படும்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வான்புகழ் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் காட்சிவழிப் படைப்பாக இக்கட்டுரை வழங்கப்பட்டது. நாள் 13.02.2011

நன்றி: முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்

நன்றி: http://muelangovan.blogspot.com

Post Comment

India VS England Highlights Worldcup 2011

Post Comment

Saturday, February 26, 2011

மூலிகை அறிமுகம் 6 -பச்செளலி


1) தாவரப்பெயர்:- POG0STEMON CABIN, P.PATCHOULI.

2) தாவரக்குடும்பம்:-LABIATAE.

3) வளரும்தன்மை:- களிமண்,பொறைமண், நீர்பிடிப்பு, மலைப் பகுதி, இதற்கு நிழல் தேவை. பச்செளலியை தென்னை,ரப்பர், வாழை போன்ற மலைத் தோட்டப் பயிர்களில் ஊடுபயிராகப் பயிரடலாம். வெட்டுக் குச்சிகள் மூலமாக இனப் பெருக்கம் செய்யலாம். அரைஅடி நீளமுள்ள வெட்டுக்குச்சிகளை 2 அல்லது 3 என்ற எண்ணிக்கையில் சேர்த்து மழைக்காலத்தில் நடவு செய்யலாம்.

4) பயன் படும் பாகங்கள் :- பச்செளலி செடியில் வேர், தண்டு, இலை, ஆகியவற்றில் எண்ணெய் இருந்தாலும் இலைகளில் தான் அதிக எண்ணெய் இருக்கிறது. பறித்த இலையை நிழலில் 5 நாட்கள் உலர்த்த வேண்டும். இலையில் 3 - 3.5 சதம் எண்ணெய்கிடைக்கும்.

முக்கிய வேதியப்பொருட்கள்:- செஸ்குடெர்பீன்கள், ஒய்செலின்,
செய்செலின்க்ளாண்டுலர், டிரைகோம்ஸ், பச்செளலி பைரிடின், மற்றும் எப்பிகுவாய்ப்பைரிடின், போன்றவை ஆகும்.

5) பயன்கள்- பச்செளலி எண்ணெய் மிகத்தரம் வாய்ந்தது.
வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது. பச்செளலி இலைகளை நீரில் இட்டு குளிப்பதன் மூலம் வாதநோயைக் கட்டுப் படுத்தலாம்.

சீனமருத்துவத்தில் ஜலதோசம், தலைவலி,வாந்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன் படுகிறது. மிகக் குறைந்த அளவுகளில் உணவுப்பொருட்களை மணமூட்டப் பயன் படுகிறது.

Post Comment

திகார் சிறை கைதிகளுக்கு CAMPUS INTERVIEW

திகார் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வளாக தேர்வுநடத்தப்பட்டது. இதன்மூலம் உடனடியாக விடுதலைபெறும்கைதிகள் வேலைக்கான அனுமதி கடித்ததுடன் மகிழ்ச்சியோடு விடுதலையாக உள்ளனர். புதுடில்லியில் உள்ள திகார் சிறை மற்ற சிறைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. பேஸ் புக்கில் இணைந்த முதல் சிறைச்சாலை என்ற பெருமையோடு சிறை கைதிகளை படிக்க வைப்பது மற்றும் கைத்தொழில் கற்று அந்த பொருள்களை சந்தைப்படுத்திதருவது என்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் சிறை நிர்வாகம் இயங்கி வந்தது. அதன் வரிசையில் தற்போது மற்றொரு நடவடிக்கையாக சிறைகைதிகளுக்கு பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்கச் செய்யும் வகையில் கேம்பஸ் இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து வேதாந்தா பவுண்டேசன், அகர்வால் பேக்கர்ஸ், ரிலாக்ஸ்கோ, பாரடோ செக்யூரிட்டி உள்ளிட்டவை நேர்முகத்தேர்வை நடத்தியது.இதில் அகர்வால் பேக்கர்ஸ் நிறுவனம் மட்டும் 30 பேர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சிறை அதிகாரி டெபுடி ஜெனரல் நீரஜ்குமார் தெரிவித்ததாவது: இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தவறு செய்பவர்கள் திருந்த செய்ய ஒரு முயற்சியாகும். மேலும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது ஆண் சிறை கைதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த கேம்பஸ் இன்டர்வியூ வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து பெண் சிறை கைதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தா

Post Comment

Friday, February 25, 2011

முகத்தை அழகாக வைத்து கொள்ள அழகு குறிப்புகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.

முகம் பிரகாசமாகத் தோன்றினால்தான் அவன் ஆரோக்கியமுள்ள மனிதனாக இருக்க முடியும். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இதோ உங்களுக்கு சில எளிய இயற்கை மருத்துவ ஆலோசனைகள்.

முகம் பளபளக்க:

குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர்
பசும் பால் - 50 மி.லி.

இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

முகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:

முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க,

பசும்பால் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.

முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க:

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.

கண்கள் குளிர்ச்சியடைய:

உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.

தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

இளநரை மாற:

சிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.

உடல் பருமன் குறைய:

உணவில் புளிப்பான பதார்த்தங்களான புளித்த தயிர், புளிக்குழம்பு, தக்காளி, எலுமிச்சம் பழம், புளித்த திராட்சை போன்றவற்றை தவிர்த்து வந்தால் நாளடைவில் உடலில் இருக்கும் தேவையற்ற சதை நீங்கிவிடும். உடல் பருமன் குறையும்.

Post Comment

பூங்கா கேட்டு 10 வயது சிறுமி வழக்கு

ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார். ஹிமாச்சல்பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி விபாசாஸ்ரீவத்சாவ என்ற 11 வயது சிறுமி , ஐகோர்ட் நீதிபதி குரியன் ஜோசப் என்பருக்கு கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் சிம்லா நகரில் 2 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. 16 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன, முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. வானுயர கட்டடங்கள் உள்ளன. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களை போன்று வளரும் குழந்தைகளுக்கான ‌பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிம்லா நகராட்சி கடிதம் எழுதினேன். அதில் பூங்கா அமைக்க போதிய நிதி வசதி இல்லை என்ற தகவல் வந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக எழுதியிருந்தார். கடித்தையே புகார் மனுவாக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்குரியன் ஜோசப் , வி.கே. அஹூஜா ஆகியோர், ஹிமாச்சல் மாநில தலைமை செயலர், சிம்லா நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்‌கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Post Comment

Thursday, February 24, 2011

கண்ணாடி அணிந்து இருப்பவர்கள் அழகாக பராமரிக்க யோசனைகள்


பேஷனோ... இல்லை... கிளாமரோ... வெயிலோ இல்லை.. மழையோ.. கண்ணாடி என்பது இன்றைக்கு அத்தியாவசியமானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்...

கண்களை விட சிறிதான கண்ணாடிகளை அணியக்கூடாது. நம்முடைய முகத்துக்கு... கண்ணுக்குத் தேவையான அளவு பெரிதாக இருக்கும் பிரேம்களே நம்முடைய கண்களை பாதுகாக்கும்.

இப்போது நிறைய சிறுவர், சிறுமியர்கள் சின்னக் கண்ணாடியை போட்டுக் கொண்டு மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படி பார்ப்பதால் அடிக்கடி விழியின் திரை மூடி விலகுவதால் கண் பார்வை பாதிக்கும். கண்ணாடிக்கு மேலாகவும், கண்ணாடிக்குக் கீழாகவும் பார்க்கக்கூடாது. கண்ணாடி வழியாகத்தான் பார்க்க வேண்டும்.

கண்ணாடி என்பது நமக்கு அழகு சேர்ப்பதைவிட கண்ணை பாதுகாப்பதாக அமைய வேண்டும். கண்ணாடியின் பாரம் முழுவதும் மூக்கிலும், காதிலும் சேர்ந்திருக்கும். அதனால் மூக்கு, காதுகளுக்கு நன்றாக பொருத்தக்கூடிய கண்ணாடிகளை அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சுத்தமான ஸ்பாஞ்ச் துணியால் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பிரேம் மற்றும் லென்ஸ்களை திரவ சோப் மற்றும் ஷாம்பு போட்டு வேகமாக செல்லும் தண்­ணீரில் கழுவி, மெல்லிய துணியால் துடைத்து பயன்படுத்த வேண்டும். மெட்டல் பிரேம் என்றால் கழுவ வேண்டாம். சுத்தமான துணியால் துடைத்தால் போதும்.

கண்ணாடியைக் கழுவும்போது, மூக்கோடு சேர்ந்து தாங்கும் பகுதியை நன்றாகக் கழுவவும். ஏனென்றால் அந்த இடத்தில்தான் வியர்வை அதிகமாகப் படும்.

இப்போதெல்லாம் காண்டாக்ட் லென்ஸ் மாட்டுவதை யாரும் விரும்புவதில்லை. அடிக்கடி கழற்றி மாட்ட கஷ்டம் என்பதால் பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் கண்ணாடியை அனைவருமே விரும்பக் காரணம், இது கண்களைப் பாதுகாக்க மட்டுமல்ல... முகத்துக்கு எக்ஸ்ட்ரா பியூட்டியைக் கொடுக்கின்றன.

கண்ணாடியைப் பயன்படுத்துபவர்கள், பிறருடைய கண்ணாடியைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை அளவு இருக்கும். தலை அளவும் பெரிதும், சிறிதுமாக இருக்கும். கண்ணாடி பொருந்தாமல் இருந்தால் கண் பார்வை பாதிக்கும்.

3-வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

13 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, 8 மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆறு வயதிற்குக் கீழே 'ரெட்டினா' நரம்பு மூலம் பார்வை சக்தி குறையும் சூழல் அதிகம். அதனால் கண்ணாடி போட வேண்டிய அவசியம் உள்ள சிறுவர்- சிறுமிகள் கண்ணாடியைக் கழற்றாமல் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பிரேம்கள் எளிதானதாக... உடையாததாக... இருக்கவேண்டும். பிளாஸ்டிக் லென்ஸ்களை பொருத்துவது நல்லது.

கண்ணாடிகளை எப்போதும் அதற்கான கூடுக்குள் வைக்கவும். பயணம் செய்யும்போது 'சன் கிளாஸ்' நல்லது. சூடு, உஷ்ணம் ஆகியவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கும். இதனால் கண்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக கறுப்புக் கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள் 50 சதவீதம் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கின்றது.

Post Comment

பஸ் தினம் தேவையா ? போலீஸ் மண்டையை உடைத்த மாணவர்கள்

பஸ் தினம் என்ற போர்வையில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம், எல்லை தாண்டிப் போக ஆரம்பித்திருக்கிறது. நேற்று பச்சையபப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் தின நிகழ்ச்சி பெரும் வன்முறையாக மாறியது. பெண் துணை கமிஷனர், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேரை மாணவர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக 300 மாணவர்கள் மீது போலீஸார் கொலை மிரட்டல், பொது அமைதிக்குப் பங்கம் உள்பட 10 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டு போலீஸாரைக் கடுமையாக தாக்கிய மாணவர்களை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது.

பஸ் தினம் என்ற பெயரில் ஆண்டுதோறும் மாணவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது பல காலமாக நடந்து வருகிறது. ஆனால் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் இது ஒரு ஜாலியான நிகழ்ச்சியாக நடைபெறுகிறதே ஒழிய, வன்முறையாகவோ அல்லது மக்கள் முகம் சுளிக்கும் வகையிலோ நடைபெறுவதில்லை. ஆனால் சென்னையில் மட்டும் இது அத்து மீறல் நிகழ்வாக நடந்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமீபத்தில்தான் இதுபோன்ற வன்முறையை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை ஏன் அனுமதி தருகிறது என்று உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இருப்பினும் மாணவர்களின் உற்சாகத்தைத் தடுக்க விரும்பாத காவல்துறை பாதுகாப்புடன் பஸ் தின நிகழ்ச்சிகளை அனுமதித்து வருகிறது. ஆனால் நேற்று தங்களுக்குப் பாதுகாப்பாக வந்த போலீஸாரையே கடுமையாக தாக்கி, பெண் துணை கமிஷனரையும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரையும் ஆபாசமாக பேசி மது பாட்டில்கள், கற்களால் தாக்கி தங்களது முட்டாளதனத்தை வெளிப்படுத்தியுள்ளனர் மாணவர்கள்.

நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15பி மாநகர பஸ்சில் பஸ் தின விழா கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தனர். முதலில் சென்னை பாரிமுனையில் இருந்து மாணவர்கள் 15பி பஸ்சில் ஊர்வலமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து பாரிமுனையில் இருந்து ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையிலும், கீழ்ப்பாக்கம் பகுதியிலும் வழிநெடுகிலும், ஏதோ அரசியல் கட்சிகளின் பேரணிக்குக் கொடுக்கப்படுவதைப் போல போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் பகல் 11 மணி அளவில் சுமார் 300 மாணவர்கள் எழும்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கூடினார்கள். முதலில் அவர்களுக்கு பஸ்களை வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் மறுத்தது. இருப்பினும் மாணவர்கள் பிரச்சினை வராது என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து பஸ்கள் தரப்பட்டன. 3 பஸ்களில் மாணவர்கள் ஏறிக் கொண்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதற்காகவும், பெண் துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் பெரும் போலீஸ் படை பஸ்களின் பின்னாலேயே சென்றது.

கல்லூரி செல்லும் வரை மாணவர்கள் பெரிய அளவில் பிரச்சினை தரவில்லை. ஆனால் கல்லூரியை அடைந்ததும் ஒரு பிரிவு மாணவர்கள் கல்லூரிக்குள் போகாமல் வெளியிலேயே இருந்தபடி ஆட்டம் பாட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை அணுகிய போலீஸார், அதுதான் பஸ் தினம் முடிந்து விட்டதே, உள்ளே போங்கள் என்று கூறினர். இதையடுத்து போலீஸாருடன், மாணவர்கள் வாக்குவாதத்தில் இறங்கினர்.

அவர்களை சமாதானப்படுத்த துணை கமிஷனர் லட்சுமி முயன்றார். ஆனால் அவரை நோக்கி சில மாணவர்கள் மது பாட்டில்களையும், கற்களையும் வீசித் தாக்கினர். மேலும் அவரை நெருக்கித் தள்ளவும் முயன்றனர். சிலர் ஆபாசமாகவும் பேசினர். இதையடுத்து துணை கமிஷனரைக் காக்கும் வகையில், உதவி கமிஷனரும், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியும் முன்னால் வந்தபோது கல்வீச்சில் அவர்கள் காயமடைந்தனர். ராஜேஸ்வரியின் தலையில் கற்கள் பட்டதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இருப்பினும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் மாணவர்களை உள்ளே செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது துணை கமிஷனர் லட்சுமி, மாணவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனால் போலீஸார் தடியடி நடத்தாமல், தங்களை நோக்கி வீசப்பட்ட கற்களையும் பொருட்படுத்தாமல் தடுப்புகளால் மறைத்தபடி, மாணவர்களை உள்ளே செல்லுமாறு வாய் மூலமாக கூறினர்.

இந்த நிலையில் ஈவேரா சாலையில் கற்கள் வீசப்பட்டதில் சாலையில் சென்ற வாகனங்கள் சில சேதமடைந்தன. பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சமயத்தில் திடீரென கல்லூரி வளாகத்திற்குள்ளிருந்து கல்வீச்சு பலமாக எழுந்தது. செருப்புகள், உடைந்து போன டியூப் லைட்டுகள், இரும்புக் குழாய்கள் என சரமாரியாக வீசப்பட்டன. இதனால் நிலைமை மோசமடைந்தது. இனியும் அமைதி காக்க முடியாது என்று உணர்ந்த போலீஸார் மாணவர்கள் மீது லேசான தடியடி நடத்தி உள்ளே விரட்டினர்.

இதையடுத்து பயந்து போன மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஓடினர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை விரட்டிய போலீஸார் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மாணவர்கள் கல்வீச்சை நிறுத்தவில்லை. தொடர்ந்து வீசியபடி இருந்தனர். இதில் 35 போலீஸார் காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சக போலீஸார்.

இந்த நிலையில் கல்லூரி முதல்வர் சேகர் அங்கு வந்தார். மாணவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவருக்குப் பலன் கிடைக்கவில்லை. ஆனால் வெளியே நின்றிருந்த போலீஸாரிடம் வந்து உடனடியாக அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். அதற்கு துணை கமிஷனர் லட்சுமி, முதலில் மாணவர்களை கல்வீச்சை நிறுத்தச் சொல்லுங்கள். உள்ளே நடந்தால் பரவாயில்லை, வெளியில் செல்லும் பொதுமக்களையும், போக்குவரத்தையும் உங்களது மாணவர்கள் பாதிக்கிறார்கள். அதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்று கோபத்துடன் கேட்டார். இதையடுத்து மாணவர்களிடம் மீண்டும் பேசினார் சேகர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அங்கு இணை ஆணையர் சாரங்கன் வந்து சேர்ந்தார். கல்லூரி முதல்வரை அழைத்த அவர், அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். 15 நிமிடம் டைம் தருகிறேன். அதற்குள் அனைவரும் போய் விட வேண்டும். பெண் என்றும் பாராமல் துணை கமிஷனரை ஆபாசமாக பேசியுள்ளனர். பெண் இன்ஸ்பெக்டரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதித்தான் அமைதி காக்கிறோம். ஒன்று நீங்கள் அவர்களை கட்டுப்படுத்துங்கள், இல்லாவிட்டால் எங்களிடம் விடுங்கள் என்று கடுமையாக எச்சரித்தார்.

இதையடுத்து இணை ஆணையரின் எச்சரிக்கையை மாணவர்களிடம் சேகர் சொல்ல, அதன் பிறகு மாணவர்கள் சற்று தணிந்து கல்வீச்சை நிறுத்தி விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களைப் போலீஸார் ஒன்றும் செய்யவில்லை.

மாணவர்களின் இந்த அட்டகாசத்தால் அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக காணப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படிக்கும் மாணவர்களுக்கு கொண்டாட்டம் தேவைதான், ஆனால் தங்களைக் காக்க வந்த போலீஸாரையும் தாக்கி, அப்பாவி பொதுமக்களையும் அச்சுறுத்தி, வாகனப் போக்குவரத்தையும் பாதித்து ஒரு கொண்ட்டாட்டம் அவசியம்தானா. படிக்கும் மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அண்ணா படித்த கல்லூரி:

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிரபலமான கல்லூரிகளில் பச்சையப்பன் கல்லூரியும் ஒன்று. இதை செல்லமாக அனைவரும் பச்சையப்பாஸ் என்றுதான் அழைப்பார்கள்.

பேரறிஞர் அண்ணா படித்த கல்லூரி இது. திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகனும் இங்குதான் படித்தார். இதேபோல பல்துறைப் பிரமுகர்களும் படித்த பெருமையை உடையது இக்கல்லூரி. ஆனால் இக்கல்லூரி இன்று அனைவரின் வெறுப்பையும் ஒரே நாளில் சந்தித்து விட்டது.

இக்கல்லூரி இதுபோன்ற அவமானத்தை சந்திப்பது இது முதல் முறையல்ல. முன்பும் கூட இதுபோல நடந்துள்ளது. இந்தக் கல்லூரி மாணவர்களுக்கும், பிற கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பது சகஜம்.

ஆனால் நேற்று நடந்த வரலாறு காணாத வன்முறையால் பச்சையப்பன் கல்லூரி மக்களின் அதிருப்தியை ஏகபோகமாக சம்பாதித்து விட்டது.

இதற்கிடையே, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே பிற கல்லூரி மாணவர்களும், ரவுடிகள் போன்ற சமூக விரோதிகளும் புகுந்து போலீஸாரைத் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post Comment

அந்தரத்தில் தொங்கும் பெண்கள்











Post Comment

லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை


லிபியாவில் அதிபர் கேர்ணல் மம்மூர் கடாஃபிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டிரு்பபதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மீ்ட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதை அறிவித்தார்.

"லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு கப்பல்கள் அங்கு சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கப்பல் ஏற்கெனவே எகிப்தை அடைந்துவிட்டது. அங்கிருந்து பென்காசி நகருக்குச் செல்லும். பென்சாகி விமான நிலையம் குண்டு வீசித் தாக்கப்பட்டிருப்பதால், அதிக அளவில் கப்பல்களை ஏற்பாடு செய்து இந்தியர்களை மீட்பதுதான் சரியாக இருக்கும் என இந்தியத் தூதரும் தெரிவித்திருக்கிறார். அதனால், அதிக கப்பல்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார் அமைச்சர் கிருஷ்ணா.முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த அமைச்சர் கிருஷ்ணா, லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.லிபியா மட்டுமன்றி, ஏமன், பஹ்ரைன் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.மேலும், மிகுந்த அத்தியாவசியமாக இருந்தால் தவிர, லிபியா, ஏமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், மீனவர் பிரச்சினை குறித்தும் அமைச்சர் கிருஷ்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்றதாகவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேரடியாக கொழும்பு சென்று இந்திய அரசின் கவலையை வெளிப்படுத்தியதுடன், அதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.சமீபத்தில், 136 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டு, இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்ட அமைச்சர் கிருஷ்ணா, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதுதான், அவர்கள் கைது செய்யப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் முக்கியக் காரணம் என்று இந்த அவைக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.ஆனால், எல்லை தாண்டிச் செல்கின்ற காரணத்தால் அவர்கள் மீது பலப்பிரோயகத்தை உபயோகிப்பது முறையல்ல என்று கிருஷ்ணா குறிப்பிட்டார்.அதே நேரத்தில், இலங்கை மீனவர்கள் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

மீன் வளம் தொடர்பான இரு நாட்டு கூட்டு செயல்பாட்டுக் குழுக்களும் மார்ச் மாதம் கூடிப் பேச உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், இரு நாட்டு மீனவர் அமைப்புக்களும் தொடர்ந்து ஒருங்கிணைப்புக்களை வலுப்படு்த்திக் கொள்ள வேண்டும் என்றும், அது நிலைமை சீரமைக்க உதவிகரமாக இருக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

Post Comment

Wednesday, February 23, 2011

ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்பிளண்டர் ப்ரோ

உலகி்ல் அதிகம் விற்பனையாகும் என்ற பெருமையுடன், இன்றைக்கும் மார்க்கெட்டில் தன் இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்காமல், நிலைத்து நிற்கும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்பிளண்டர், கடந்த 1994ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட பைக்குகள் ஆட்சி செய்து வந்த இந்திய சந்தையில்,4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட ஸ்பிளண்டர் தனது மைலேஜ் புரட்சியால் மெல்ல வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கத் துவங்கியது.

மேலும், மாசு கட்டுப்பாடு விதிகளால் 2 ஸ்ட்ரோக் பைக்குகள் மார்க்கெட்டிலிருந்து வழக்கொழிய துவங்கியதால், ஸ்பிளண்டருக்கு நிலையான இடம் கிடைத்து.

கால மாற்றத்துக்கு தக்கவாறு மார்க்கெட்டில் தனது பெயரிலும்,வடிவமைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்தாலும், ஸ்பிளண்டருக்கு கிடைத்த பெருமை வேறு எந்த மோட்டார்சைக்கிளுக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்பிளண்டரின் புதிய அவதாரமான ஸ்பிளண்டர் ப்ரோவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

ஸ்பிளண்டர் ப்ரோவின் சிறப்பம்சங்கள்:

எலக்ட்ரிக் ஸ்டார்ட்

பாரத் ஸ்டேஜ் III மாசு கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்ட 97.2சிசி எஞ்சின்.

அதிகப்பட்ச டார்க் 7.95Nm @ 5000 rpm

அதிகபட்ச திறன் 7.4bhp @ 8000 rpm.

4 ஸ்பீடு கியர் பாக்ஸ்

அழகிய வடிவமைப்புடன் கூடிய புதிய ஸ்டிக்கர்கள்

குரோமியம் டயல் கொண்ட ஸ்பீடோமீட்டர்

தெளிவாக தெரியும் வகையில் இன்டிகேட்டருக்கு லென்ஸ் மற்றும் ஆரஞ்ச் பல்பு

குரோமியம் பூச்சுக்கொண்ட சைலன்சர் கவர்

புதிய ஹேண்டில்பார் மற்றும் பின்பக்க கேரியர்

டிரம் பிரேக்குகள்

சக்திவாய்ந்த 12 V – 2.5 Ah பேட்டரி

ஒரு லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்

கண்ணை கவரும் காஸ்ட் வீல்

முன்பக்க டயர் 2.75X18-42 P,பின்பக்க டயர் 2.75X18-48 P

மைலேஜ்: லிட்டருக்கு 65-70 கி.மீ(பரிந்துரைகளின்படி)

மொத்த எடை: 109கிலோ

Post Comment

பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி


ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் 200 பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலரும் வறுமை காரணமாக இரவில் வெறும் வயிற்றோடு படுக்கப் போவதாக அவரிடம் சொன்னார்கள். அவர்களுக்கு தினமும் இரவு வேளையில் உணவு வழங்கத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தர தொண்டு நிறுவனத்தின் மூலம் சுதா மூர்த்தி ஏற்பாடு செய்தார்.

சில வாரங்கள் கழித்து அந்த பயனாளிகள் நிலை எந்த அளவு முன்னேறி உள்ளது என்றறிய சுதா மூர்த்தி சென்ற போது அவர்கள் யாரும் சோறு கிடைத்து விடுவதால் உழைப்பதில்லை, சோம்பேறிகளாக மாறி விட்டனர் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. கேட்டு வருத்தமடைந்தாலும் சுதா மூர்த்தி அவர்களுக்கு மேலும் உதவ முற்பட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் ஆனதால் அவர்களுக்கு கம்பளிப் போர்வை தர எண்ணினார். அதை அனுப்பும் போது அவர்களுக்கு தடுப்பூசியும் போடும் யோசனையும் அவருக்கு வரவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு கம்பளிப் போர்வையும் தருவது என்று முடிவு செய்து அவர்களுக்கு அறிவித்தார்.

அப்போது தான் தெரிந்தது அவர்களில் இருநூறு பேர் இல்லை, இருப்பது ஐம்பது பேர் தான் என்ற உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்குத் தான் கையோடு கம்பளிப் போர்வையும் கிடைக்கும் என்றான போது உண்மை வெளி வந்து விட்டது. ஐம்பது பேர் இருநூறு பேர்களுக்கான உதவியைப் பெற்று வந்ததை அவர் அறிந்து கொண்டு விட்டார் என்று கோபப்பட்டு அவர்கள் அவரை வாயிற்கு வந்தபடி ஏசி விட்டனர். இத்தனை நாட்கள் அவரிடம் உதவி பெற்றும் ஏமாற்றியதை அறிந்து கொண்டு நிறுத்தியதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இது ஒரு நிகழ்ச்சி.

சுதா மூர்த்தியின் சமூக சேவை சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கர்னாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சமயம் அது. அந்த தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுடைய புகைப்படங்களும் தகவல்களும் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. அந்த செய்தித் தாள்களில் கண்ட அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் புகைப்படம் சுதா மூர்த்தி அவர்களை மிகவும் இரக்கப்பட வைத்தது. எலும்பும் தோலுமாக, ஒட்டிய கன்னத்துடன் இருந்த ஹனுமந்தப்பா என்ற சிறுவனின் புகைப்படம் தான் அது. அவன் ராமபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஏழை கூலித் தொழிலாளியின் மகன். அவனோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், அவன் தான் மூத்தவன் என்ற தகவல்களைப் படித்த அவர் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலாசத்தில் தன்னை சந்திக்க வரும்படி அவனுக்கு எழுதிய அவர் பெங்களூர் வந்து போகத் தேவையான பயணத் தொகையும் அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன படியே வந்து அவரை சந்தித்த ஹனுமந்தப்பாவிடம் சுதா மூர்த்தி சொன்னார். “நீ மேற்கொண்டு என்ன படிக்க விரும்புகிறாய்?, நீ என்ன படிப்பு படிக்க விரும்பினாலும் அந்த படிப்புக்கான செலவுகளை எங்கள் இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்”

அவன் தன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரமான பெல்லாரியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

“ஆசிரியர் படிப்பு தான் என்றில்லை, நீ என்ன படிக்க விரும்பினாலும் தயங்காமல் சொல். உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று சொன்னார் சுதா மூர்த்தி.

ஆனால் அந்த சிறுவன் தன் ஆசிரியர் படிப்பு ஆர்வத்திலேயே உறுதியாய் இருந்தான்.

“சரி அந்தப் பள்ளிக்குச் சென்று அந்தப் பயிற்சிப் படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து எனக்கு விவரமாக எழுது” என்று கூறி சுதா மூர்த்தி அவனை அனுப்பி வைத்தார்.

போன சிறுவன் உடனடியாக பதில் எழுதினான். பள்ளிக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சாப்பாடுக் கட்டணம், புத்தகக் கட்டணம் எல்லாம் சேர்ந்து மாதம் முன்னூறு ரூபாய் செலவாகும் என எண்ணி இருந்தான். யாரோ உதவி செய்கிறார்கள் என்பதால் தகுதிக்கு மீறி எதையும் உபயோகிக்காமல் குறைந்த பட்சத் தொகையையே அவன் எழுதி இருக்கிறான் என்பதை சுதா மூர்த்தி புரிந்து கொண்டார். உடனடியாக அவனுக்கு ஆறு மாதச் செலவுக்கான தொகையாக 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த ஆறு மாதச் செலவுக்கான தொகை 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக ஹனுமந்தப்பாவிடம் இருந்து சுதா மூர்த்திக்கு முன்னூறு ரூபாய் திரும்பி வந்தது. அவர் அனுப்பிய தொகைக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த சிறுவன் எழுதியிருந்தான். ”இங்கு ஒரு மாதக் கல்லூரி ஸ்டிரைக்கில் இருந்தது. அதனால் நான் பெல்லாரியில் ஹாஸ்டலில் தங்காமல் கிராமத்தில் இருக்கும் என் வீட்டுக்கே சென்று விட்டேன். அதனால் ஒரு மாத செலவுத் தொகை முன்னூறு ரூபாயை நான் திருப்பி அனுப்பி உள்ளேன்”.

சுதா மூர்த்தி அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த முன்னூறு ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவ முன் வந்தவரிடம் நான்கு மடங்கு அதிகமாக ஏமாற்றி வாங்கி பயன்படுத்தி அதை அவர் அறிந்து கொண்டார் என்றவுடனேயே அவரை ஏசிய அந்தக் கூட்டத்தின் தன்மை எப்படி இருக்கிறது? அனுப்பிய தொகையில் அனுப்பிய நோக்கத்திற்காகப் பயன்படாத சிறு தொகையை பல்வேறு செலவுகள் இருப்பினும் அதற்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஹனுமந்தப்பாவின் தன்மை எப்படி இருக்கிறது?

ஒருவருடைய நல்ல எண்ணத்தை நியாயம் இல்லாத விதத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருட்டுக் கூட்டம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உதவும் உள்ளமே நெகிழ்ந்து நிறையும் படி அந்த உதவியை முறையாகப் பயன்படுத்தி முன்னேற முடிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த முதல் வகைப் பயனாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்ப்பதும், இரண்டாவது வகைப் பயனாளிகளைக் கண்டு கொண்டு உதவி அவர்கள் முன்னேற உதவுவதுமே உண்மையான சமூக சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் தங்கள் சேவை தகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறதா என்று கவனிக்காமல் சேவை செய்வது முட்டாள்தனமே அல்லாமல் சமூக சேவை அல்ல. அதே போல் பயனாளிகளில் ஏமாற்றுபவர்களும், நன்றி கெட்டவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதாலேயே யாருக்கும் உதவிக்கரம் நீட்ட மறுப்பதும் உதவ முடிந்தவர்களுக்குப் பெருமை அல்ல. அப்படிச் செய்தால் ஹனுமந்தப்பா போன்ற நல்ல, திறமையான மனிதர்கள் வளர முடியாமல் முளையிலேயே கருகிப் போவார்கள். எத்தனையோ நல்ல, உண்மையான, பாவப்பட்ட மனிதர்கள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவினால், அந்த உதவி பெற்றவர்கள் கடைத்தேறுவதைக் கண்ணால் காணும் போது பெறும் நிறைவுக்கு ஒப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.

courtesy.enganesan

Post Comment

இந்திய கிராம மக்கள்

பிரதேச மாநிலத்தில் உள்ள குலு கிராம பகுதி மக்கள் டிவி நிகழ்ச்சி பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். அந்த கிராமத்தில் மின் வசதி உட்பட அனைத்துவசதிகள் இருந்தாலும் டிவி நிகழ்ச்சிகள் மட்டும் பார்ப்பதை கிராமத்தில் உள்ள அனைத்துமக்களும் ஒற்றுமையாக இருந்து தவிர்த்து வருகின்றனர்.இது குறித்து கிராம தலைவி சீமா தேவி கூறுகையில் கிராம மக்கள் தெய்வத்தை உறுதியாக நம்புகின்றனர்.டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் போன்றவை தங்களின் நம்பிக்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர்.கடந்த இரண்டு தலைமுறையாக யாரும் டிவியை பார்ப்பது கிடையாது.டிவியில் காண்பிக்கப்படும் ராமாயாணம் மற்றும் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். முன்னாள் கிராம தலைவர் பன்னா லால் குறிப்பிடுகையில் இன்றைய தலைமுறையினர் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்து குடும்ப மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

Post Comment

Tuesday, February 22, 2011

கடன் தொல்லையில் இருந்து விடுபட ரகசிய வழிகள்




சனியும், செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம் மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும். இத்தகைய கடன் தொல்லையில் இருந்த விலகுவதற்குச் சுலபமான ரகசிய வழிகள் சில உள்ளன. அவை இதுவரை பல காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தாலும் பொதுநலம் கருதி வெளிப்படுத்துவது நல்லது என்று கருதுகிறேன்.

அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்) யாரிடம் அதிகமாகக் கடன் பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறுது சிறிதாக குறைந்து முற்றிலும் இல்லாது போய்விடும் இந்த லக்ன கணக்குத் தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக்கிழமையிலோ தினசரி காலண்டல் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். இதுவும் கணிக்கத் தெயாதவர்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படிச செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்.


courtesy:யோகி ஸ்ரீ ராமானந்த குரு

Post Comment

கறுப்புப் பணம் யார் யார் வைத்து இருக்கிறார்கள் மொரீஷியஸ்,ஜெர்மன் அரசு தகவல் தர சம்மதம்


தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய தகவல் அளிக்க, மொரீஷியஸ் அரசு முன்வந்துள்ளது.

சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட சில நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். பங்கு வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தை, சிலர் மொரீஷியஸ் நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி கிடையாது என்பதால், பலர் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை போட்டு வைத்துள்ளனர்.

இது குறித்து மொரீஷியஸ் நாட்டு நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிடுகையில், "கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவிடமிருந்து கறுப்புப் பணம் தொடர்பான தகவல் அளிக்கும்படி 64 கோரிக்கைகள் வந்துள்ளன. சர்வதேச சட்டத்துக்குட்பட்டு தேவையான தகவல்களை இந்தியாவுக்கு அளித்து வருகிறோம். 2009ம் ஆண்டு" செபி ' மற்றும் இந்திய சந்தை கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து வங்கியில் உள்ள இந்திய பணம் குறித்து 17 கோரிக்கைகள் வந்தன. 2007ம் ஆண்டு இந்தியாவின் நிதி புலனாய்வு அதிகாரிகள் வாயிலாக 10 கோரிக்கைகள் வந்தன. அதே போல எங்கள் தரப்பிலிருந்து 15 கோரிக்கைகளை, இந்தியாவின் நிதி புலனாய்வு அமைப்பிடம் வைத்தோம். வங்கி தொடர்பான தகவல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ள, ஏற்கனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொரீஷியஸ் துணை பிரதமர் ஜக்நாத் குறிப்பிடுகையில், " நிதி முறைகேடு, கறுப்புப் பணம் உள்ளிட்டவற்றை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார்.

***********

கருப்பு பண ரகசிய கணக்கு விவரம் : ஜெர்மன் வெளியிட சம்மதம்


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கின்ற கருப்புபணம் குறித்த ரகசிய கணக்கு விவரங்களை ஜெர்மன் நாடும் இந்தியாவுக்கு தெரிவிக்க சம்மதம் அளித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் பெரும்பாலான இந்தியர்கள் சட்டவிரோதமாக கருப்புபணம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அது குறித்து விவரங்களை வெளியிடக்க‌ோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக மத்திய அரசும் முதலில் வெளியிட முடியாது என ‌தெரிவித்து. பின்னர் சிலநிபந்தனைகளுடன் வெளியிடுவதாகவும் இது குறித்து ‌சம்மந்தப்பட்ட வெளிநாட்டுகளுடன் பேச்சுநடத்தி வருவதாகவும் கூறியது. இந்நிலையில் ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாடு பிரான்ஸின் பாரீசில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் ,ஜெர்மன் நிதி அமைச்சர் ஒல்ப்காங்க்சச்சாயூ, ஜெர்மன் மத்திய வங்கியின் கவர்னர் ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சந்தித்து பேசினர். அப்போது ஜெர்மனியின் முக்கிய வங்கியான லெச்டென்சியன்ஸ் நகரில் எல்.ஜி.டி, வங்கியின் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய ரகசிய கணக்கு விவரங்களையும், இந்தியர்கள் யார் என்ப‌தையும் வெளியிட சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக இரு நாடுகளிடையே எரிசக்தி, அனுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்தன.



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒட்டு போடுவது நமது உரிமை , நாம் அதை (சோம்பேறிதனத்தினால்) யாருக்காகவும் விடுத்தார கூடாது ,மறக்காமல் ஒட்டு போடுவோம் .

ஒட்டு போட்டு விட்டு உங்களது கருத்துக்களை ஒட்டு சாவடியில் சொல்ல முடியாது , ஆனால் இங்கே நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்வதை யாராலும் தடுக்க முடியாது !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Post Comment

Monday, February 21, 2011

நடிகர் விஜய் நாளை அரசியல் என்னும் கடலில் மீனவர்கள் உதவியுடன் குதிக்கிறார்


தனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். 'சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்', என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.
பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம்.

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.

அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.

என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.

உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

####################################################################################
ஒட்டு போடுவது நமது உரிமை , நாம் அதை (சோம்பேறிதனத்தினால்) யாருக்காகவும் விடுத்தார கூடாது ,மறக்காமல் ஒட்டு போடுவோம் .

ஒட்டு போட்டு விட்டு உங்களது கருத்துக்களை ஒட்டு சாவடியில் சொல்ல முடியாது , ஆனால் இங்கே நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்வதை யாராலும் தடுக்க முடியாது !

************************************************************************************

Post Comment

மூலிகை அறிமுகம் 5 -துளசி


1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.
குணமாகும் வியாதிகள்.



1.உண்ட விஷத்தை முறிக்க.
2.விஷஜுரம்குணமாக.
3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5.காது குத்துவலி குணமாக.
6.காது வலி குணமாக.
7.தலைசுற்றுகுணமாக.
8.பிரசவ வலி குறைய.
9.அம்மை அதிகரிக்காதிருக்க.
10.மூத்திரத் துவாரவலி குணமாக
. 11.வண்டுகடி குணமாக.
12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி,
வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16.அஜீரணம் குணமாக.
17.கெட்டரத்தம் சுத்தமாக.
18.குஷ்ட நோய் குணமாக.
19.குளிர் காச்சல் குணமாக.
20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23.காக்காய்வலிப்புக் குணமாக.
24.ஜலதோசம் குணமாக.
25.ஜீரண சக்தி உண்டாக.
26.தாதுவைக் கட்ட.
27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக
. 28.இடிதாங்கியாகப் பயன்பட
29.தேள் கொட்டு குணமாக.
30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32.வாதரோகம் குணமாக.
33.காச்சலின் போது தாகம் தணிய.
34.பித்தம் குணமாக.
35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37.சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38.மாலைக்கண் குணமாக.
39.எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த
. 42.வாந்தியை நிறுத்த.
43.தனுர்வாதம் கணமாக.
44.வாதவீக்கம் குணமாக.
45.மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46.வாய்வுப் பிடிப்பு குணமாக.
47.இருமல் குணமாக.
48.இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த
. 50.இளைப்பு குணமாக.
51.பற்று, படர்தாமரை குணமாக.
52.சிரங்கு குணமாக.
53.கோழை, கபக்கட்டு நீங்க
. 54.சகல காய்ச்சல் மாத்திரை.
55.சகல வித காய்ச்சலுக்கும் துளசி மாத்திரை.
(நெல்லை குமாரசாமி வைத்தியர்-1998)
-----------------------------------------------


ஒட்டு போடுவது நமது உரிமை , நாம் அதை (சோம்பேறிதனத்தினால்) யாருக்காகவும் விடுத்தார கூடாது ,மறக்காமல் ஒட்டு போடுவோம் .

ஒட்டு போட்டு விட்டு உங்களது கருத்துக்களை ஒட்டு சாவடியில் சொல்ல முடியாது , ஆனால் இங்கே நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்வதை யாராலும் தடுக்க முடியாது !

Post Comment

பாஸ்ட் பூட் சாப்டா சீக்கிரம் சாவு ?

ஃபாஸ்ட் புட் எனப்படும் வேக உணவுக் கலாச்சாரம் நகரப்பகுதிகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஆக்கிரமித்துவிட்டது.தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சின்னச் சின்ன நகரங்களிலும் இன்றைக்கு ஃபாஸ்ட் புட் கடைகளில் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கிறது.சாப்பிட ருசியாக இருந்தாலும், இந்த வேக உணவுகள் பல்வேறு வியாதிகளை இழுத்துவிடும் சாத்தியம் ஏராளமாக உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரிழிவு நோய் வரவும் இந்த வேக உணவுகள் வித்திடுகின்றன. பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை என பல தொல்லைகள் ஃபாஸ்ட் புட்டால் வருகின்றன.2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம். இதே போன்றதொரு கணக்கெடுப்பை பெங்களூர் மற்றும் மும்பையில் மேற்கொண்டபோது, 50 சதவீத நோயாளிகள் ஃபாஸ்ட் புட் உணவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு நாடுகளில் குந்தைகளிடம் நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் மற்றும் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME