பேஷனோ... இல்லை... கிளாமரோ... வெயிலோ இல்லை.. மழையோ.. கண்ணாடி என்பது இன்றைக்கு அத்தியாவசியமானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்...
கண்களை விட சிறிதான கண்ணாடிகளை அணியக்கூடாது. நம்முடைய முகத்துக்கு... கண்ணுக்குத் தேவையான அளவு பெரிதாக இருக்கும் பிரேம்களே நம்முடைய கண்களை பாதுகாக்கும்.
இப்போது நிறைய சிறுவர், சிறுமியர்கள் சின்னக் கண்ணாடியை போட்டுக் கொண்டு மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படி பார்ப்பதால் அடிக்கடி விழியின் திரை மூடி விலகுவதால் கண் பார்வை பாதிக்கும். கண்ணாடிக்கு மேலாகவும், கண்ணாடிக்குக் கீழாகவும் பார்க்கக்கூடாது. கண்ணாடி வழியாகத்தான் பார்க்க வேண்டும்.
கண்ணாடி என்பது நமக்கு அழகு சேர்ப்பதைவிட கண்ணை பாதுகாப்பதாக அமைய வேண்டும். கண்ணாடியின் பாரம் முழுவதும் மூக்கிலும், காதிலும் சேர்ந்திருக்கும். அதனால் மூக்கு, காதுகளுக்கு நன்றாக பொருத்தக்கூடிய கண்ணாடிகளை அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சுத்தமான ஸ்பாஞ்ச் துணியால் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பிரேம் மற்றும் லென்ஸ்களை திரவ சோப் மற்றும் ஷாம்பு போட்டு வேகமாக செல்லும் தண்ணீரில் கழுவி, மெல்லிய துணியால் துடைத்து பயன்படுத்த வேண்டும். மெட்டல் பிரேம் என்றால் கழுவ வேண்டாம். சுத்தமான துணியால் துடைத்தால் போதும்.
கண்ணாடியைக் கழுவும்போது, மூக்கோடு சேர்ந்து தாங்கும் பகுதியை நன்றாகக் கழுவவும். ஏனென்றால் அந்த இடத்தில்தான் வியர்வை அதிகமாகப் படும்.
இப்போதெல்லாம் காண்டாக்ட் லென்ஸ் மாட்டுவதை யாரும் விரும்புவதில்லை. அடிக்கடி கழற்றி மாட்ட கஷ்டம் என்பதால் பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் கண்ணாடியை அனைவருமே விரும்பக் காரணம், இது கண்களைப் பாதுகாக்க மட்டுமல்ல... முகத்துக்கு எக்ஸ்ட்ரா பியூட்டியைக் கொடுக்கின்றன.
கண்ணாடியைப் பயன்படுத்துபவர்கள், பிறருடைய கண்ணாடியைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை அளவு இருக்கும். தலை அளவும் பெரிதும், சிறிதுமாக இருக்கும். கண்ணாடி பொருந்தாமல் இருந்தால் கண் பார்வை பாதிக்கும்.
3-வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
13 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, 8 மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆறு வயதிற்குக் கீழே 'ரெட்டினா' நரம்பு மூலம் பார்வை சக்தி குறையும் சூழல் அதிகம். அதனால் கண்ணாடி போட வேண்டிய அவசியம் உள்ள சிறுவர்- சிறுமிகள் கண்ணாடியைக் கழற்றாமல் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பிரேம்கள் எளிதானதாக... உடையாததாக... இருக்கவேண்டும். பிளாஸ்டிக் லென்ஸ்களை பொருத்துவது நல்லது.
கண்ணாடிகளை எப்போதும் அதற்கான கூடுக்குள் வைக்கவும். பயணம் செய்யும்போது 'சன் கிளாஸ்' நல்லது. சூடு, உஷ்ணம் ஆகியவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கும். இதனால் கண்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக கறுப்புக் கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள் 50 சதவீதம் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கின்றது.
5 Comments
யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===
..
முகப்பருவைக் குறைக்க ஏதாவது வழி சொல்லுங்கள்.