பேஸ்புக் மூலம் ரூ.2 கோடி இழந்த ஆஸி. பெண்

பேஸ்புக்கில் காதல்வயப்பட்ட ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ரூ.2 கோடியை இழந்துள்ளார். உள் அலங்கார நிபுணர் ஆலன் மெக்கார்ட்டி என்ற பெயரில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக பெர்த் நகரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு ஆஸ்திரேலிய போலீஸாரும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரும் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இவரைப் போல மேலும் சில பெண்கள் ஏமாந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
               இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கேரி நியூகாம்பி கூறியதாவது:
பெர்த் நகரைச் சேர்ந்த பெண், ஆலன் மெக்கர்ட்டி என்பவருடன் பேஸ்புக்கில் நண்பராகி உள் ளார். பின்னர் இது காதலாக மலர்ந் துள்ளது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தான், இப்போது ஆஸ்திரேலியா வில் வசித்து வருவதாக அவர் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் உள் அலங்கார தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
               இதை நம்பும் வகையில் தனது பேஸ்புக் இணையதள பக்கத்துடன், allanmccarty.com and allanmccartydecor.com என்ற இணையதளங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளார். இதை நம்பிய அந்தப் பெண் ரூ.1.95 கோடி கொடுத்துள்ளார். பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள அந்த நபரை தொடர்புகொண்டபோது பலன் இல்லை. இதையடுத்து புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அப்படி ஒரு நபர் உண்மையிலேயே இல்லை என்றும் புகைப்படத்தில் உள்ள நபர் அமெரிக்காவின் கலிபோர் னியா நகரில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. நைஜீரியா வைச் சேர்ந்தவர்கள் இவரது பேஸ்புக்கிலிருந்து புகைப் படத்தை திருடி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இதற்குக் காரணம்.இவர்களது மோசடி வலை யில் சிக்கி நியூ சவுத் வேல்ஸ் பெண் ஒருவரும் ரூ.32.5 லட்சத்தை இழந்துள்ளார். டாஸ்மானி யாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இதுபோல ஏமாந்துள்ளார்.

Post a Comment

1 Comments

ADMIN said…
இதுக்குத்தான் இணையத்தில் உலவும் நண்பர்களை நம்பவே கூடாது.

ஆங்கிலம் உச்சரிப்பு பிரச்னை தீர மென்பொருள்