சீனாவில் ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களில் 40 சதவீதம் வரை போலிகள் என்று சீன அரசு அறிக்கை மூலம் தெரி வித்திருக்கிறது. இந்த அறிவிப்பு அலிபாபா உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.கடந்த வருடம் மட்டும் 77,800 புகார்கள் அதிகாரப்பூர்வமாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட் டிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டை விட இது 356 சதவீதம் அதிகமாகும்.
முதல் இடத்தில் சீனா
சர்வதேச அளவில் ஆன்லைன் விற்பனை சந்தையில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் 44,200 கோடி டாலர் அளவுக்கு விற்பனை இருந்தது. கடந்த வருடம் விற்பனை 40 சதவீதம் வரை உயர்ந்தது. அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் 30,000 கோடி டாலராக இருக்கிறது.
இந்த நிலையில் போலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது இ-காமர்ஸ் துறையின் முக்கிய பிரச்சினை என்று வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித் திருக்கிறது. சீனாவின் முக்கிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா கூறும் போது, போலிகளை தடுக்க நிறுவனம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
எங்களுக்கு பொருட்களை கொடுப்பவர்கள் மீது கடும் சோதனை நடத்துகிறோம். இருந் தாலும் போலிகள் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மட்டும் 2,000 பணியாளர்களை நியமித்திருக் கிறோம் என்றார்.
0 Comments