பேஸ்புக்கில் 500 மில்லியன் முதலீடு


நாளுக்கு நாள் பேஸ்புக்கின் வளர்ச்சி மற்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களை பிரமிக்க வைப்பதாய் உள்ளது. சமீபத்தில் பேஸ்புக்கின் மதிப்பு 50 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ள கோல்ட்மேன் சாஷ் நிறுவனம், 500 மில்லியன் டாலர் முதலீட்டையும் அதில் செய்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெரிய நிதி நிறுவனமும் பேஸ்புக்கில் முதலீடு செய்துள்ளது.இதன் மூலம், இ-பே, டைம் வார்னர் மற்றும் யாஹூவை விட பெரிய நிறுவனமாக பேஸ்புக் உயர்ந்துள்ளது.

இணைய உலகின் ஜாம்பவானகத் திகழும் கூகுளை ஏற்கெனவே குறிப்பிட்ட துறைகளில் பின்னுக்குத் தள்ளியுள்ளது பேஸ்புக். பேஸ்புக் இமெயில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஜிமெயில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உள்ளது.இந்த நிலையில் கோல்ட்மேன் போன்ற பெரும் முதலீட்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் முதலீட்டாளர்களாக இணைந்துள்ளது மிக முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.இன்னொரு பக்கம், கோல்ட்மேன் போன்ற நிறுவனங்களின் முதலீடு இருப்பதால், பேஸ்புக் இனி பங்கு வெளியீட்டுக்கு தயாராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இப்போதைக்கு பங்கு வெளியீடு சாத்தியமில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் கூறினாலும், வரும் 2012-ல் பங்கு வெளியீட்டுக்கு பேஸ்புக் வந்துவிடும் என்றே தெரிகிறது.

No comments: