கெளதம் வாசுதேவ் மேனன் புகழாரம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் போன்றோர் நடித்துள்ள படம் - 'நானும் ரெளடி தான்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். படம் கடந்த 21-ம் தேதி வெளியானது.
படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிகவும் பாராட்டி ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
‘புதிய தலைமுறை இயக்குநரின் வருகையை நானும் ரெளடி தான் பறைசாட்டுகிறது. பொழுதுபோக்குத்தன்மையும் அசலாகவும் படம் உள்ளது. மிக அற்புதமான படத்தைக் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். நல்வரவு விக்கி. இதற்குப் பிறகு போடா போடி படத்தைக் கவனிப்பார்கள் விக்கி. நயன்தாரா என்ன ஒரு நட்சத்திரம்! அருமையாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி அன்புக்குரியவராக இருக்கிறார். இந்தப் படத்தினால் அவர் பெரிய நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
பார்த்திபன் சார்... உங்களைப் போடணும் சார்... இதே மாதிரியான வித்தியாசமான எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு உங்களை எல்லோரும் போடணும்... கலக்கிட்டீங்க சார்’ என்று தன் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.

No comments: