டிராப் பாக்சின் புதிய சேவை

கோப்புப் பகிர்வு சேவையான 'டிராப் பாக்ஸ்' தொடர்ந்து புதிய அம்சங்கள் அல்லது கூடுதல் வசதியை அறிமுகம் செய்துவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இவை எல்லாமே கோப்புப் பகிர்வு சார்ந்ததாக இருக்கின்றன. இப்போது முதல் முறையாக டிராப் பாக்ஸ் கோப்புப் பகிர்வுக்கு வெளியே புதிய வசதியை அறிமுகம் செய்ய தயாராகியிருக்கிறது.
பேப்பர் எனும் பெயரிலான இந்தப் புதிய வசதி கூகுள் டாக்ஸ் சேவைக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது எனும் வர்ணனை இந்தச் சேவை பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.

ஆம், டிராப் பாக்ஸ் செயலி வடிவில் அறிமுகம் செய்துள்ள இந்த வசதியை இணையத்தில் ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளப் பயன்படுத்தலாம். அதாவது வேர்டு மென்பொருளில் டைப் செய்வது போலவே இதிலும் டைப் செய்யலாம். சேமிக்கலாம். பகிர்ந்துகொள்ளலாம்.
இணையத்தில் எழுதுவதற்கான மென்பொருளாக இருக்கும் இந்த வசதி முதல் கட்டமாக அழைப்பின் பேரில் டிராப் பாக்ஸ் பயனாளிகளுக்கு அறிமுகமாகியுள்ளது. விரைவில் எல்லோருக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: