திரிஷாவை தொடரும் 40 லட்சம் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு திரை உலகில் கடந்த 13 ஆண்டுகளாக நிலையான இடத்தை பிடித்து இருப்பவர் திரிஷா. 2002–ல் ‘மௌனம் பேசியதே’ படத்தில் அறிமுகமான திரிஷா இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது திரிஷா 5 படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் நடித்து வெளிவர இருக்கும் ‘தூங்காவனம்’ திரிஷாவுக்கு 50–வது படம். இவருக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு தகவல்களை அவர்களுடன் திரிஷா பகிர்த்து கொள்கிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் சொல்கிறார். தன்னைப் பற்றிய விவரங்கையும் வெளியிடுகிறார்.
இதனால் திரிஷாவின் டுவிட்டர், பேஸ்புக்கில் அவரை தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டுவிட்டரில் திரிஷாவை தொடரும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விட்டது. இதுபோல், பேஸ்புக்கில் இவரை தொடர்பவர்கள் எண்ணிக்கையும் 20 லட்சத்தை தாண்டி இருக்கிறது.
இந்த இரண்டு சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments: