ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி









Post a Comment

5 Comments

Anonymous said…
who is this guy? did he create yoga??...
Ramarajan said…
This comment has been removed by the author.
Ramarajan said…
வாழ்க வையகம்.! வாழக வளமுடன்.!
குருவே துணை.!

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷியின் நூற்றாண்டு நிறைவு.
இன்று(14-08-2010)தமிழக முதல்வர் அவர்களால் தபால்தலை வெளியிடப்பட்டது.
எங்கள் குரு மறைந்தாலும்,
அவரின் வழிகாட்டுதளின் பேரில் வழங்கிய மணவளக்கலையும்
(உடற்பயிற்சி,காயகல்பம்,தியானப்பயிற்சி)
, வேதாத்திரியமும்
இவ்வுலகையும், எங்கள் மணதையும் விட்டு விலகாது.
என்றும் அவரின் அருளோடு.
இங்கனம்
அ.ராமராஜன்.
( ஜோதி நகர் மணவளக்கலை மாணவன்(செல்:8124818767))
அரக்கோணம்.வேலூர் மாவட்டம்.)
Ramarajan said…
வாழ்க வையகம்.! வாழக வளமுடன்.!
குருவே துணை.!

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா.
இன்று(14-08-2010)தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களால் தபால்தலை வெளியிடப்பட்டது.
எங்கள் குரு மறைந்தாலும்,
அவரின் வழிகாட்டுதளின் பேரில் வழங்கிய மணவளக்கலையும்
(உடற்பயிற்சி,காயகல்பம்,தியானப்பயிற்சி)
, வேதாத்திரியமும்
இவ்வுலகையும், எங்கள் மணதையும் விட்டு விலகாது.
என்றும் அவரின் அருளோடு.
இங்கனம்
அ.ராமராஜன்.
( ஜோதி நகர் மணவளக்கலை மாணவன்(செல்:8124818767))
அரக்கோணம்.வேலூர் மாவட்டம்.)
Anonymous said…
வாழ்க்கைக் குறிப்பு

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.
இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார்.
18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளை கற்றார் மகரிஷி.
தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்று தேர்ச்சிப் பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.
ஆன்மிகத் தேடல்

தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார்.
இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35வது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களை தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
நூல்கள் இயற்றல்

இந்தப்பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களை பல கவிகளாகவும், கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார்.
1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிட்ட அங்கெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
அருட்பெருஞ்சோதி நகர்

கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.
மறைவு

அருட்தந்தை வேதாத்திரி அவர்கள் தனது 95வது வயதில் 28 மார்ச் 2006 செவ்வாய்க்கிழமை மறைந்தார்.

மகரிஷியின் வைர வரிகள்

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

courtesy.wikipedia