கேமராவை மார்க் ஷுக்கர்பெர்க் மறைத்ததால் அவரை பிடித்து தள்ளிய மோடி

கமெராவை மறைப்பதாக கூறி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர்பெர்க்கை பிரதமர் மோடி பிடித்து தள்ளிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற இந்திய பிரதமர் மோடி, பேஸ்புக் தலைமையகத்துக்கு சென்றார்.

அங்கு, பிரதமர் மோடி தனது வருகையை இந்தி மொழியில் பதிவிட்டதை அடுத்து அவருக்கு பேஸ்புக்கை சேர்ந்த பெண் ஒருவர் பரிசு பொருளை வழங்கினார்.அந்த பொருளை மோடி பெற்றபோது, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர்பெர்க் கமெராவில் மோடி தெரியாதவாறு மறைத்து கொண்டு நின்றார்.

அப்போது மோடி, ஷுக்கர்பெர்க்கை பிடித்து நகர்த்தி, கமெராவை மறைக்கிறீர்களே என்று செய்கையில் தெரிவித்துள்ளார்.தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, பலர், மோடியையும் கமெராவையும் மார்க் ஷுக்கர்பெர்க்கால் கூட பிரிக்க முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments: