அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள்

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் Bill Gates தொடர்ந்து 22வது ஆண்டாக முதலிடம் பிடித்திருப்பதாக Forbes பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் அமெரிக்காவின் 400 பெரும் பணக்காரர்கள் பட்டியலை Forbes வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் Bill Gates முதலிடம் வகிக்கிறார்.

எனினும், கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு 33 ஆயிரம் கோடி வீழ்ச்சி கண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிதி முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைவர் வாரன் ஃபப்பெட் 4 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எலிசன் 3வது இடம்பெற்ற நிலையில், அமெரிக்க முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இணைய தள நிறுவன அதிபர்கள் 3 பேர் முதல்முறையாக இடம்பிடித்துள்ளனர்.

அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், ஃபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுகர்பெர்க், கூகுள் தலைமை அதிகாரி லேரி பேஜ் ஆகியார் அமெரிக்க 10 பெரும் பணக்காரர்கள் வரிசையில் வந்திருக்கின்றனர். பில் கேட்ஸ் முதலிடம்

Post a Comment

0 Comments