கம்பம் இளைஞர் சதாம் உசேனை போல, இன்னும் ஏராளமான தமிழர்கள் அரபு நாடுகளில் விருப்பமே இல்லாமல் ஒட்டகம் மேய்க்கும் தொழில், கட்டுமானத் தொழில், பெட்ரோல் பங்குகளில் கொத்தடிமைகளாக வேலை செய்துவருகின்றனர்.
இதுகுறித்து அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று பாதிக்கப்பட்டு திரும்பியவர்கள் கூறியதாவது:
சரியான படிப்பு, வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், வறுமையின் பிடியில் இருந்து குடும்பத்தை மீட்க தமிழக இளைஞர்கள் குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஓட்டுநர், பிளம்பர் உள் ளிட்ட வேலைகளுக்குச் செல்கின் றனர். இவர்களில் ஒரு தரப்பி னர் எதிர்பார்த்த வேலை கிடைக் காமல் சொந்த ஊருக்குத் திரும்பு வதும், மற்றொரு தரப்பினர் குடும்பத்தினரின் நகைகளை அடகு வைத்துவிட்டுச் சென்றதால், அந்தக் கடனையாவது அடைத்துவிட்டு திரும்புவோம் என கொடுத்த வேலையை விருப்பமில்லாமல் செய்து வருகின்றனர்.
பொறியியல் படித்தவர்கள், பட்டதாரிகள்கூட சொன்னபடி வேலை தராததால் குவைத்தில் பெட்ரோல் பங்குகளில் வேலை, ஒட்டகம் மேய்ப்பது, வீட்டு வேலை, கட்டிட வேலைகள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
படிப்பறிவில்லாதவர்கள் குவைத், சவுதி அரேபியாவில் எந்த வேலைக்குச் சென்றாலும், ஆரம்பத்தில் ஒட்டகம் மேய்க்கத் தான் அனுப்புவதாகக் கூறப்படு கிறது. நமது கிராமங்களில் மாடு வளர்ப்பதுபோல, அங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒட்டகம் வளர்ப்பர். அங்கு மேய்க்க ஆளில்லாமல், தமிழகத்தில் இருந்து இளைஞர் களை ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர்.
ஒட்டகம் மேய்க்கும் இடங்களில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஆட்கள் நடமாட்டமே இருக்காது. பகலில் வெயிலின் தாக்கம், நம்மூரைவிட பல மடங்கு அதிக மாக இருக்கும். எங்காவது ஒரு இடத்தில்தான் தண்ணீர் கிடைக் கும். ஒட்டகங்களுக்கு தண்ணீர் வைப்பதும் மிகவும் சிரமம். ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து விட்டு அடுத்த பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வருவதற்குள் அந்த தண்ணீரை குடித்துவிடும். ஒட்டகம் மேய்த்துவிட்டு வந்தால் இரவில் ஓய்வெடுக்க டெண்ட் மட்டும் அமைத்து தருவர். இந்த டெண்ட் கொட்டகையில் இரவில் தூங்கும்போது விஷப் பூச்சிகள் கடிக்கும் அபாயமும் உள்ளது. அங்கு நம்மூர் அரிசி சாப்பாடு எல்லாம் கிடைப்பது சிரமம். ரொட்டிதான் தருவர். அதுவும் வேளைக்குத் தராமல், அரை வயிற்றுக்குத்தான் தருவர் தட்டிக்கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும். சம்பளமும் சரியாக கிடைக்காது.
இப்படி அத்தனைக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டுதான், ஒவ்வொரு நாளை யும் தமிழர்கள் கழிக்கின்றனர். அதிலும், அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்குச் செல்லும் தமிழக பெண்களின் நிலை மிகவும் கொடுமை என்றனர்.
பொறியியல் படித்தவர்கள், பட்டதாரிகள்கூட சொன்னபடி வேலை தராததால் குவைத்தில் பெட்ரோல் பங்குகளில் வேலை, ஒட்டகம் மேய்ப்பது, வீட்டு வேலை, கட்டிட வேலைகள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
source.hindu
0 Comments