பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்

அமெரிக்காவின் பிரபல ஆன் - லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, 'லெக்கின்ஸ்' ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம் பெற்றுள்ளது. இது உலகளாவிய இந்தியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு தலையிட்டு, இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.ஆன் - லைனில்... அமெரிக்காவில் பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், பெண்களுக்கான 'லெக்கின்ஸ்' ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஆடைகளில் இந்து கடவுள்களான விநாயகர், சிவன், ராமர், கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 


மேலும், இயேசு, புத்தர் படங்களும் உள்ளன.இந்த ஆடைகள் ஆன்-லைன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் 48 முதல் 52 டாலர் வரை (ரூ.3,000) விற்பனை செய்யப்படுகிறது.கடும் அதிர்ச்சிஇந்த ஆடைகளை அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ஒய்சாம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்தியர்கள், கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து, தங்களின் அதிருப்தியை 'வாட்ஸ்-அப்', 'பேஸ்-புக்' 'டுவீட்டர்' ஆகியவற்றில் வெளியிட்டு வருகின்றனர்.இந்திய அரசுக்கு கோரிக்கை:அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் வாழும் இந்தியர்கள், இந்த ஆடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சார்பில் இணைய தளத்தில் வெளியிட்டுஉள்ளதாவது:இந்து, கிறிஸ்தவ, புத்த மதங்களை இழிவுபடுத்தும் வகையில், பெண்களின் கீழ் ஆடையான 'லெக்கின்ஸ்'ல் கடவுள்களின் படங்களை அச்சிட்டு, ஒய்சாம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த ஆடைகளை அமெரிக்காவின் பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.புகார் இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும், என, அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகத்தில் புகார் செய்துள்ளோம். அமெரிக்க அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மனதை புண்படுத்தும் இந்த ஆடைகள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்

No comments: