பேஸ்புக் வழியே பல இளம்பெண்களை கவர்ந்து திருமணம்

பேஸ்புக் வழியே பல இளம்பெண்களை கவர்ந்து இழுத்து அவர்களை திருமணம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வாலிபர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் டாக்கா கிராமத்தில் வசிப்பவர் கலீம்.  இவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் பவன் சவுத்ரி என்ற பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கினார்.  அதன்பின்னர் பேஸ்புக் வழியே பல இளம் பெண்களுடன் கலீம் தொடர்பு கொண்டுள்ளார்.  நட்பு ரீதியாக ஆரம்பித்து பின் அது திருமணம் வரை சென்றுள்ளது.

இந்த விவகாரம் கடந்த செப்டம்பர் 22ந்தேதி அன்று இளம்பெண் ஒருவர் வீட்டில் இருந்த காணாமல் போய் பின்னர் திங்கட்கிழமை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டபோது வெளிப்பட்டது.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளம்பெண் பேஸ்புக் வழியே குற்றவாளியிடம் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.  டெல்லியில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் வைத்து குற்றவாளியான கலீமை இளம்பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று விசாரணை அதிகாரி விகாஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் விசயம் இதனுடன் முடியவில்லை.  கான்பூர் மற்றும் டேராடூன் நகரங்களை சேர்ந்த இளம்பெண்களும் கலீமால் ஏமாற்றப்பட்டுள்ளோம் என போலீசில் தெரிவித்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் போலீசாரிடம், கலீம், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை திருடி கொண்டு சென்று விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
கலீம் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments