நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்

லோக்சபா தேர்தலில், போட்டியிடும் அரசியல் கட்சித் தலைவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து, கேரள ஜோதிடர், முருகதாஸ் குட்டி கணித்துள்ளாராம். அடுத்த பிரதமர் யார், தமிழகத்தில் நிலைமை, அரசியல் தலைவர்களின் நிலை குறித்து, முத்துக்களை போட்டு கணித்ததாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, முருகதாஸ் குட்டி கூறியதாவது: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, நரேந்திர மோடிக்கு, ஓராண்டாக கேத்ரி யோகம் இருக்கிறது. அதனால், அவர் நாட்டின் அடுத்த பிரதமராவார். மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், உத்தரகண்ட் மாநிலங்களில், பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மகம் நட்சத்திரத்தில் பிறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, குரு நல்ல இடத்தில் இருப்பதால், வெற்றிகள் கூடும். தமிழகத்தில், அ.தி.மு.க., 25 இடங்கள் வரை வெற்றி பெறுவர். கருணாநிதியை பொறுத்தவரை, 
                                          அவரது ராசிக்கு, சனி இருப்பதால், வெற்றி வாய்ப்புகள் மிக குறைவே. தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, சில மாதங்களில் மீண்டும் கட்சியில் இணைவார். விஜயகாந்த்திற்கு பெயர் ராசி உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், அரசியலில் அவரது கட்சிக்கு வளர்ச்சி அதிகரிக்கும். வைகோவை பொறுத்தவரை, அவரது ராசியில் ராகு இருப்பதால், ஓராண்டு வரை, அரசியல் வாழ்க்கை கசக்கும். அதன் பின், அரசியலில் ஜொலிப்பார். ராமதாசுக்கு முத்து போட்டு பார்க்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கு போன ஜென்மத்தில், அவரது ராசியில் முனி இருந்தது. இந்த ஜென்மத்திலும் தொடர்வதால், அவர் ஆன்மிக பாதையில் மட்டுமே செல்வார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

source.dinamalar

No comments: