குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகள் கூடத்தில் பாய் விரித்து தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டே படுப்பது அவர்களுக்கு குதூகலத்தை தரக்கூடியது. இன்றைக்கு கூட்டுக்குடும்பம் என்பது அருகிப் போய்விட்டது. தனிக்குடித்தனத்தில் கூட பெற்றோர் தனியாகவும், குழந்தைகள் தனியாகவும் படுக்கின்றனர். இது தவறான பழக்கமாகும். குழந்தைகளை தங்களுடன் ஒன்றாக படுக்க வைப்பதுதான் நன்மை தரக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள்.

நன்னடத்தை அதிகரிக்கும்

குழந்தைகளும் பெற்றோர்களும் ஒரே படுக்கையறையில் உறங்குவதால் குழந்தைகளின் நடத்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறதாம். அவர்களின் சுய சிந்தனை, நன்னடத்தை அதிகரிக்கிறதாம். மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

உடல், மன வளர்ச்சி

உளவியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. நாம் தனித்து விடப்பட வில்லை. நம்மை பாதுகாக்க பெற்றோர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றதாம். பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மன நலம் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்ற மடைந்துள்ளது. மேலும் அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக வளர பெற்றோர்களுடன் உறங்குவதே ஏற்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மன அழுத்தம் குறைகிறது

பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள், பறவை கூட்டில் தாய் பறவையின் அரவணைப்பில் குஞ்சு பாதுகாப்பாக உறங்குவதைப்போல உணர்கின்றனர். அவர்களின் உளவியல் ரீதியான ஹார்மோன் நன்றாக செயல்படுகிறது. குழந்தைகள் தனியாக உறங்கும்போது மன அழுத்தம் தரும் கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கிறதாம். அதேசமயம் பெற்றோருடன் உறங்கும் போது ஹார்மோன் சுரப்பு குறைகிறதாம். ஹார்வார்டு பல்கலைக்கழக உளவியல்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 

தொந்தரவில்லாத உறக்கம்

குழந்தைகளுடன் உறங்கும் போது அவர்களுக்கு தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது. இதனால் பகல் வேலைகளில் குழந்தைகளால் உற்சாகமாக செயல்படமுடிகிறது.

பாதுகாப்பு உணர்வு

குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உறங்குவதனால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. அவர்களின் தன்னம்பிகையும், சுதந்திர உணர்வும் அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு அட்டாச்மென்ட் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

படுக்கயறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிக நேரம் ஒன்றாக தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த குடும்ப படுக்கையறை ஸ்டைல் மூலம் குடும்ப உறவுகளின் மீது குழந்தைகளுக்கு ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

Post a Comment

1 Comments

ADMIN said…
குழந்தைகளுடன் சேர்ந்து உறங்குவதால் இத்தனை பயன்களா? எளிமையான விளக்கம். பகிர்வினுக்கு நன்றி நண்பா..!!