8 இந்திய மொழிகளில் ஃபேஸ்புக்


ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ஃபேஸ்புக்கை இனி ஹிந்தி, குஜராத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பஜ்சாபி, பெங்காலி, மராத்தி ஆகிய 8 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மொழிகள் என்று பார்த்தால் மலாய், வியட்னாமிஸ், ஹிந்தி மொழிகளிலும் இனி ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் போன்றவற்றை காட்டிலும், மொபைல்போன்களில் ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் பார்க்க வேண்டும் என்றால் 80 கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும், இதில் 35 கோடி பேர் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.
இப்படி ஃபேஸ்புக் பன்படுத்துவோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக்கில் இங்கு கூறப்பட்டுள்ள மொழிகளில் பயன்படுத்த, அதற்கு பிரத்தியேகமாக ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2011 வரை 4 கோடியே 6 லட்சம் பேர் இந்தியாவில் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெளிவாக கூறுகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் வளர்ச்சி அதீத வளர்ச்சியாக உருவெடுத்து இருக்கிறது

Post a Comment

0 Comments