ரஜினியின் மருகமகன் என்பதை மறைத்து தனுஷாகவே இருப்பேன்

சமீபத்தில் மும்பையில் நடந்த ”பிக் ஸ்டார் எண்டர்டெயின்மண்ட்” விருது வழங்கும் விழாவில் அமிதாப் பச்சன்,தனுஷ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். விழாவில் அமிதாப் பச்சனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.





இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் “சினிமா துறையில் மிகப்பெரியா ஜாம்பாவானாக திகழும் அமிதாப் பச்சன் அவர்களுக்கு “கொலவெறி” பாடலை சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். தனுஷின் இந்த திடீர் அறிவிப்பால் விழாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. 

ஆடுகளம் படத்திற்காக நேஷனல் அவார்ட் வாங்கிய போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையிலிருந்த தனது மாமனார் ரஜினிகாந்துக்கு அந்த விருதை சமர்ப்பித்த தனுஷ் இப்போது ஏன் அமிதாப்புக்கு இந்த பாடலை சமர்ப்பித்தார் என்பது குழப்பமாகவே இருந்து வந்துள்ளது. விழா நிறைவடைந்ததும் தனுஷின் இந்த அறிவிப்பு பற்றி கேட்டபோது

 தனுஷ் “ என் மாமனார் மேல் எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. அவரது எளிமையும், தனிமையும் எனக்கு பிடித்தவை. ஆனால் அவரருடைய மகள் என் மனைவியாக மாறியதும், நான் அவரது மருமகனாக மாறிவிட்டேன். 

அதுவரை தனுஷ் என்று எனக்கு இருந்த பெயர், புகழ் அனைத்தும் என் மாமனாரின் புகழ் அடித்து சென்றுவிட்டது. என் சுய அடையாளம் மறைக்கப்பட்டு, என்னை அவரது மருமகனாகவே பார்க்கிறார்கள். எங்கு சென்றாலும் கேட்கப்படும் முதல் கேள்வி ரஜினி சாரின் மருமகனாக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள் என்பது தான். 

கொலவெறிப் பாடலின் வெற்றிக்குப் பிறகு அந்த கேள்வி கொஞ்சம் பின்னடைந்துவிட்டது. முதல் இடத்திலிருந்து ஐந்தாவது, ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது. அந்த அடையாளத்தை மறைக்க நான் இன்னும் இரு மடங்கு உழைத்தாக வேண்டும். 2004-ம் ஆண்டு நான் என் சுய அடையாளத்தை இழந்த ஆண்டு.” என்று கொட்டி தீர்த்துவிட்டாராம். 

தனுஷ் இந்திய அளவில் புகழ் பெற காரணம் ரஜினி தான். ரஜினி படங்களையும், பாடல்களையும் ரீமேக் செய்து வெற்றி பெற்ற போது அடைந்த பூரிப்பு, ரஜினி மருமகன் என்கிற போது இல்லையா என்பது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களின் கேள்வி.

Post a Comment

2 Comments

Kumaran said…
அட இப்படியுமா இருப்பாங்க..எப்படியாவது இவங்க பேரு எடுக்கட்டும்..
தகவலுக்கு மிக்க நன்றிகள் சகோ.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
ஒரு பாட்டிற்கே இப்படியா? ... ம் ...
கண்ணதாசன் அன்றே சொன்னார்
(பாடல் ஆரம்பம் : ஆறு மனமே ஆறு)
"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்....."
பகிர்வுக்கு நன்றி நண்பரே !