காதலை ஏற்றுக் கொள்ளும் பிங்க்

காதலர் தினத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. அன்றைய தினம் மனம் கவர்ந்தவரை காண சிறப்பாக ஆடை அணிந்துகொண்டு அதற்கேற்ப மேக் அப் உடன் செல்வது காதலருக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். காதலர் தினத்தன்று பிங்க் நிற உடை அணிவது காதலை ஏற்றுக்கொண்டதன் அடையாளம். பிங்க் நிறம் மிகவும் பிரசித்தி பெற்றது. காதலர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தரக்கூடியது. காதலரை காண பிங்க் உடையணிந்து செல்பவர்கள் அந்த உடைக்கு மேட்சாக மேக் அப் போட்டு செல்வது காதலின் அடர்த்தியை அதிகரிக்கும்.

கண்களுக்கு குளுமை

காதல் பாஷை பேசுவதில் கண்களின் பங்கு முக்கியமானது. வார்த்தைகளால் பேசுவதை விட கண்களால் பேசுவது அதிகம் இருக்கும். எனவே கண்களுக்கு பிங்க் நிறத்தினால் ஆன மேக் அப் போடுவது காதலுக்கு சிறப்பை தரும்.

ஐ ஷேடோ நிறங்களில் பிங்க் குளுமையான நிறம். இதனை காதலர் தினத்தன்று உபயோகிப்பது கூடுதல் உற்சாகம் தரும்.

ஐ லைனர் பிங்க் கலரில் உபயோகித்துப் பாருங்கள் அது ஹைலைட் ஆக இருக்கும். லேசான பிங்க் நிறத்தில் ஐ லைனர் உபயோகிக்கலாம். இரவு நேர காதலர் தின பார்டிக்கு ஏற்றது.

கன்னக் கதுப்பழகு

கண்களைப் போல கன்னக் கதுப்பிற்கும் பிங்க் நிறம் உபயோகிப்பது காதலருக்கு கூடுதல் கவனத்தை தரும். ரூஜ் போடும் போது சிவப்பு, பிங்க், மெருன் நிறம் போடலாம். அதிக அளவு வெளிர் நிறத்தில் போடுவதை விட லேசான பிங்க் நிறத்தில் கன்னக் கதுப்பை அழகூட்டலாம்.

உதட்டழகு வர்ணம்

காதலர் தினத்தில் உதடுகளுக்கு முக்கியத்துவம் இல்லாமலா? லைட் பிங்க் நிறத்தில் கண்களுக்கு போட்டது போல டார்க் பிங்க் நிறத்தில் உதட்டிற்கு லைன் வரைந்து அவற்றை இயற்கை வர்ணத்தில் நிரப்பலாம். அப்புறம் உதட்டழகு அட்டகாசம் தான்.

Post a Comment

0 Comments