பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது  இந்தியா.


 முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஹபீஸ் (105), ஜம்ஷெத் (112) ஆகியோரின் சதத்தால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி கோலியின் சதத்தால் (183 ரன்கள்) 47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடித்தது.


 முதல் விக்கெட்டுக்கு 224


 வங்கதேச தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முகமது ஹபீஸýம், நாசிர் ஜம்ஷெத்தும் பாகிஸ்தானின் இன்னிங்ûஸத் தொடங்கினர். ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்த பந்தில் அரைசதம் கண்டனர். இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
 33-வது ஓவரில் ஒருநாள் போட்டியில் தனது 4-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் ஹபீஸ். இந்தியாவுக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இது. அதே ஓவரில் பாகிஸ்தான் 200 ரன்களைக் கடந்தது. மறுமுனையில் 98 பந்துகளில் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஜம்ஷெத். பாகிஸ்தான் 36-வது ஓவரில் 224 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது.
 ஹபீஸ் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரில் ஜம்ஷெத் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்வரிசையில் யூனிஸ்கான் 34 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிக் கட்டத்தில் இந்திய பெüலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தியதால், 329 ரன்களில் முடிவுக்கு வந்தது.
 இந்தியத் தரப்பில் பிரவீண் குமார் 77 ரன்களையும், பதான் 69 ரன்களையும் வாரி வழங்கினர்.


 கோலி விளாசல்


 இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னாலேயே கம்பீரின் விக்கெட்டை இழந்தது. ஆரம்பம் முதலே வேகம் காட்டிய சச்சின், 48 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 133 ரன்களாக இருந்தது.
 இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் ரோஹித் சர்மா. 52 பந்துகளில் அரைசதம் கண்ட கோலி, 97 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள்போட்டியில் அவருடைய 11-வது சதம் இது.
 நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடக்க, மறுமுனையில் பாகிஸ்தான் பெüலர்களை பதம்பார்த்த கோலி 133 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். இந்தியா 305 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது.
 ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித்-கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. 148 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 48-வது ஓவரின் 5-வது பந்தில் தோனி பவுண்டரியை விரட்ட இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

 இறுதிச்சுற்றில் நுழையுமா இந்தியா?


 இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் தோல்வி கண்டால், 2 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இலங்கையை வங்கதேசம் வீழ்த்தினால், இந்தியாவும், வங்கேதசமும் சமபுள்ளிகளைப் பெறும். விதிமுறைப்படி இந்தியாவை வீழ்த்தியிருப்பதால் வங்கதேசம் இறுதிச்சுற்றை உறுதி செய்துவிடும்.

 இந்தியாவின் பெரிய சேஸிங்
 பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவதாக பேட் செய்து 330 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய சேஸிங் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 2002-ல் இங்கிலாந்துக்கு எதிராக 326 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே இந்திய அணியின் பெரிய சேஸிங் வெற்றியாக இருந்தது.

 கோலியின் அதிகபட்சம்
 இந்த ஆட்டத்தில் 183 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார் கோலி. சேவாக் (219), சச்சின் (200*, 186*) ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரன் குவித்த இந்தியர்களின் வரிசையில் கங்குலி, தோனி ஆகியோருடன் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கோலி.
 
 ஸ்கோர் போர்டு

 மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு)329
 விக்கெட் வீழ்ச்சி: 1-224 (ஜம்ஷெத்), 2-225 (ஹபீஸ்), 3-273 (அக்மல்), 4-313 (அப்ரிதி), 5-323 (யூனிஸ் கான்), 6-326 (ஆஸம்).
 பந்து வீச்சு: பிரவீண் குமார் 10-0-77-2, இர்ஃபான் பதான் 10-0-69-1, அசோக் திண்டா 8-0-47-2, சுரேஷ் ரெய்னா 2.2-0-15-0,
 ரோஹித் சர்மா 3-0-19-0, யூசுப் பதான் 5-0-30-0, அஸ்வின் 10-0-56-1, சச்சின் 1.4-0-12-0

 இந்தியா

 மொத்தம் (47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு)330

 விக்கெட் வீழ்ச்சி: 1-0 (கம்பீர்), 2-133 (சச்சின்),
 3-305 (ரோஹித்), 4-318 (கோலி).
 பந்து வீச்சு: ஹபீஸ் 9-0-42-1, உமர் குல் 8.5-0-65-2, சீமா 8-0-60}0, அஜ்மல் 9}0}49}1, அப்ரிதி 9}0}58}0, வஹாப் ரியாஸ் 4}0}50}0

 மின்வெட்டுக்கு விடுமுறை
 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை நாட்டு மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் பாகிஸ்தானில் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என்று அந்நாட்டு பிரதமர் கிலானி உத்தரவிட்டிருந்தார்.
 ஆட்டம் முடியும் வரை நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். மின் நிறுத்தம் கூடாது என்று நீர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.
 பாகிஸ்தானில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தினந்தோறும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் 5 மணி நேரமும், புறநகர்ப் பகுதிகளில் 12 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமலில் உள்ளது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பைனல்லே நாம தான் ! நம்ம ஊரிலே கரண்ட் கட் ஆகாம இருக்குமா ?