5 கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களும் இணைந்து புதிய கண்டம் உருவாகும்:

உலகில் 6 கண்டங்கள் உள்ளன. அவை கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை நீர் மற்றும் காற்று போக்கால் இழுத்து ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் 'அமாசியா' என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது இன்னும் 5 கோடி முதல் 20 கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என கூறியுள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு பகுதி நீர் மற்றும் காற்றுப்போக்கினால் இணையும். இதனுடன், ஆர்டிக்கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பூமியின் அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளன. அதுபோன்ற மாற்றங்களினால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணையலாம். இந்த தகவல்களை ஜேர்னல் நேச்சர் என்ற பத்திரிகையில் யாழ் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் ரோல் மிட்செல் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

1 Comments

Kumaran said…
தகவலுக்கு மிக பெரிய நன்றிகள்..
Liebster Blog Award - அவார்டு கொடுக்க போறேன்..