தனுஷின் ‘வொய் திஸ் கொலவெறிடி…’ என்ற தமிங்கிலீஷ் பாட்டு தாறு மாறாக ஹிட்டானதைத் தாங்க முடியாமல், சிம்பு உருவாக்கிய 'ஒரு வார்த்தைப் பாட்டு'க்கு யுட்யூப் வெண்கல விருதை கொடுத்துள்ளது.
தனுஷ் கொலவெறி என்று எதையோ பாடி, யுட்யூப்பில் ஏற்றி, அதற்கு கிடைத்த ஹிட்ஸை வைத்து பிரபலமாக்க ஆரம்பித்தார். ஒரு மாதத்துக்குள் அந்தப் பாட்டு 3 கோடி ஹிட்ஸைப் பெற்றுவிட்டது யு ட்யூப் தளத்தில். அடுத்த சில தினங்களில் அதே ரூட்டைப் பிடித்தார் சிம்பு. உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து ஒரு ட்யூனுக்கு ஏற்பட பாடினார். அதே சோனி மியூசிக் மூலம் இதனை யுட்யூபில் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்.
அதற்கு தோதாக வந்தார் பிஆர்ஓ நிகில் முருகன். அவரது அசத்தல் பிரமோஷன் இந்தப் பாட்டுக்கு ஒரு பலமாக அமைந்துவிட்டது. ஒருவழியாக இந்த வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்துவிட, ஒரு விருதைக் கொடுத்திருக்கிறது யுட்யூப். தனுஷுக்கு தங்க விருதைக் கொடுத்தவர்கள், சிம்புவுக்கு கொடுத்திருப்பது வெண்கல விருதாம்.
இதுகுறித்து அனுப்பப்பட்ட பிரஸ் ரிலீஸில் தன்னை 'சூப்பர் ஸ்டார் சிம்பு' என்று சிம்புவே போட்டுக் கொண்டிருப்பதுதான் காமெடி

0 Comments