60,000 காலி இடங்கள் பொறியியல் கல்லூரிகளில்


இக்கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
அரசு மூலமாக நிரப்ப்ப்படக்கூடிய இட்ங்கள் மொத்தம் 1.49 லட்சம் இடங்கள் என்றிருந்தும் விண்ணப்பங்களே 1.48 லட்சம்தான்.இறுதியில் 1.04 லட்சம் இடங்களே நிரப்ப்ப்ப்ட்டன. தனியார் நிர்வாகங்க்ள் தாங்களே நிரப்பிக்கொள்ளும் இடங்களிலும் 20,000 இடங்கள் வரை காலியாக்வே இவ்வாண்டு இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.


ஆக 65,000 பொறியியற் கல்லூரி இடங்கள் நிரப்ப்ப்படாமல் இருக்கும். பொறியியல் கல்வித் துறையில் எப்போதுமே முன்னணி வகித்து வந்திருக்கும் தமிழகத்தில் ஏன் இந்த நிலை என்று கேள்விகள் எழுந்துள்ளன.கல்வித் தரத்தில் வீழ்ச்சி, தவிரவும் பொருளாதார மந்த நிலையில் வேலை வாய்ப்பு குறைந்திருப்பது, இத்தகைய காரணங்களினால்தான் பெருமளவிலான இடங்கள் நிரப்ப்ப்பட்வில்லை என்று கருதப்படுகின்றது.கவலைகளும் கருத்துக்களும்இச்சூழலில் பொறியியல் கல்வியின் தரம் குறித்து பல்தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கல்வித்துறையை பல ஆண்டுகளாக கூர்ந்து நோக்கிவரும் பத்திரிகையாளர் சுரேஷ்குமார் பொறியியல் துறைகுறித்து மாணவர்களுக்கும் சரி, பெற்றோர்களுக்கும் சரியான புரிதல் இல்லை, பாதிக்கப்படுவது இருவருமே என்று வருந்துகிறார்.தனியார் நிறுவனமொன்றில் துணைத்தலைவராயிருக்கும் கண்ணன், கல்வித்தரம் மோசம், ஆசிரியர்களின் தரம் மோசம், என்வே வெளியே வரும் மாணவர்களிடம் நுணுக்கமான பணிகளைச் செய்யும் பொறுப்புக்களில் அமர்த்துவதற்கே தாங்கள் தயங்குவதாகவும் எல்லோரும் கணினித் துறையை விரும்புவதால், மற்ற துறைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார்.ஆலோசகர் ராமநாதன் வெள்ளைய்யன் தொழில்துறைக்கும் கல்லுரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு இல்லாத்து வருந்தத்தக்கது என்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லாரும் காசுக்காக கல்வியை கையில் எடுக்க ஆரம்பித்ததின் விளைவு தான் இது !
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments: