இந்திய அணியின் பீல்டிங்கை கடுமையாக விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன், இந்திய பீல்டர்களை கழுதைகள் என்று விமர்சித்திருப்பது கடும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களை ஆரம்பத்திலிருந்தே தாறுமாறாக விமர்சித்து வருகிறார் நாசர் உசேன். இவர் மட்டுமல்லாமல், இந்திய அணி தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தது முதலே இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் சரமாரியாக இந்தியாவை விமர்சித்து வருகின்றனர். எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது இவர்களது விமர்சனம். இதைக் கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ திராணியில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.இந்த நிலையில் இங்கிலாந்து மாஜி ஆட்டக்காரர்களின் வாய்த்துடுக்கு மேலும் அதிகரித்துள்ளது. இந்திய பீல்டர்களை கழுதைகள் என்று வர்ணித்துள்ளார் நாசர் உசேன். இவர் சென்னையில் பிறந்தவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன். தற்போது டிவி வர்ணனையாளராக இருக்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே ஒரு டுவென்டி 20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியின்போது வர்ணனை செய்து வந்த நாசர் உசேன் கூறுகையில், இரு அணிகளின் பீல்டிங்கையும் ஒப்பிடுவதாக இருந்தால், இங்கிலாந்து அணி அனைத்து வகையிலும் தலை சிறந்த பீல்டிங் அணியாக உள்ளது. இந்திய அணியில் 3 அல்லது நான்கு நல்ல பீல்டர்கள்ளனர். அதேசமயம் ஒன்று அல்லது இரண்டு கழுதைகளும் உள்ளன என்றார் உசேன்.முனாப் பந்து வீச்சில் கெவின் பீட்டர்சன் அடித் பந்தை கேட்ச் செய்ய முடியாமல் பார்த்திவ் படேல் தவற விட்டதைத் தொடர்ந்து இந்த மோசமான கமென்ட்டை உதிர்த்தார் உசேன்.
நாசர் உசேனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஜாகிர் அப்பாஸ் கூறுகையில், இது மிகவும் அநாகரீகமானது, தேவையற்ற பேச்சு. இதை ஏற்கவே முடியாது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் நாசர் உசேனின் பேச்சு மிகவும் கேவலமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். ஐசிசிக்கு கடிதம் எழுத வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
*****************************
ஒழுங்கா விளையாடுங்க இல்லேனா கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லும் என்று நம்ம கிரிக்கெட் அணியிடம் நமது இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்லாமல் விட்டு விட்டது .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5 Comments