தமிழகத்தில் உலவும் சூடான அரசியல் ஈமெயில்கள்


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்துபெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கிகவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கைதரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல்தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகிவிடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

!!!!!!!!!!!!!!!

கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்குரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-


தமிழக அரசு சம்பந்தப்பட்ட பலவிளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக்காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப்போகின்றன. இவை எல்லாம் சமூக நலன்கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணிவந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடிவெளியிடப்படும் குடிசை வீடுகளைகான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின்விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்குதொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள்.அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்துகொள்வதே அருவருப்பாக இருக்கிறது.இத்தகைய விளம்பரங்களை திமுக தன்கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள்தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழகஅரசால் காசு வேறு கொடுத்துஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்திஅதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ளமக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர்வி.சந்தானம், தகவல் அறியும் உரிமைசட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதிஇ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல்இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி-பதில்களின் விவரம் இன்று வெளியாகிஇருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவைசம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும்கலைஞர் தொலைக்காட்சிகளில்ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவசவிளம்பரமா? அல்லது கட்டணவிளம்பரமா? கட்டணமென்றால் ஒருமுறை விளம்பரத்துக்கு எவ்வளவுகட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமானவிளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள்விளம்பரத்துக்கு சன் டிவியில்ரூ.23,474-ம், கலைஞர் டிவியில்ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின்உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன்,அவர் மனைவி மற்றும் அவரதுகுடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின்பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும்,சில அமைச்சர்கள் குடும்பத்தினரும்அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்தஅடிப்படையில் இந்ததொலைக்காட்சிகளுக்குகொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம்.சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவுபேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசுவிளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசுதொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள்வெளியாவதே இல்லை ! (அங்கு காசுகொடுத்தால் அது தன் குடும்பத்திற்குஎப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம்கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம்இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகையதகவல்களை வெளிக்கொண்டு வந்த திருவி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள்கவனத்திற்கு கொண்டு போவதும் நம்கடமை
!!!!!!!!!!!!!!!!!!!!!

Post a Comment

1 Comments

YESRAMESH said…
அதெப்படி மோடியோட குஜராத் பத்தி அப்படி உயர்வா பேசலாம். எவ்ளோ தைரியம். நாங்கெல்லாம் தீவிரமான மத சார்பற்றவர்கள். மோடி பத்தி தப்பா மட்டும் எழுத பழகிக்கோ