நான் கடைவீதியில் அலைந்துகொண்டு இருக்கும்போதும் , பல ஊர்களுக்கு செல்லும்போதும் பிச்சைகாரர்களை பார்த்து இருக்கிறேன் , அதில் பல வகையாக இருப்பார்கள் , நானும் பார்த்து இறக்கபடுவேன் , சில சமயம் என்னிடம் வருவது உண்டு ,நானும் என்னால் முடிந்த அளவு உதவி செய்வது உண்டு , பின்பு நான் யோசிப்பேன் , என்னிடம் பிச்சை கேட்டவர்கள் சிறுவயது குழந்தைகள் , அவர்களை பார்த்து பாவப்பட்டு அவர்களுக்கு உதவி செய்வதா, இல்லை அவர்களை விரட்டுவதா ? அவர்களுக்கு உதவி செய்தால் நாம் அவர்களை பிச்சை எடுக்க தூண்டுவதாக ஆகிவிடும் ,அவர்களுக்கு உதவி செய்யாமல் விட்டாமல் பாவமாக இருக்கிறது ? என்ன செய்வது என்றே தெரியவில்லை ?
நான் ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது ஒரு சிறுவன் வந்து அண்ணா எனக்கு பஸ்சுக்கு போக காசு இல்ல , எனக்கு காசு வேணும் , அப்டீனு சொன்னான் (நான் அந்த சிறுவனை மேலும் கீழும் பார்த்து விட்டு ,) உன்ன பார்த்தா உண்மை சொல்ற மாதிரியும் தெரியல ? பொய் பேசற மாதிரியும் தெரியல அப்டீனு அவன்கிட்ட சொன்னேன் , அவன் அமைதியாக நின்றான் , பிறகு நான் அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டேன் ,
இது போல சிறு குழைந்தைகளுக்கு நாம் பிச்சை போடுவது நாம் அவர்களை ஆதரிப்பது போல ஆகிவிடுகிறது , போடாமல் போனால் உண்மையிலே
கஷ்டபடு கிறவர்களுக்கு நாம் உதவி செய்யாமல் போவதாக சூழ்நிலை வந்து விடுகிறது , என்ன செயரதுனே புரியல ?
5 Comments
என்று மாறுமோ இந்த நிலை
உண்மை வலி மறந்து போகிறது மரத்துப் போகிறது..
தங்கள் இடுகை சிநதனையைத் தூண்டுவதாக உள்ளது..
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே..
உங்களுடைய அன்பு ஆஸ்கார் அவார்டுக்கு மிக்க நன்றி நண்பா?