பிச்சை பாத்திரம்


நான் கடைவீதியில் அலைந்துகொண்டு இருக்கும்போதும் , பல ஊர்களுக்கு செல்லும்போதும் பிச்சைகாரர்களை பார்த்து இருக்கிறேன் , அதில் பல வகையாக இருப்பார்கள் , நானும் பார்த்து இறக்கபடுவேன் , சில சமயம் என்னிடம் வருவது உண்டு ,நானும் என்னால் முடிந்த அளவு உதவி செய்வது உண்டு , பின்பு நான் யோசிப்பேன் , என்னிடம் பிச்சை கேட்டவர்கள் சிறுவயது குழந்தைகள் , அவர்களை பார்த்து பாவப்பட்டு அவர்களுக்கு உதவி செய்வதா, இல்லை அவர்களை விரட்டுவதா ? அவர்களுக்கு உதவி செய்தால் நாம் அவர்களை பிச்சை எடுக்க தூண்டுவதாக ஆகிவிடும் ,அவர்களுக்கு உதவி செய்யாமல் விட்டாமல் பாவமாக இருக்கிறது ? என்ன செய்வது என்றே தெரியவில்லை ?

நான் ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது ஒரு சிறுவன் வந்து அண்ணா எனக்கு பஸ்சுக்கு போக காசு இல்ல , எனக்கு காசு வேணும் , அப்டீனு சொன்னான் (நான் அந்த சிறுவனை மேலும் கீழும் பார்த்து விட்டு ,) உன்ன பார்த்தா உண்மை சொல்ற மாதிரியும் தெரியல ? பொய் பேசற மாதிரியும் தெரியல அப்டீனு அவன்கிட்ட சொன்னேன் , அவன் அமைதியாக நின்றான் , பிறகு நான் அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டேன் ,


இது போல சிறு குழைந்தைகளுக்கு நாம் பிச்சை போடுவது நாம் அவர்களை ஆதரிப்பது போல ஆகிவிடுகிறது , போடாமல் போனால் உண்மையிலே
கஷ்டபடு கிறவர்களுக்கு நாம் உதவி செய்யாமல் போவதாக சூழ்நிலை வந்து விடுகிறது , என்ன செயரதுனே புரியல ?

Post a Comment

5 Comments

எல்லோருக்கும் இதே மனநிலை தான் நண்பரே..

என்று மாறுமோ இந்த நிலை
உயிர் வலியை ஏற்படுத்துகிறது நிழற்படம்..
உண்மை வலி மறந்து போகிறது மரத்துப் போகிறது..
இரண்டு ஆஸ்கார் கொடுத்திருக்கிறேன்..
தங்கள் இடுகை சிநதனையைத் தூண்டுவதாக உள்ளது..
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே..
calmmen said…
இவர்களை போன்றவர்கள் இல்லாத நிலைதான் வல்லரசு என்பது எனது எண்ணம்.

உங்களுடைய அன்பு ஆஸ்கார் அவார்டுக்கு மிக்க நன்றி நண்பா?
Anonymous said…
hi friend please see this site tamil001