ஹோட்டல்


நாம் உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் சர்வர் வந்து தண்ணீர் ஊற்றுவார் , பில் கொண்டு வந்து வைத்து விட்டு நிப்பார் , நாம் பணத்தை வைத்தவுடன் அவர் பணத்தை கணக்கில் கட்டிவிட்டு வந்து நிப்பார் , நாமும் நம்முடைய வசதிக்கு ஏற்ற வாறு டிப்ஸ் வைத்து விட்டு வருவோம் , இந்த சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள உணவகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது .ஆனால் எனக்கு இந்த விசயத்தில் கொஞ்சம் கூட உடன் பாடு இல்லை ,
ஏன் என்றால் அவர் நமக்கு வேலை செய்வதற்கு அவரது நிர்வாகம் அவருக்கு ஊதியம் அளிக்கிறது , அது இல்லாமல் யர்ர் இந்த டிப்ஸ் கொடுக்கின்ற பழக்கத்தை கண்டுபிடித்தார்கள் ,இந்த பழக்கம் அதிகமாக போனதால் இப்போது பார்த்தல் அவர்களாக கேட்டு வாங்கிறார்கள் ,
பணக்காரர்கள் கொடுப்பார்கள் பெரிய உணவகத்தில் ஆயிரக்கணக்காக என்று நான் கேள்வி பட்டதுண்டு , ஆனால் நடுத்தர மக்களும் இந்த பழக்கத்தை பழகியதால் சர்வர் எல்லோரும் ஒழுங்காக கவனிப்பதே இல்லை , நாம் சாப்பிட்டு முடியும் நேரத்தில் வந்து தண்ணீர் ஊற்றிவிட்டு பக்கத்தில் நிற்க வேண்டியது , சில்லறை இல்லாமல் பலபேர் வைக்காமல் போனால் முறைத்து பார்ப்பது , கேவலமக பார்ப்பது இவை எல்லாம் தேவை தானா ?

இவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக டேபிள் துடைக்கும் சிறுவனுக்கு உதவி செய்தால் கூட ஒரு அர்த்தம் இருக்கும்.இப்பொழுதெல்லாம் வயதானவர்களை டேபிள் துடைக்க உபயோக படுத்துகிறார்கள் , இவர்களுக்கு நாம் உதவி செய்தால் கூட ஒரு அர்த்தம் இருக்கும்,
இனிமேல் நீங்கள் உணவகம் சென்றால் டேபிள் துடப்பவர்களுக்கு டிப்ஸ் கொடுத்து அவர்களை ஊக்கபடுத்துங்கள் .

(நான் எல்லா சர்வர் களையும் வெறுப்பவன் இல்லை , டிப்ஸ் கேட்டு சாப்பிட வரும் மக்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் )

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் !

Post a Comment

2 Comments

நல்லா சொன்னீங்க. டிப்ஸ் கொடுத்தால்தான் அடுத்தமுறை செல்லும் போது நல்லா கவனிப்பாங்க. இல்லையென்றhல் ஏனோதானோதான். பில் பணம் போக மீதி உள்ள சில்லரையை அவர்களாகவே எடுத்துக் கொள்கிறேhர்கள்.
calmmen said…
ஆமாம் நண்பரே இந்த அனுபவம் பல பேருக்கு உண்டு , இதற்கு விடிவே இல்லையா ?