கந்தசாமி



இப்பொழுது தமிழ் மிகவும் பேசப்படுகின்ற விஷயம் கந்தசாமி படம் , இந்த படத்தை பற்றி விமர்சங்களும் , விமர்சங்களை பற்றி விமர்சங்களும் தான் , ஆனால் என்னால் நேற்று தான் படத்தை பார்க்க முடிந்தது .
கந்தசாமி ஒபெநிங் சீன்லயே சேவல் மாதிரி வருகிறார் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது , கோடி கோடி யாக பணம் வைத்து இருப்பவர்களிடம் இருந்து பணத்தை எடுத்து ஏழைகளிடம் கொடுக்கிறார் கந்தசாமி கடவுள் , இந்த விஷயத்தை போலீசார் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதையும் சுவாரசியமாக சொல்றாங்க ,
விக்ரம் மிக அழகாக வருகிறார் , விக்ரம் நடிப்பு அருமை ,ஸ்ரேயாவும் மிக பந்தாவாக வருகிறார் நல்ல நடிப்பு ,ஆனால் காட்சிகள் ஒன்றோடு ஒண்டு ஒட்டாமல் வருகிறது , இசை அருமை , படத்தில் விறுவிறுப்பு காட்சிகள் குறைவு .

மக்களின் கடவுள் நம்பிகையை பயன்படுத்தி , நவீன யுத்திகளை கையாண்டு , நண்பர்களின் துணையோடு மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் , செயல் , திட்டம் அனைத்தும் அருமை .
கந்தசாமி யோட நண்பனை வில்லன் அடித்தவுடன் , வில்லனை கந்தசாமி அடிப்பார் , அப்போது வருகின்ற வசனம் அருமை ,

கண்ணை கட்டி கொண்டு போடுகின்ற சண்டை காட்சிகள் அருமை .சோழ காட்டில் போடுகின்ற சண்டை காட்சிகள் அருமை .

கிராமத்தை தத்து எடுக்கனும்னு சொல்ற விஷயம் நல்ல யோசனை

படத்தில் குறைகள் என்று நிறைய (எல்லோரும் (என்னையும் சேர்த்துதான் ) சொல்லலாம் ,ஆனால் ஒன்று கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நம் தமிழனின் எண்ணத்திற்கு ஒரு சபாஷ் , வேறு எந்த மொழி படங்களும் இவ்வாறு படம் அதிகமாக வருகிறதா என்று தெரியவில்லை !?

Post a Comment

0 Comments