படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர வேண்டாம்

'24' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
         விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்தது. சமீபத்தில் போலந்து நாட்டுக்கு சென்று பாடல்கள் மற்றும் சில காட்சிகளை படமாக்கிவிட்டு திரும்பினார்கள். அங்கு படமாக்கப்பட்ட போது சில படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது.
சூர்யா ரயில் மீது நின்று கொண்டு சண்டையிடுவது போலவும், மற்றும் ராணுவ உடை அணிந்த வெளிநாட்டவர்களுடன் சூர்யா நின்று கொண்டிருப்பது போலவும் அப்புகைப்படங்கள் அமைந்திருந்தன.
                      இப்படங்களை இணையத்தில் பகிர வேண்டாம் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து படக்குழு, "நண்பர்களே, படப்பிடிப்பு புகைப்படங்களை பகிரவோ அல்லது ஷேர் பண்ணவோ வேண்டாம். ஏனென்றால் படத்தின் கதைக்களம் தெரிந்துவிடும். தயவு செய்து புரிந்து கொண்டு அமைதி காக்கவும். '24' படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறது.

No comments: