வரும் பண்டிகைக் காலங்களில் ரூ.52,000 கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் இருக்கும் என அசோசேம் அமைப்பு கணித் துள்ளது. விற்பனை அளவு கடந்த ஆண்டை விட 40-45 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் அசோ சேம் நடத்திய ஆய்வு கூறுகிறது.
நவராத்திரி தொடங்கி துர்கா பூஜை, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை களின் போது ரூ.52,000 கோடிக்கு ஆன்லைனில் விற்பனையாகும் என்று அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலையில் கூட ஆன்லைன் ஷாப்பிங் பாதிக்காமல் பொருட்கள் விற்பனை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 40 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் இதே பண்டிகை காலத்தில் ரூ.30,000 கோடி விற்பனை நடந்துள்ளது.
இதுகுறித்து அசோசேம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறும்போது, “தற்போது வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், டேப்லட்கள் மற்ற மொபைல் போன்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்பில் உள்ளனர். அதனால் இ-காமர்ஸ் தற்போது மொபைல் காமர்ஸ்-ஆக மாறிவருகிறது. மேலும் ஷாப்பிங் செய்வதற்கு மிக இலகுவாகவும் ஷாப்பிங் செய்ய தூண்டக்கூடிய வகையிலும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.“கடந்த வருடத்தை விட இ-காமர்ஸ் துறையில் லாபம் அதிகரித்து வருகிறது. இதற்கு அனைத்து பிராண்டட் ஆடைகள், ஆபரணங்கள், பரிசுப் பொருட்கள், காலணிகள் ஆகியவை குறைந்த விலையிலும் மற்றும் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்கு வதும்தான் காரணம்” என டி.எஸ்.ராவத் தெரிவித்து உள்ளார்.
தொலைத்தொடர்பு வசதி பெருகி வருவதால் ஆன்லைன் ஷாப்பிங் தற்போது 2-ம்கட்ட நகரங்களிலும் பெருகி வருகிறது.ஸ்நாப்டீல், மிந்த்ரா, பிளிப்கார்ட், அமேசான், ஜபாங் போன்றவை மிக பிரபலமான இ-காமர்ஸ் வலைதளங்கள். இந்த வலைதளங்கள், எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பிரபலமான பிராண்டட் ஆடைகளுக்கும் மிகப் பெரிய அளவில் தள்ளுபடி சலுகைகளையும் விலை குறைப்பு நடவடிக்கைகளையும் செய்து வருகின்றன.
0 Comments