அமெரிக்கா ஐ.நா வாய் உன் கர்வம்

karurkirukkan.blogspot.com

மிக அழகாய் இருக்கிறாய்,
விழி மொழியால் அழைக்கிறாய்,
என்னை காதலிக்க செய்துவிட்ட
கர்வத்தில் முறைக்கிறாய்.

நமக்குள்ளானதோர் இடைவெளி குறைக்க,
நான் நேசக்கரம் நீட்டும்போது,
நீயோ, அறிந்தும் அறியாததாய்
விரைந்தோடிச் செல்கிறாய்.

நமக்கான இடைவெளியும் - எனக்கோர்
நியூட்டனுக்கும், புவியீர்ப்பு விசைக்குமான,
ஆப்பில் அனுபவமாய் - என்றும்
என் உணர்வில் இனிக்கிறது.

மழையோடு நடக்கும் போதும்,
மலை மீது உலவும் போதும்,
விழியோரம் நின்று நீதான் ஏனோ,
என் உணர்வோடு உரசுகிறாய்.

எப்போதோ உன்னோடு நான்,
நின்றபோது நுகர்ந்த வாசம்,
இப்போதும் என் நாசியின் நினைவில்
நீங்காமலே நிலைக்கிறது.

நமக்குள் “காதல்” மேகம் சூழும்போது,
“அமெரிக்கா ஐ.நா” வாய் உன் கர்வம்,
சமரசமும் செய்து வைத்து,
“கனவு” ஆயுத உதவியும் செய்கிறது.

எனவே…

கர்வம் கலைத்து வா!
உன் காதல் அழைத்து வா!
கூடிக்குலவியும், தேடித்துலவியும்,
இந்த வாழ்க்கை ரசிக்கலாம்
பூவுலகை ஜெயிக்கலாம்.

நீ காதல் தேடும்போது
நான் மனதோடு கலந்திருப்பேன்.
நீ ஆண்மை தேடும்போது
உன் இதழோடு இணைந்திருப்பேன்.

விவாகம் என்றெல்லாம் காலவிரயம்
வேண்டாமே!
நமக்குள் எடுப்பதற்கும் கொடுப்பதற்கும்
இவ்வாயுட்காலம் போதாதே!

எழுதியவர் : சக்திகுமார்.கோவை

Post a Comment

0 Comments