இந்நிலையில் தேசிய விடுமுறை முடிவுக்கு வருவதற்கு முதல் நாளான கடந்த 6-ம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் பெய்ஜிங் திரும்ப முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீனாவின் மிக அகலமான, போக்குவரத்து மிகுந்த சாலை களில் ஒன்றாக ‘பெய்ஜிங்- ஹாங்காக்- மக்குவா எக்ஸ்பிரஸ் சாலை’ உள்ளது. சுமார் 50 வழிகள் கொண்ட இந்தச் சாலையில் பெய்ஜிங் நகருக்கு வெளியே புதிதாக சோதனைச் சாவடி திறக் கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிக்கு பிறகு 50 வழிகள் கொண்ட சாலை 20 வழிகள் கொண்டதாக சுருங்குகிறது.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனைச் சாவடி முன் பல மணி நேரம் ஸ்தம்பித்து நின்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பலர் கார்களில் இருந்து இறங்கி சாலையில் உலா வந்து பொழுதை கழித்தனர்.
அக்டோபர் 1 முதல் 7-ம் தேதி வரையிலான 1 வார கால தேசிய விடுமுறையில் 75 கோடிக்கும் மேற்பட்டோர் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேர் இடம்பெயர்வதாக சீனாவின் தேசிய சுற்றுலாத் துறை கணக்கிட்டுள்ளது.
0 Comments