ஆரோக்கியத்திற்கான சில எளிய வழிகள்..

மகிழ்ச்சி, ஆரோக்கியம் இவையே அனைத்து மக்களும் அன்றாடம் எதிர்ப்பார்ப்பவை. ஆனால் இவைகள் அவ்வளவு எளிதான அனைவருக்கும் கிடைத்து விடாது. சிறிது மெனக்கெடலும் இதற்கான நாம் செய்தாகத் தான் வேண்டும்.

உங்களை நீங்கள் சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள சில எளிய வழிகள்..

•வேலைக்காகவே இல்லை வேறு எதாவது பணிக்காகவே உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியே செல்லும் போது, உங்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை எடுத்துச் செல்வது சிறந்தது. இது பசியான நேரத்தில் உங்களுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை தரும்.

• உங்களது செரிமான அமைப்பை சரியாக வைத்துக்கொள்ள, வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. ஆனால் கட்டாயமாக அதில் சர்க்கரை சேர்த்தல் கூடாது.

•நிம்மதியாக உறங்க, படுக்கையறைக்கு செல்லும் போது உங்களது மொபைல் போனை உங்களை விட்டு தள்ளி வைத்தல் சிறந்தது. இதனால் ஆழ்ந்த உரக்கத்திற்கு நீங்கள் விரைவாகவும், சமூக வலைத்தளங்களில் நீங்கள் நேரத்தை வீணடிப்பதையும் தவிர்க்கலாம்.

• படுக்கையறையில் இருந்து உங்களது மொபைல் போனை தள்ளிவைப்பதால் உங்களுக்கு இன்னுமொரு நன்மையும் உண்டு. எப்படியும் நீங்கள் காலையில் எழுவதற்கு அலாரம் வைத்து இருப்பீர்கள். அலாரம் அடிக்கும் போது, அதனை அணைப்பதற்காக நீங்கள் கட்டாயம் எழுந்தாக வேண்டும். இதன் மூலம் அன்றைய நாளின், சோர்வு அப்போதே ஓடிப்போகும்.

• உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள நீங்கள் தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் அருந்துதல் சிறந்தது. இதற்காக நீங்கள் உங்களுக்கென்று தனியான வோட்டர் கேனையும் பயன்படுத்துதல் சிறந்தது.

• உங்களது மன அழுத்தத்தை தவிர்க்கவும், மனநிலையை மேம்படுத்தவும் ஆரஞ்சு பழ வாசனையை நுகர்தல் சிறந்தது. உங்கள் அலுவலக நேரங்களில், தூக்கம் வருவது போல உங்களுக்கு தோன்றுமாயின், ஆரஞ்சு பழ வாசத்தை நுகர்ந்தால் உங்களுக்கு மனதும், உடலும் புத்துணர்ச்சி பெறும்.

source.p.t.m

No comments: