உலகிலேயே அதிக சம்பளம்

'ஹங்கர் கேம்ஸ்' நட்சத்திரமான நடிகை ஜெனிபர் லாரன்ஸ் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு 52 மில்லியன் டாலர்கள் தொகை வருவாய் ஈட்டியுள்ளார். ஆனாலும் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரைக் காட்டிலும் பின் தங்கியே உள்ளார் ஜெனிபர் லாரன்ஸ்.

'சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்' -ல் இவரது ரோலுக்காக 2013-ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார் ஜெனிபர் லாரன்ஸ். மேலும், இவரது ஒட்டுமொத்த வருவாய் கூட 'அயர்ன் மேன்' நட்சத்திர நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியரின் 80 மில்லியன் டாலர்கள் வருவாய்க்கு அருகில் இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கான ஆகஸ்ட் மாத போர்ப்ஸ் பட்டியலில் ராபர்ட் டவ்னி ஜூனிய முதலிடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் 35.5 மில்லியன் டாலர்கள் வருவாயுடன் 2-ம் இடத்திலும், 'மைக் அண்ட் மோலி' நட்சத்திரம் மெலிஸா மெகார்தி 23 மில்லியன் டாலர்கள் வருவாயுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.

நடிகர்களில் 80 மில்லியன் டாலர்கள் வருவாயுடன் அயர்ன் மேன் நட்சத்திர நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர் 80 மில்லியன் டாலர்கள் வருவாயுடன் முதலிடம் பிடிக்க 50 மில்லியன் டாலர்களுடன் ஜாக்கி சான் 2-ம் இடத்திலும் உள்ளனர்.

பாலிவுட் நட்சத்திர நடிகர்களான அமிதாப், சல்மான் கான் ஆகியோர் 33.5 மில்லியன் டாலர்களுடன் 7-ம் இடத்திலும், அக்‌ஷய் குமார் 32.5 மில்லியன் டாலர்களுடன் 8-ம் இடத்திலும் உள்ளனர்.

No comments: