7 ஐஐடி-க்கள் இணைந்து நடந்தும் 24 சான்றிதழ் படிப்புகள்: ஆன்லைனில்

சென்னை ஐஐடி உள்பட 7 பழம்பெரும் ஐஐடி-க்கள் இணைந்து நடந்தும் 24 விதமான சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் ஆன்லைனில் படிக்கலாம்.
மும்பை, டெல்லி, கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள 7 பழம்பெரும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கல்வி திட்டம் (என்.பி.டி.இ.எல்.) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

                   இந்த திட்டத்தின்கீழ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோஸ்பேஸ், எலெக்ட்ரிக்கல், மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங், நிர்வாகவியல் தொடர்பான 24 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படிப்புகள் ஜூலை 1-ந் தேதி தொடங்குகின்றன. இதற்கான தேர்வுகள் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் நடைபெறும். சான்றிதழ் படிப்புகளின் விவரங்களை www.onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனிலேயே படிப்புகளுக்கு பதிவுசெய்துகொள்ளலாம்.
இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளில் சேர பதிவு இலவசம். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை தேர்வுசெய்து படித்துப் பயன்பெறலாம். தேர்ச்சி பெறுவோருக்கு என்பிடிஇஎல் மற்றும் ஐஐடி இணைந்து சான்றிதழ் வழங்கும் என்று சென்னை ஐஐடி ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஆன்ட்ரு தங்கராஜ், பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments